பாஸ்...உங்களுக்கு கல்யாணமாயிருச்சா....

முன்னுரை விளக்கவுரைலாம் இல்லை.
ஸ்டெர்ய்டா மேட்டருக்கு வரேன்.
காடு மலை கடல் எல்லாம் அலைஞ்சு அண்ணனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் வச்சுட்டாஙைக...
விசேசத்துக்கு வந்த ஒரு அப்பத்தா அப்படியே சின்னவனுக்கும் பொண்ண பாத்திரு தனம்னு அம்மாக்கு சொல்லுச்சு. 

 பக்கத்துல இருந்து கேட்டதும் நான் ரொம்ப வெட்கப்பட்டு சிவப்பாயிட்டேன்....

சிவப்பாகி முடிக்கல ஒரு ரெண்டு வருஷம் ஆகட்டும் அவனுக்கு என்ன அவசரம் னு அம்மா சொன்னாங்க..

 நான்  பழைய கலர்க்கே வந்துட்டேன்...

ஆறு மாசம் கழிச்சு என் ஜாதகத்த தூசு தட்டுனாஙைக..வீட்டுக்கு வந்த மாமா ஒருத்தர் பழனிக்கென்ன ராஜா மாதிரி இருக்கான் பொண்ணு தானா வரும்னார்...

எப்படி வருமாம்....தானாஆஆஆஆஆ வருமாம்..


அவ்வளவுதான் ஜாதகத்த மறுபடியும் பூட்டி வச்சிட்டாஙைக..

என் செட் பசங்கள ஒவ்வொருத்தரா கல்யாணம் பண்ணிக்க ஆரம்பிச்சாய்ங்க..
ஒருத்தன ஒருத்தன் பார்த்தா என்ன வேல பாக்குற என்ன சம்பளம் வாங்குறன்ற கேள்விகளைக் கடந்து கல்யாணம் எப்ப னு பேச ஆரம்பிச்சாய்ங்க...

டே மாப்ள அவனத் தெரியுமா கல்யாணம் முடிஞ்சிருச்சுடா ..
உனக்கு பொண்ணு பாக்குறாங்களா
இதான் அப்ப மேட்டர் ...

என் நண்பன் ஒருத்தன் இருக்கான். அவன்ட்ட அவன் அப்பா கேட்டாராம்
என்னடா பொண்ணு பாக்கலாமா னு..
இவன் சரிப்பா னு சொல்ல வெக்கப்பட்டுட்டு ஏம்பா இப்ப என்ன அவசரம்னு கேட்டானாம்.

அவைங்களும் பையனுக்கு விருப்பமில்லனு பொண்ணு பாக்குறத நிப்பாட்டிட்டாஙைகளாம்..

அவன் சொல்றான் ... மாப்ள சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா என்ன அவசரம்னு..இவைங்க சீரியஸா நிப்பாட்டிடாய்ங்கடா...னு
என்குப் பகீர்னு போச்சு..நம்மள எவன் கேட்டாலும் அமைதியா இருக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.

ஆமா...அந்த மாமன்காரன் என்ன சொன்னான்...தம்பி ராஜா மாதிரி இருக்கான்...பொண்ணு தானாஆஆஆ வரும்னுதானே..

ங்கொய்யாலே ஆறு மாசம் ஆச்சு ஒரு பொண்ணும் வரல..

இவ்ளோ ஏன் லவ் பண்ண பக்கி கூட வரல....அது ஒரு வரலாற்றுத் தோல்வி..( இதையும் எழுதனுமா ...குமாரு...
ம்ஹூம்.... இது காதல்...குணா பாட்டு மாதிரி படிச்சுக்கோங்க...)

சரி பொண்ணு ஜாதகம் ஏதும் வரலனதும் நாலு இடத்துல என் ஜாதகத்த ரேஸ்ல விட்டாஙைக.. அதாங்க புரோக்கர்க அப்புறம் திருமண தகவல் நிலையம் தெரிஞ்சவைங்கனு..

ஒரு மாசம் எங்க அம்மா புரோக்கர் ஆபிஸ், தகவல் மையம் னு போய் போய் பார்த்தாங்க. எதுவு ம் செட் ஆகலை. 

எங்கம்மா டே பழனி அலையமுடியல..நீ யாராயுச்சும் லவ் பண்ணா சொல்லு அந்தப் பொண்ணையே முடிச்சிருவோம்னாங்க...

யூ ஆர் டூ லேட் மை டியர் மம்மி ...
அப்ப யாரையாவது லவ் பண்ணு அப்படினாங்க..

எல்லாம் நேரம். 

காலேஜ் படிக்கிறப்ப சொல்லிருந்தா ஜாதிக்கொண்ணு மதத்துக்கு ஒண்ணு னு நிப்பாட்டிருக்கலாம்... இப்ப என்னடானா ஒரு மெடிக்கல் ரெப்பா முழுசா தயிர் சாதமா மாறிக்கிடந்தேன்..
கிட்டத்தட்ட கல்யாணம் பண்ணுற வயசுக்கு ஜஸ்ட் ஷார்ட் எக்ஸ்பையரி..

ஒரு தரகர் வந்தார். தம்பி மெடிக்கல் ரெப்புனு பொண்ணு தரமாட்டிங்கிறாங்கனார்...

மெடிக்கல் ரெப்னா டாக்டர் அப்பாயின்ட் தரமாட்டிங்கிறாங்க
கடைக்காரன் ஆர்டர் தரமாட்டிங்கிறான்
நர்ஸ் உட்கார இடம் தரமாட்டிங்குது
பேங்க் காரன் லோன் தரமாட்டிங்கிறான்
இப்ப பொண்ணும் போச்சா குமாருனு உக்காந்தப்ப ஒரு அப்பத்தாவும் அம்மாவும் கிசுகிசுனு கிச்சன்ல பேசுனாங்க..
ரெண்டு நாள் கழிச்சு எங்கம்மா ஆரம்பிச்சாங்க...பொண்ணு பாத்து அலைய முடியலயாம். அவங்க வழில தூரத்து சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்காம்..பேசாம அத முடிச்சுருவோம்னாங்க...ஃபோட்டாவ காமிச்சாங்க...

இதுக்கு வாஜ்பாய் விவேகானந்தர் அப்துல்கலாம் வழில கல்யாணமே வேணாமானு யோசிக்குற ஃபோட்டோ அது.
 இருந்தாலும் ஆபத்பாந்தவன் எங்கப்பா விடல...வேகமா வந்து இன்னொரு முறை உங்க சொந்தத்துல பொண்ணு எடுக்கவா...நான் கஷ்டப்படுறது பத்தாதுனு எம்பிள்ளையுமானு மூணுநாள் உலகப்போர ஆரம்பிச்சாரு...

அப்பாடாஆஆஆஆ அவங்கவங்க எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான்யா இருக்கு..

அப்பத்தான் பாரத் மேட்ரிமணி பத்தி தெரிஞ்சு உள்ளே லாகின் பண்ணி ஆன்லைன் ரிஜிஸ்டர் பண்ணேன். சும்மா சொல்லக்கூடாது தினமும் மெயிலுக்கு முப்பது முப்பது பொண்ணுங்க புரோஃபைலா அனுப்புவாஙைக. எல்லாத்தையும் விளக்கமா பாக்கனும்னா அதாவது ஊர் முகவரி ஜாதகம் எல்லாம் பாக்கனும்னா பணம் கட்டனும்.
பணம் அந்த ஆபிஸ் போய் கட்டனும்.
வீட்ல சொன்னா நீயே போய் கட்டு ஆன்லைன்னா னு பயந்தாங்க.
இப்ப நானே போய் அந்த அலுவலகத்துல பதியனும்.
அது ஒண்ணும் சாதாரண காரியம் இல்ல..

நமக்கு நாமே பொண்ணு பார்த்து லவ் பண்ணி கட்டிக்கிறது ஈஸி.
ஆனா அரேஞ்ச் மேரேஜ் க்கு நமக்கு நம்மளே பொண்ணு பாக்குறது ஒரே குஷ்டம்.


எனக்குத்தான் பொண்ணு பாக்குறாங்கனு சொல்ல வெட்கம்.அந்த ஆபிஸுக்குப் போயித்தான் ஆகனும்னு முடிவு பண்ணி ஒரு ப்ளான் போட்டேன்.
அந்த ஆபிஸுக்கு போன் பண்ணி எவ்வளவு பணம் கட்டனும்னு கேட்டேன்.

ஒரு பொண்ணு பதில் சொல்லுச்சு.
யாருக்கு சார் பொண்ணு பாக்குறீங்கனு கேட்டுச்சு...
எங்க அண்ணனுக்குனு பொய் சொன்னேன்..
எல்லாம் டீடெய்லா கேட்டு வந்து பணத்த கட்டுங்கனு மொபைல் நம்பர் வாங்குச்சு...
அப்பாடா இனி நேரா போய் அண்ணன்னு என் பெயர ரிஜிஸ்ட்ர் பண்ணி பணத்தைக் கட்டிரலாம்னு நினைக்குறதுக்குள அந்த ஆபிஸ்ல இருந்து ஃபோன்...

சொல்லுங்க மேடம்..
சார்..வர்றப்ப உங்க அண்ணன் ஃபோட்டா கொண்டு வாங்க சார் அப்லோட் பண்ணனும் னு ஒரு பிட்ட போட்டுச்சு..

என்னத்த செய்ய...

இருந்தாலும் மனச திடப்படுத்தி ஈஈஈஈ னு சிரிச்சிட்டே புரோஃபைல் அப்டேட் பண்ணேன். 

அவைங்களும் தினமும் மணப்பெண் ஜாதகம் அனுப்பிட்டே இருந்தாஙைக...
நூறு ஜாதகம் இருக்கும். அதுல எண்பது      பொண்ணுங்க   ஐ.டி மாப்ள தான் வேணும்னு ஒத்தக் காலுல நிக்குங்க..

நம்ம உங்கள கட்டிக்கலாமானு டீசண்ட் வில்லிங் ரெக்வொஸ்ட் கொடுத்து அவமானப்படனுமா..

ரிஜெக்ட் பண்ணிட்டேன்

மீதி இருபது பேர்ல பத்து பேர் வெளிநாட்டு மாப்ள தான் வேணும்னு ஒத்தக்காலுல நிக்குங்க..

நம்ம சுத்திப் பாக்கக்கூட சென்னைக்கு போகாதவைங்க...மதுரைய சுத்துன கழுதையும் வெளியூர் போகாதுன்றதுல நம்ம மாஸ்டர்பீஸ்.

ரிஜெக்ட் பண்ணிட்டேன்.

மீதி பத்துல  மூணு பேர் ஸாரி கல்யாணம் ஆயிருச்சு..புரோபைல் டெலிட் ஆகலனு சொல்வாஙைக.

அடுத்து ஏழு பேர். சரி தேறுதுடா குமாருனு பேஸ்புக்குல ரெக்வொஸ்ட் கொடுக்குறமாதிரி வில்லிங் னு தட்டிவிடுவேன்.

ஃபன்னி கேர்ள்ஸ்...அதுகளுக்கு என்னைய பிடிக்கலனு என்னைய அதுக ரிஜெக்ட் பண்ணிருங்க....

இப்படி பத்து நாள் தாண்டுச்சு...
போற போக்குல மெயில் திறந்து பொண்ணுங்கபேர பார்த்தாலே அவங்க ஜாதகத்தை நான் ஒப்பிக்க ஆரம்பிச்சுட்டேன். படிப்புலாம் நல்லா வருது கொமாரு...பொண்ணுதேனு உக்காந்திருந்தப்ப




ஒரு தீபாவளி வந்தது. எல்லாப் பயலும் விழாக்காலச் சலுகைனு அறிவிக்கிறான். நம்மளும் அறிவிக்கலாம்னு பொண்ணு தேடுறதுல சலுகை...

எந்த ஜாதினாலும் ஓகே
எந்த மதம்னாலும் ஓகே
என்ன படிப்புனாலும் ஓகே ..

சுருக்கமா சொன்னா ஏற்கனவே கல்யாணம் ஆயிருந்தாலும் ஓகே ன்றதைத் தவிர எல்லாச் சலுகையும் கொடுத்தாச்சு...அடுத்தத் தீபாவளிக்கும் அந்த அறிவிப்பும் கொடுத்துருடா குமாருனு ஒரு பட்சி சொல்லுச்சு..

அனத்து அனத்துனு அனத்தி எங்கம்மா ஒரு உறவுக்காரரோட  கல்யாணத்திற்கு கூப்பிட்டு போனாங்க.

எனக்கு சித்தப்பா பையனோட கல்யாணம்.

கூட்டத்துல உக்காந்திருந்தேன். அம்மா முன்னாடி பெண்களோடு கூட்டமா உக்காந்திருந்தாங்க.

ஒரு பாட்டி வந்துச்சு. என் முன்னாடி உக்காந்திருக்குற பையன்ட்ட நீ தான் தனம் பையனா னு கேட்டுச்சு..
அந்தப் பையன் அலறுனான்.
எங்கம்மா அங்க இருந்து கைய காமிக்க அந்த பாட்டி என்னைய பார்த்து என் தாடைய தடவி...நல்லாருக்கியாப்பானுச்சு...

நல்லாருக்கேன் பாட்டி னேன்...

முன்னாடி போய் எங்கம்மாட்ட என்னமோ சொல்லுச்சு...

அடுத்து ஒரு ஆள் வந்தார்.
முன்னாடி எங்கம்மாவ பார்த்துட்டே...தம்பி தானா...னு கேட்டார்.
நான் ஆமா..னு ஈஈஈஈ னு ஒரு சிரிப்பு சிரிச்சு வைச்சேன்...

நான் உனக்கு ஒரு வகையில மாமா வேணும்பா னா ர்
அப்படியா மாமா...(நம்ம அந்த கதாபாத்திரத்தோடு டக்குனு ஐக்கியம் ஆயிருவோம்.)

அவர் பேசிட்டு போனப்ப..இன்னொரு பாட்டி அம்மாட்ட பேசிட்டு அங்க இருந்தே என்னைய பார்த்துச்சு...
எதுக்கு வம்பு..நம்மளே போய் அம்மா பக்கத்துல உக்காந்துட்டா என்னனு போயிட்டேன்.

என்னம்மா ஒவ்வொருத்தரா அனுப்ப்புறீங்க.
பொண்ணு பாக்கனும்னா மாப்பிளைய பாக்கனும்ல..அதான் பாக்குறாங்க... னாங்க
அது சரி அனுப்புறது அனுப்புறீங்க..பொண்ணையே அனுப்பலாமே...எக்ஸ்பையரி ப்ராக்டெக்டா அனுப்புறீங்க னு சொன்னேன்.

கல்யாணத்திற்கு அலையாதீங்கப்பா னு கல்யாணம் முடிச்ச சில சீனியர் சொன்னாய்ங்க...கேக்கல...

நான் மட்டுமா என் செட் பசங்களும் கல்யாணத்திற்கு அலையல.
இங்க கல்யாண வயசுல பொண்ணுங்க மட்டும் தான் கல்யாணம் ஆகலையா னு கவலையா பிரதிபலிக்குறாய்ங்க. அதே கவலை உளைச்சல் பசங்களுக்கும் உண்டு. ஆனால் அதை யாரும் பிரதிபலிக்கிறது இல்ல.

பசங்களும் கல்யாணத்திற்கு அலையறது இல்லை. கூடவே பழகின நண்பன் கல்யாணம் ஆகிட்டா அவைங்க வீட்டுக்கு போனா அவங்க வீட்ல கேக்குற கேள்வி கல்யாணம் ஆகலையா...
இது பரவால ...வேலை பாக்குற இடத்துல...ஒவ்வொரு மீட்டிங்க் லயும் கல்யாணம் ஆகலையானு கேப்பாய்ங்க.. மோட்டிவேட் பண்றானுகளாம்.. அவைங்க ஐடியா பசங்க கல்யாணம் ஆகிட்டா வீட்ல இருக்கமுடியாம வேலைல இருப்பாஙைக னு ஐடியா பண்றானுக போல...

சமூகத்துக்கு மெசேஜ் சொன்னது போதும். விசயத்துக்கு வருவோம். என்னோட கருத்து மட்டும் இல்லை. அப்பா அம்மா வோட கருத்தும் என்னன்னா...ஜாதகம் பார்த்தா முழுசா பாக்கனும். நம்பனும். ஜாதகம் பார்க்கலாட்டி பரவாயில்லை. எனக்குப் பொண்ணும், பொண்ணுக்கு என்னையவும் புடிக்கனும். பொண்ணு பார்க்கும் படலம்னு வடை பஜ்ஜி சாப்பிட ட்ரிப் போகக்கூடாது. நிச்சயம் பண்றதா இருந்தா பொண்ணு வீட்டுக்குப் போகலாம். 
இல்லாட்டி போகக்கூடாதுனு தேடுனோம்.


அப்படித்தான் முடிஞ்சது....எல்லாமே...


அப்புறம் கல்யாணம் வயசுல பசங்கள பார்த்தா கல்யாணம் எப்பனு கேக்காம இருக்க உறுதிமொழி எடூங்கய்யா...

முற்றும்..

ஐய்யோ ஒண்ண மறந்துட்டேன்


நீ பச்ச மஞ்ச மாநிறத் தமிழனா இருந்தா ஷேர் பண்ணு.....







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....