இடுகைகள்

பிப்ரவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூம்பூம் வெய்யில்....

படம்
எந்த அன்பும் அற்ற வெயில்  கீற்றுகளாய் இறங்குமொரு வன்பொழுது... வியர்வை ஈர உள்ளங்கைகளில் சமிக்ஞை காட்டும் போலீஸ்கார விரல் நுனியில் ஸ்தம்பித்து நிற்கும் நிஜத்தின் நிரல்கள்... பசியின் ஓலம் மறைக்கும் காரின்கண்ணாடி தொட்டு கை தட்டும் திருநங்கையின் முகத்தில் பச்சாத்தாப வெயிலின் கழிவிரக்கம்.. புறக்கணிப்புகளின் வெயில் மீது புன்னகை நிழல்கள் சிந்தும் அந்த இருபால்காரியின் பாதம் வீழும்  வெயில் நேரத்தில்தான் அழுத குழந்தையின் கவனம் பருகும் ஒரு பூம்பூம் மாடும்.... இப்பொழுதும் கூட வெயில் ஏதாவதொன்றை விழுங்கவே விழுகிறது... ஒரு காமப்பிசாசைப் போல..

கழுவி ஊத்துறாஙைக...

எவ்வளவு நாளைக்குத்தான் கவிதை மாதிரி எதையாவது எழுதி காலத்த ஓட்ட முடியும்.  பேஸ்புக்ல ஆக்டிவா இருக்குறதே ஒரு பெரிய கலை ஆயிருச்சு. வர்ற லைக்குலாம் குறைஞ்சுட்டே வருது... நம்ம மோடி பண்றதுலாம் பார்த்தா இத்தனை லைக் விழுந்தா உங்களுக்கு புது இரண்டாயிரம் ரூபா நோட்டு வீட்டுக்கே வரும் னு சொல்லுவார் போல... எதையாவது எழுதனும். என்னத்த எழுதுறதுனே தெரியல... ஒரு நாள் எப்படி ஆரம்பிக்கிறது னு எழுதலாம். அந்த நாள எப்படி எதிர்நோக்குறதுனு எழுதலாம். அந்த நாளுக்காக நாம் எப்படிலாம் நம்மளை தயார் செய்துகொள்ளலாம் னு எழுதலாம். இப்படிலாம் மோட்டிவேட் ஆர்ட்டிகிள் எழுத நிறைய பேர் இருக்காங்க..எனக்கு ஒர் நாள் எப்படி ஆரம்பிக்குதுனு என் பார்வைல எழுதனும். இப்பலாம் உடல் எடை கூடிட்டே போகுதேனுதான் படுக்குறென் எந்திரிக்கிறேன்.  அப்படி ஒரு நாள் சீரியஸா..ஜிந்திச்சப்ப உடல் எடைய குறைக்க நம்ம ஒரு நாளில் என்னென்ன செய்யனும் உடல் உழைப்பை அதிகரிக்கனும். எல்லாரும் சொல்லுங்க அதுக்கு என்ன பண்ணனும்.  என்னமோ டோரா புஜ்ஜி கதை மாதிரி சொல்லிக்கிட்டேன்.  உடம்ப குறைக்க ஏதாவது பண்ணனும்னு யோசிச்சா தாத்தா

பாஸ்...உங்களுக்கு கல்யாணமாயிருச்சா....

முன்னுரை விளக்கவுரைலாம் இல்லை. ஸ்டெர்ய்டா மேட்டருக்கு வரேன். காடு மலை கடல் எல்லாம் அலைஞ்சு அண்ணனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் வச்சுட்டாஙைக... விசேசத்துக்கு வந்த ஒரு அப்பத்தா அப்படியே சின்னவனுக்கும் பொண்ண பாத்திரு தனம்னு அம்மாக்கு சொல்லுச்சு.   பக்கத்துல இருந்து கேட்டதும் நான் ரொம்ப வெட்கப்பட்டு சிவப்பாயிட்டேன்.... சிவப்பாகி முடிக்கல ஒரு ரெண்டு வருஷம் ஆகட்டும் அவனுக்கு என்ன அவசரம் னு அம்மா சொன்னாங்க..  நான்  பழைய கலர்க்கே வந்துட்டேன்... ஆறு மாசம் கழிச்சு என் ஜாதகத்த தூசு தட்டுனாஙைக..வீட்டுக்கு வந்த மாமா ஒருத்தர் பழனிக்கென்ன ராஜா மாதிரி இருக்கான் பொண்ணு தானா வரும்னார்... எப்படி வருமாம்....தானாஆஆஆஆஆ வருமாம்.. அவ்வளவுதான் ஜாதகத்த மறுபடியும் பூட்டி வச்சிட்டாஙைக.. என் செட் பசங்கள ஒவ்வொருத்தரா கல்யாணம் பண்ணிக்க ஆரம்பிச்சாய்ங்க.. ஒருத்தன ஒருத்தன் பார்த்தா என்ன வேல பாக்குற என்ன சம்பளம் வாங்குறன்ற கேள்விகளைக் கடந்து கல்யாணம் எப்ப னு பேச ஆரம்பிச்சாய்ங்க... டே மாப்ள அவனத் தெரியுமா கல்யாணம் முடிஞ்சிருச்சுடா .. உனக்கு பொண்ணு பாக்குறாங்களா இதான் அப்ப மேட்டர்