இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அ.நா 301

மழையற்ற ஒரு நெடுஞ்சாலையை நான்குவழிச்சாலையென நீட்டி வெட்டி முழக்க வெற்றிடமாய் இருக்கும் ஒரு பாலையின் நீள் பாதையாய் யாருமற்று இருக்கும் இத்தனிமையை நீங்கச் சொல்பவர்களே,,, மழையெனச் சொன்னால் முழுதும் நனையவும் கடலெனச் சொன்னால் முழுதும் மூழ்கியெழவும் இருக்கும் நடிப்புக்கலைஞர்கள் இன்னொரு நாள் இன்னொரு மழை மற்றொரு நாள் மற்றொரு கடலென திளைத்துத் திரிபவர்கள். கேமரா ஃப்ளாஷ்களின் முன் இமை அசைவற்றுச் சிரிக்கும் உயிர் பொம்மையினங்கள் அவர்கள்.. வெறும் வாயசை சமிக்ஞைகளுக்கு எல்லாம் மொழிகளையும் பொருத்தித் திரிவார்கள். பூக்களின் நடுவே பூக்களாய் ஆடை கடலினடுவே நீர் போன்றாடை மையிட்டு மையல் கொண்டபடி பெண்ணும் அவள் கைகளுக்குள் விழும் ஆணுமென நவநாகரிக கார்ப்பரேட் காதலர்களாய்த் திரிவார்கள்.. வெண் திரை முழுக்க வண்ண வண்ணமயமாய் எல்லாப் பக்கமும் சத்தமென டால்ஃபி சத்தங்களுக்குள் விழுந்து எழுந்து உயிர்ப்பிக்கும் திரையரங்குகளில் ஒளிர்ந்து இன்னொரு நாள் இன்னொரு படமென மறைபவர்கள் அவர்கள்.. முதல் நாள் மாலை பாலென ஆச்சாரக் காட்சியெல்லாம் திரை அமர்ந்த நடுநிசி நேரத்தில் ஓசையற்ற ஒரு தருணமென

காலா - விமர்சனங்களின் விமர்சனம்

அட ஆமாங்க. இது காலா பற்றியப் பதிவு தான். விமர்சனங்களின் விமர்சனம் தான். திரைப்படத்தைத் திரைப்படமாகப் பார்க்கும் பழக்கம் ஆரம்பக் காலந்தொட்டே தமிழ் ரசிகர்களுக்கு இருந்ததில்லை. அரசியல் அறிவிப்பிற்கு முன் வரை ரஜினிக்கு இவ்வளவு எதிர்ப்பாளர்கள் இருந்ததில்லை. இப்பொழுது வந்துவிட்டார்கள். எப்பொழுதெனக் காத்திருந்து கற்களை எறிய அவர்களிருக்க, ரஜினியும் தானாய் மனமுவந்து தூத்துக்குடியில் அந்த வாய்ப்பை வழங்கிவிட்டார். நிற்க. ஒரு அரசியல்வாதி ரஜினி மீது அவரின் எதிர்ப்பாளர்கள் பல காரணங்களைக் கூறி அவரது குறையுடன் அவரை வீழ்த்த முடியும். ஆனால் ஒரு நடிகனாக அவரது உழைப்பை அவர் கட்டமைத்த ஒரு வடிவத்தை அவ்வளவு எளிதாக அவரது வெறுப்பாளர்களால் உடைக்க முடியாது.  ஆதலால தான் படம் வருவதற்கு முன் பொங்கி பொங்கல் வைத்த பல போராளிகள் பட ஆரம்ப சீனிலேயே ரஜினி போல்ட் என்பது போன்ற குற்றங்களைச் சொல்கிறார்கள். ஒரு சிலர் இது ரஞ்சித் படம் அதான் வெற்றி என்கிறார்கள்.  அதாவது அந்தப் படம் அவர்களுக்குப் பிடித்துவிட்டது.  ஆனால்.ரஜினியைப் புகழ விருப்பமில்லை . அதற்குக் காரணம் சொல்கிறார்கள். ரஞ்சித் படமென்றால் இருக்கட்டு

சைரன் பக்க & பக்கா இறுதி

ஒரு நண்பர் என்னை இரு மாதங்கள் கழித்துப் பார்த்து என்ன பழனி இப்படி மெலிஞ்சுட்டீங்க என்றார் நான் தான் குறைச்சிருக்கேன் என்றேன் எதுவும் டயட்டா..பேலியோவா என்றார். இல்லை சார் என்று என் வழிமுறைகளைக் கூறினேன். எல்லாவற்றையும் கேட்டவர் அதெப்படி பேலியோல தான் இப்படி குறையும். மத்ததுல சாத்தியம் இல்ல. நீங்க பேலியோல இருந்துக்கிட்டு பொய் சொல்றீங்களா என்றார். ஏனென்றால் அவர் பேலியோ. நிற்க. போனத் தொடரிலேயே பேலியோக்காரர்கள் என் தொடரைப் படித்துவிட்டு குறிப்பு அரைகுறையாகப் படித்துவிட்டு கம்பு சுற்றினார்கள். ஒரு மதவாதக் கும்பல் போல பேலியோக்காரர்கள் அவர்களின் டயட்முறைக்கு கொடிதூக்கி வருகிறார்கள். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரச்சினை இந்த நண்பர் போல் சிலர் உடல் ஃபிட்டா இருந்தா எடையைக் குறைச்சா அது பேலியோனாலத் தான் முடியும் மத்ததுலாம் சாத்தியம் இல்லை என்று வாதாட ஆரம்பித்திருக்கிறார்கள். சின்னப்பிள்ளைகளில் சண்டை போடுவோம். கமலை பிடிக்கும் அதற்காக ரஜினியை மட்டம் தட்டுவார்கள். அதுபோல்தான் இதுவும். பிறகு அந்த நண்பரிடம் என் விளக்கத்தைக் கூறினேன். நீங்கள் பேலியோ போலியோ கலிலியோ என்ன டயட் வேண்டுமானாலு