ஓலா....
டக்கு டக்குனு சென்னை போகனும்னு ப்ளான்.
வியாழக்கிழமை இரவு கிளம்புறோம்.
வெள்ளிக்கிழமை ஒரே நாள் வேலை.
முடிக்கிறோம்..
சனிக்கிழமை மதியமே சென்னையிலிருந்து கிளம்பிரனும்.
எந்த ட்ரெயின்லயும் இடம் இல்லை.
பஸ் தான்.
ஒரே டரியல் தான்...
மதுரையில இருந்து நேரா அம்பத்தூர் போற பஸ் . புக் பண்ணியாச்சு.
9.15 க்கு பஸ்.
9 மணிக்கெல்லாம் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் போயாச்சு.
நம்ம வந்துட்டோம்னு கண்டெக்டர்ட்ட ஒரு அட்டெண்டன்ஸ் கொடுத்துருவோம்.
அண்ணே ! சீட் நம்பர் 13
பழனிக்குமாரா .
ஆமாண்ணே
அப்பர் பர்த்தா..
ஆமாண்ணே
சாப்பிடுருங்க சார்...வண்டி நான் ஸ்டாப்...
இதக் கேட்டதும் பக்கத்துல இருந்த ஒரு மாமாவும் (மாமியும் )நான்ஸ்டாப்பா...அப்ப டின்னர் னு கேட்டாரு.
(யோவ்...மாமா...இதென்ன பிளைட்டா....டின்னருலாம் கொடுத்து கூப்பிடுப் போறதுக்கு....)
சாப்பிட்டுருங்க சார்...
மாமா மாமிட்ட ஏதோ சொல்லிட்டு வேகமா ஓடுனாரு...
அனேகமா பார்சல் வாங்கப் போறாரு போல...
மணி 9.10...
நான் சீட்டுல போயி ஐக்கியமாயிட்டேன்.
இப்ப பஸ்ஸோட அமைப்பை விளக்கிறேன்.
டிரைவருக்கு எதிர் பக்கத்துல சிங்கிள் படுக்கை வசதி. லோயர் அப்பர்.
டிரைவருக்கு பின்னாடி வரிசையில மேலே முழுக்க டபுள் படுக்கை.\ கீழே இரண்டு பேர் அமரும் இருக்கை வசதி.
நான் அப்பர் பெர்த் சைட் சிங்கிள்
சாஞ்சு உக்காந்து கால விரிச்சு கொஞ்சன்டு தெரியுற மங்குன லைட் வெளிச்சத்துல புத்தகத்தை விரிச்சு....படிக்கல...பராக்கு பாக்குறேன்...நான் பெரிய வாசிப்பாளர் அப்பாடக்கருனு இப்படி தருணத்துல சொன்னாத்தான் உண்டு.
பார்சல் வாங்கப்போன மாமா மாமிய கூப்பிட்டு பஸ்ஸுக்குள வந்தார். எனக்குப் பின்னாடி ஏதோ ஒரு சீட்டு...
ஏந்நா....இங்கேயே உக்காருரேலா....( இது மாமி)
யார கேக்குறீங்க...னு மைண்ட் வாய்ஸ் ல நானு...
மாமாவும் பக்கத்துல லேண்ட் ஆயிட்டார்.
மணி 9.15...
வண்டி எங்கயும் நிக்காது. நான் ஸ்டாப் ...சாப்பிடுறவங்க சாப்பிட்டுக்கோங்க னு ஒரு பையன் கத்துனான்....
டேய் ரொம்ப பில்டப் கொடுக்கிறீங்க டா....
இப்ப ஒரு நாலு பெண்கள் 50 வயதுக்கும் மேல...அப்புறம் ஒரு குண்டு பையன் வயது பத்து பதினைஞ்சு இருக்கும். இவங்களோட ஒரு ஆளு. எல்லாரும் இருக்கை.
கனக்கச்சிதமா எனக்கு பக்கவாட்டு இருக்கையில் உக்காருராங்க....
தெலுங்கில் பேசிக்கிறாங்க....
என்ன பேசுறாங்கைனு தெரியல....
அந்த ஆளு இக்கட கூச்சுண்டி...அக்கட......ஏம்மி இப்படி தெலுங்கு படத்து ல வர்ற விக்கிரமன் குடும்பத்தலைவன் மாதிரி ஏதோ சொன்னான்.
எல்லா சொர்ணாக்காவும் எதுவும் கேக்கல....
தாம்பரம் எப்ப போகும் னு எங்கிட்ட கேக்குறாரு...
தெரியல..
அங்க இருந்தே கண்டெக்டர் ட்ட கேக்குறாரு...
4.30 சார்...
அதே நாலரைய , இப்ப சார் , தெலுங்குல ஏதோ சொல்றார்...
அப்புறம் தான் தெரியுது...சார் வழியனுப்ப வந்தவர்..சொர்ணாக்காக எல்லாம் சென்னை போறாங்கனு...
4.30 னா எப்படி எந்திரிக்குறது...
தூங்காம இருங்க னு சார் இறங்கிட்டாரு...
பஸ்ஸ எடுக்குறாங்க.....
பஸ்ஸ நகர ஆரம்பிக்குது...
மாட்டுத்தாவணிய விட்டு வெளிய வருது.
எனக்கு எதிரே இருந்த ஒரு காலேஜ் மாணவனும் மாணவியும் டபுள் படுக்கை அவங்க ஸ்கிரீன க்ளோஸ் பண்ணிக்கிட்டாங்க....
டரியல் தான்....
ங்கொய்யாலே...நான்லாம் காலேஜ் படிக்கிறப்ப படுக்கை வசதி கொண்ட பஸ்ஸுலாம் இல்லை... அப்படியே இருந்துட்டாஆஆஆஆஆஆஆஆலும் னு பெரு மூச்சு விட்டுட்டு அடுத்த சீன்னுக்கு வருவோம்.
தெலுங்கு குரூப் பேச ஆரம்பிக்குது....ஆரம்பிக்குது.....மீன் மார்க்கெட் மாதிரி....ஒரே சத்தம்...
அந்த குண்டு பையன் வேற மொபைல் போன்ல பவன் கல்யாண் மாஸ் சீன் பாக்குறான்...
ஏழுகொண்டலவாடா....தூக்கம் போயேண்டி.....
நாலர வரைக்கும் எனக்கு ஏழரை தானா...
மெதுவா தக்காளி சட்ணிய ஓபன் பண்ணுறானுக வாசம் வருது......அனேகமா மாமாவா இருக்குமானு யோசிச்சு முடிக்கல....
நேக்கு ரெண்டு இட்லி போதும்டி....நீ எடுத்துக்க்கோ...மாமா மாமிக்கு ஊட்டி விடுறாரு போல...
லைட்டு போட் ருக்கப்பவே இவைங்க இவ்ளோ அட்டகாசம் பண்றாங்கைளே...லைட்ட ஆப் பண்ணிட்டாங்கைனா னு யோசிச்சு முடிக்கல...ஆப் பண்ணிட்டானுக லைட்ட...
நாமும் ஸ்கிரின க்ளோஸ் பண்ணுவோம்னு...ப்ண்ணேன்...
வண்டி வேகமா போகுது....ஜன்னல் கண்ணாடி திறக்குறேன்...
வானம்....
நிலா வெளிச்சம்...
மங்கலா தெரியுற நட்சத்திரம்....
ஐயயோ....இவன் கவிதை எழுதப்போறான்டானு டரியல் ஆகாதீங்க...
இதுலாம் பாத்தாலும் தெலுங்குச் சத்தம் கேக்குது....
யோவ்..பாரதி சுந்தரத் தெலுங்குனாயா சொன்ன....
சொர்ணாக்கவோட தண்ணி எடுக்குறப்ப சண்டை போட்டுட்டு அப்புறமா இந்த பஸ்ல வா...அப்புறம்எழுதிருக்கனும் மிஸ்டர் பாரதி...
நம்ம பையன் இப்ப ராம் தேஜா படத்தோட வசனத்த சத்தமா கேக்குறான்.
காத்தே வரல...வெறும் சத்தம் தான் வருது...
என்னடானா பாத்தா இவைங்க மேலூர் க்குள நின்னுக்கிட்டு மெட் ராஸ் மெட் ராஸ் னு கத்துறானுக...
அட நான்சென்ஸ்களா..இதான் உங்க நான் ஸ்டாப்பா....
அடுத்து கொட்டாம் பட்டி
அடுத்து துவரங்குறிச்சி
வண்டி நிக்குது
தெலுங்கு மக்கள் சுந்தரத் தெலுங்கோட பேசுறாங்கை...
கொஞ்சம் கொஞ்சமா தூங்கிட்டேன்.
கண் முழிச்சு பார்த்தா சென்னை. அம்பத்தூர்.
நேரா நண்பன் வீடு.
என்னடா ப்ளான்.
அம்பத்தூரிலிருந்து அம்பத்தூர் எஸ்டேட் அங்க ஒரு நண்பர பாக்கனும் 1.30 க்கு.
அங்க இருந்து கிளம்பி வேளச்சேரி ல மூணு மணிக்கு இருக்கனும்.
நண்பன்ட்ட சொன்னேன்...
நண்பன் இப்படி ஆரம்பிச்சான்
அம்பத்தூர் பஸ்ஸ்டாண்ட் போ..
அங்க இருந்து லெப்ட் ல போற பஸ் புல்லா எஸ்டேட் போகும். பாடி திருமங்கலம் அண்ணா நகர் னு கோயம்பேடு வரைக்கும் வழி சொல்றான்.
நான் போறது அடுத்த ஸ்டாப் _ எஸ்டேட்
நண்பன் மனைவி எஸ்டேட் ல இருந்து வேளச்சேரி க்கு வழி சொல்றாங்க...ட்ரெய்ன் , நேரா சென் ட்ரல் அப்புறம் அங்க இருந்து வேற ட்ரெயின். இறங்கி சிக்னல் கடந்து ஒரு ரைட்டு கொஞ்ச தூரம் நடந்தாஆஆஆனு இழுத்தாங்க....
நான் உடனே அங்க ...
மதுரையா ....னு கேட்டேன்...
டேய் உன்ட ஓலா இருக்கா.... நண்பன் கேட்டான்
ஓலா னா..
கால் டாக்ஸி டா...
ஓ...ஓலாவா....இல்லையே....
ஓலா ஆப் (app) இல்லையா ...
இல்லடா.....
ஓலா (OLA) மதுரையில முழுக்க தோல்வியடைந்த ஒரு கால்டாக்ஸி. மதுரைக்குள மட்டுந்தான் ஓட்டுவாங்கைளாம்...அவுட்டர் ஓட்ட மாட்டானுகளாம்....பெரிய அப்பாடக்கர் இவிங்க...சத்திரப்பட்டி அவுட்டராம். அழகர் கோயில் அவுட்டராம்...ஏண்டா நொன்னைகளா...மதுரையே அவ்வளவுதான்...அதுக்குள்ள எவன்டா டாக்ஸில போவான்..னு அவைங்க நொடிச்சு போயிட்டானுக...
ஆனால் சென்னைல சக்ஸஸ் போல..
நண்பன் சொன்னான் ஓலா ல ஆட்டோ கூட இருக்கு...அதுல புக் பண்ணிட்டேன். வந்திரும்.
மணி 1 pm.
ஓலால ஆட்டோவுலாம் இருக்காஆஆஆ னு ஆஆஆஆஆனு வாய் பொளந்துக்கிட்டே ஆட்டோல ஏறுனேன்.
சார் மீட்டருக்கு மேல இருபது ரூபா...
சரிண்ணே...
எங்க சார் போகனும்...
டெக்னோ பார்க்...
எங்க இருக்கு சார்...
எங்க இருக்கா...னு திரும்பி பாக்குறதுக்குள்ள நண்பன் வீட்டு தெருவிலிருந்து வெளிய வந்துட்டோம்.
சரி யார பாக்கப்போறோமோ அவங்கட்டயே கேப்போம்...
போன்ல கூப்பிடுறேன்....
ஹலோ...
சொல்லுடா கிளம்பிட்டியா...
கிளம்பிட்டேன்...ஆபிஸ் எங்க இருக்கு...
டெக்னோ பார்க்...
அத தான் சொன்னேன்...டிரைவருக்கு தெரியலயாம்
டெக்னோ பார்க் தெரியாதா....
தெரியாதாம்...
எஸ்டேட் னு சொல்லு...
அண்ணே எஸ்டேடாம்ணே....
அதான் ஸார் எஸ்டேட்ல எங்க....
டேய்...எஸ்டேட்ல எங்கனு கேக்குறாரு...
ஏய்..டெக்னோ பார்க்க் தெரியாதா....
அடடடடடடடடடாஆஆஆஆ...தெரியாதாம்டா...
வழி சொல்றாரு....அதை நான் வழிமொழிஞ்சேன்..
ஒரு வழியா வந்தாச்சு...100 ஓவா...
அந்த நண்பனோட ஒரு காப்பி...கொஞ்சம் புறணி...
அடுத்து எங்க போறீங்க பழனி....
வேளச்சேரி போகனும்...
எப்படி போறீங்க பழனி...
தெரியல நண்பன்ட்ட சொல்லி ஏதாவது டாக்ஸி புக் பண்ணனும்...
ஏன் உங்கட்ட ஓலா இல்லையா...
(அதே கேள்வி....)
இல்லங்க....
ஓலாஆஆஆ....இல்லையா....
இல்லங்கககககக...(கொஞ்சமா பல்ல கடிச்சுக்கிட்டேன்...)
சரி விடுங்க வேளச்சேரி தூரம்...பாடி போயி..அண்ணாநகர் போயி....டிஎல் எப் போயி.....(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....உயிர் போயி.....) மேப்ப போடுறாங்க...
புக் பண்ணிருங்க....
அவங்க புக் பண்றாங்க....
கால் டாக்ஸி வந்தது. ஓலா...
உள்ள ஏறி உக்காந்துட்டு நண்பருக்கு டாட்டா காமிச்சேன்....
டிரைவர் கேட்டாரு...எங்க சார் போற...
பீனிக்ஸ் மால் வேளச்சேரி...
எப்படி சார் போறது....( எங்கிட்ட கேக்குறான்...)
சபாஷ்....ஒரு நிமிஷம் இருங்க னு டாட்டா காமிச்சு போன நண்பர கூப்பிட்டு வாயா....வந்து ரூட்ட சொல்லு .. டிரைவருக்குத் தெரியாதாம்...
திரும்பி அதே மேப்ப வாயாலயே போட்டானுக...பாடி....டி எல் எப் ..பாலத்துக்கு அடில...லெப்ட்...அப்புறம் ரைட்டு....எனக்கும் ஒண்ணும் புரியல...
டாக்ஸி கிளம்புது...
சார் உன்ட மேப் இருக்கா சார்...
இல்ல
இல்லையா...
(இதுக்கு ஏன்யா ஷாக் ஆகுற...)
இல்லங்க....
மேப்ப போட்டு பாத்துட்டே வா சார்...
ம்கும்...நம்ம நெட் ட பத்தி நமக்குத்தான் தெரியும்.... நாளைக்கு மேட்ச்சுக்கு இன்னிக்கே ஸ்கோர் னு சுத்த விடனும். அப்பத்தான் மேன் ஆப் த மேட்ச் யாருனு நாளை கழிச்சு தெரியும்.
தம்பி போறான்...(டிரைவர்)
போருர் சிக்னல் காமிக்குறான்.
டி எல் எப் காமிக்குறான்.
டிரேட் சென்ட்டர் காமிக்குறான்...
எந்த ஊர் சார்...
மதுர..
யார் சார் வருவா தேர்தல்லுல...
மதுரலையா...மொத்தமாவா...
மதுரலைய சார்...
நான் திமுக னு சொல்லி அவன் அதிமுகவா இருந்தா
இல்லாட்டி அதிமுகனு சொல்லி திமுகவா இருந்தா...
தெரியல தம்பி.. இது உங்க சொந்த காரா...
(நம்ம பேச்ச மாத்துறோமாம்...)
வாடகை சார்..ஓனர் வண்டி...
ஒரு நாளைக்கு பதினைஞ்சு ட்ரிப் எடுக்கனும் சார். இது லன்ச் டைம் . அதான் அம்பத்தூர் ல இருந்து வேளச்சேரி எடுத்தேன்..தூரம் சார். பீக் டைம்மா இருந்தா வண்டி பஞ்சர் னு கழ்ட்டி விட்டிருப்பேன்....
அவனவன் உழைப்பு அவனவன் காசு ....
சொந்த ஊர் எது தம்பி
சிவகாசி சார்
பிரிண்ட் தொழில் செஞ்சேன்...
ஒத்து வரல...
நாலு வருசமாச்சு...
வந்துட்டேன்...
இதான் சார்..
வேளச்சேரி பீனிக்ஸ் மால்...
அடுத்தவன் கதை கேக்குறப்ப மட்டும் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆறது வியாதியா னு தெரியல
வரச்சொன்னவனுக்கு போன் பண்றென்...
நம்பர் நாட் ரீச்சபிள்...
பலே..வெள்ளையத்தேவா....டரியல் தான்...
ப்யபுள்ள வரச்சொல்லிட்டு நாட் ரீச்சபிள் ஆயிருச்சேனு பேஸ்புக் போனா அய்யா அதுல ஆன்லைன்...
பேஸ்புக் ல மெசேஜ் பண்றேன்.
என்ட் ரில நில்லு...போன் பேசமுடியாது ரிப்பேர். மெசேஜ் அனுப்பு னு மெசேஜ்...
பீனிக்ஸ் மாலுக்குள போறேன்...இதான் முதல் தடவை.....
க்யூ கட்டி நடக்க விட்டானுக....அங்கிட்டு இங்கிட்டு னு மக்கள் சிதறி சிதறி போறாங்க...
ஒரு செக்யூரிட்டி செடிக்கு தண்ணி ஊத்திட்டு இருந்தாரு....
எது என்ட்ரென்ஸ்
ஏற இறங்க பார்த்தான்...ஊர் நாட்டானு முகத்துலயே ஒட்டிருக்கு போல...
மூணு இருக்கு சார்..
அந்தா அப்படி....இந்தா இப்படி...அப்புறம் அந்தா அங்க பாரு...அங்க....
இதுல எந்த என்ட்ரன்ஸ் சார்....
தெரியலண்ணே...இனி தான் கேக்கனும்
மெசேஜ் அனுப்புறேன்...
பயபுள்ள பாக்கல...
ஒவ்வொரு காரா வருது...டோல் கேட் மாதிரி செக் பண்றானுக...
முன்ன...பின்ன...அடில.... பக்கா செக்கப்...
வெடிகுண்டு கொண்டு வந்திரக்கூடாதுல.....
ஏன் நடந்து வரவன் கொண்டு வரக்கூடாதா...னு யோசிச்சேன்...அதுசரி நம்ம என்ன வெடிகுண்டு வைக்கிரவனுக்கு ஐடியா கொடுக்கவா வந்தோம்...
பயபுள்ள மெசெஜ் அனுப்பிருக்கானு பார்த்தா
அது இன்னும் பாக்கல...
சரி காருல தான் வருவான்..இங்கயே புடிச்சிரலாம்னு பாக்குறேன்...
வெள்ளை வெள்ளை கலரா சேட் பொண்ணுகளும் பசங்களும் வர்றானுக...நம்மாள காணாம்....
தேடுறேன்....
ஒரு செக்யூரிட்டி வர்றான் என்னைய பாக்குறான்...போறான்...
நான் ஒவ்வொரு காரா பாக்குறென்.
காலேஜ் படிக்குறப்ப கூட ரோஸி க்காக இப்படி நிக்கல....(ரோஸி யாருனு கேக்காதீங்க மக்கழே....)
ஒரு காதல் ஜோடி வருது...
அங்க இருக்கிற திண்டுல உக்காருது....பாப்கார்ன் சாப்பிடுறானுக....ஒரு கையில கோக் கேன்....
அந்தப் பொண்ணு பாப்கார்ன இவனுக்கு ஊட்டுது...
இவன் கோக் டின்ன அந்தப் பொண்ணு உதட்டுல வச்சு அவள குடிக்க வைக்கி
றான்....
ஏன்டா நொன்னைகளா...ஏன் அவனவன் அவங்கவுங்கத திண்ண மாட்டீங்களோ...
தனியா வர்றவனுக்கு எதிரான வன்மம் தான இதுலாம்...
ஒரு செக்யூரிட்டி வந்தார்...என்னைய பாக்குறாரு...போறாரு...
யோவ்....ஆந்திராக்குள செம்மரம் வெட்ட வந்தவன் மாத்ரியே என்னைய பாரு ..இங்க இவனுகள. பாரு....பாப்கார்னும் கோக்கும் கொலாப்ரேஷன் ஆகிட்டு இருக்கு.....அத நிறுத்துவானா.......என்னைய முறைக்குறான்....
அது சரி ...நம்மாளு வர்றானா னு பாப்போம்...
ஒரு மெசேஜ்...
நான் உன்ன பார்த்துட்டேன்....நீ தியேட்டருக்கு வந்திரு....
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...........
ஸ்லீப்பர் செல்லா மாத்திட்டானுக...
தியேட்டர் எங்கயா இருக்கு.....2nd floor...
அடேயப்பாஆஆஆஆ....மாலா இது.....அண்ணா பஸ் ஸ்டாண்டுல ஆரம்பிச்ச மாலுக்கு தியேட்டர் கோரிபாளையத்துல இருக்கு....உள்ளேயே நடந்தா சுகர் குறைஞ்சிரும் போல....வாக்கிங்க் போறவைங்க உள்ள போங்கயா...ஏசிக்கு ஏசியாச்சு நடைக்கு நடையும் ஆச்சு...
ஒரு வழியா நண்பன பாத்தாச்சு...படத்துக்குப் போறான்..அவன் சொந்தக்காரங்களோட...கை கூட குலுக்கல...
அடுத்து அம்பத்தூர் நண்பனுக்கு போன் பண்ணிட்டு இறங்குறேன்.
எப்படா வர்ற...
ஈவினிங்க் ஒரு இலக்கிய கூட்டம் இருக்கு ஆழ்வார் பேட்டை....அங்க போறேன்...எனக்கு ஆழ்வார் பேட்டைக்கு ரூட் சொல்றியா...
இரு ஓலா ல புக் பண்றேன்....
இங்கயும் ஓலாவா...
நம்ம டவுண்லோடு பண்ணா என்ன....ம்கும்..இப்ப டவுன்லோட் பண்ணாத்தான் மதுரை போன பின்னாடி டாக்ஸி வேணுமானு காமிக்கும்...
ஒரு ஆட்டோ வந்து நிண்றது...
எங்க சார் போகனும்...
டிடிகே சாலை...
அங்க எங்க சார்...
கவிக்கோ மன்றம்....
அது எங்க சார்...
சுத்தம்....அண்ணே செட்டியார் ஹாலாம்...சி ஐ டி காலணியாம்...
அப்டி சொல்லு சார்.....
உன்ட்ட மேப் இருக்கா சார்....
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....இல்லையேண்ணே....
சரி விடு சார் நான் கூப்பிட்டு போறேன்....
டமாருனு சத்தம்....
ஒரு சிக்னல்...டயர் பஞ்சர்...
வந்ததுக்கு மட்டும் க்ளோஸ் ப்ண்ணேன்...
இலக்கிய கூட்டத்துக்கு வர்றேனு சொன்ன ஒரு நண்பர் கூப்பிட்டார்.
எங்க இருக்க பழனி....
தெரியலையே...
தெரியலையா...
அட இருங்க...
பக்கத்துல இருந்தவர்ட்ட இது எந்த ஏரியா...
தந்தனம்...(பக்கத்துல பஸ் சவுண்டு...)
தந்தனமாம்.....
எங்க.....
நான் பக்கத்துல இருக்கிறவர்ட்ட சார் தந்தனம் தான....(அவன் ஏற இறங்க பார்த்தான்...நான் என்னமோ தந்தன்..தந்தன...னு பாட்டு பாடுற மாதிரி தெரிஞ்சேன் போல...)
சார் இது..நந்தனம் சார்......
ஓ....பாஸ் நந்தனம்மாம்....
ஓகே வந்திருங்க..னு கட் பண்ணிட்டார்.
பக்கமா தூரமா...ஒரு எளவும் தெரியல...
ஒரு ஆட்டோ பிடிச்சு கரெக்டா அஞ்சு மணி னு போட்ட இலக்கியகூட்டத்துக்கு அஞ்சு மணிக்குலாம் போயிட்டேன்.
எவனாவது அஞ்சு மணி இலக்கிய கூட்டம்னா அஞ்சு மணிக்குலாம் போவானா...
ஆஆஆஆஆஆஆஆ னு ஒவ்வொருத்தனா பாத்துட்டு நின்டேன்..
ஆழ்வார் பேட்டைல இருந்து அம்பத்தூர் எப்படி போறது..7.30 க்கு கிளம்புவோம்...
இலக்கியகூட்டமுனு இவனுக ஈழம் பிஜேபி மதவாதம் மாட்டுக்கறி அணு உலை னு பேசிட்டு இருப்பானுக...நம்ம பொழப்ப பாக்கனும்..
கூட்டத்துல முக்காவாசி பேரு எழுத்தாளைங்க....
சிலர் புத்தகம் போட்ட எழுத்தாளைங்க..
சிலர் புத்தகம் போடாத எழுத்தாளைங்க...
எல்லாரும் எழுதுறாங்கை......ஆனா ரொம்ப பேசுறானுக...
ஒரு புத்தகம் போட்டு பத்து புத்தகத்துக்கு பேசுவானுக
இன்னிக்கு பத்து புத்தகம் ரிலீஸ்...கேக்கவா வேனும்..பத்து பேர் பேசுவானுக.......
பேச்சாளன் கூட கம்மியா பேசுவான்.
இந்த எழுத்தாளனுக இருக்கானுகளே....அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆ...முடியலடா சாமி...
பெரியாரு ன்றானுக...சே குவேரா ன்றானுக.....பெட் ரோல் விலைய மட்டும் குறைக்க மாட்டேனுறானுக....
என்னிக்காவது ஒரு நாளு சே குவேரா இறங்கி வந்து...நீங்க என்னடா நான் சொல்லாததுலாம் சொல்லிட்டு இருக்கீங்கனு சுருட்டால சூடு வைக்கப்போறாரு....
சரி வாங்க கதைக்கு..
மணி ஏழாச்சு...
பக்கத்துல இருக்கிற ஒரு நண்பர்ட்ட இங்க இருந்து அம்பத்தூருக்கு எப்படி போறதுங்க....
உன்ட்ட ஓலா இருக்கா...
ஓலாவா....
ஆமா ஓலா...
இல்லங்க....
என்னது ஓலா இல்லையா...
என்னடா இது...சென்னைல ஆதார் கார்டு மாத்ரி ஓலா வச்சுக்கனும் னு ரூல் போட்டானுகளா....
வர்றவனுலாம் ஓல்லா இல்லையா ஓலா இல்லையானு கேக்குறான்.....
ஓலா ல நண்பர் புக் பண்றாரு...
டாக்ஸி வருது.
இந்த தடவ சொல்லிட்டேன்...அண்ணே மேப்புலாம் இல்லை...நீயே பாத்து போ...
அண்ணேன்ட பேச்சு கொடுத்தேன்...
அவர் சொந்த ஊர் சிவகாசியாம்.
அட நம்ம ஊர் பக்கம்....
வந்து பத்து வருசம் ஆச்சாம்
பிரிண்ட் தொழில் செஞ்சாராம...
என்னயா எல்லாப் பயலும் இங்க வந்துட்டா அந்தத் தொழில யாரு பாப்பா...னு பாண்டவர்பூமி ராஜ்கிரணாயிட்டேன்...
இங்க ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறாராம்.
பத்தலையாம்.
செலவாகுதாம...
என்ன செலவுண்ணே ஐம்பதாயிரத்துக்கு ஒரு அர்த்த சாஸ்திர கேள்வி கேட்டதும் அண்ணே பொங்குனாரோ இல்லையோ...பாடி சிக்னல் கிட்ட வண்டியோட ரேடியேட்டர் பொங்கி ஒரே புகை.....
பக்கத்து வண்டிலாம் தெறிச்சு ஓடுது...
பென்னட் திறந்தா ஒரே புகை...
நான் நகர்றதா...நிக்குறதா...
என்னண்ணே ஆச்சு.....
கூலண்ட் ஆயில் சார்...நேத்துதான் ஊத்துனேன்... போச்சு...
தண்ணிய ஊத்துறாரு...
போலிஸ் வருது...
நான் போலிஸ சமாளிச்சேன்....
புகைய அமுக்கி.....வண்டிய நகட்டுனோம்....
கொஞ்சம் கொஞ்சமா நகர்த்தி அம்பத்தூர் போயிரலாம் சார்....
சரி போங்க....
பத்து மணிக்கு வீட்டுக்கு வந்தேன்.....
\நாளைக்கு என்னடா ப்ளான்...
சான்தோம் போயிட்டு மதியம் ஒரு மணிக்கு கோயம்பேடு....
ஓலா புக் பண்ணிரவா......
ஓல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆஆஆஆஆஆ.......

கருத்துகள்
கருத்துரையிடுக