விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 7
பழனிக்குமார் மதுரை விற்பனைப்பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 7 மருந்துவிற்பனைப் பிரதிநிதியின் வேலைகள் என்று சுருக்கமாகச் சொல்வீர்கள் எனில், மருத்துவரைப் பார்க்கவேண்டும், அவரிடம் நமது நிறுவனத்தின் மருந்துகளைப் புரோமோட் செய்து அவரை எழுத வைக்க வேண்டும். இதற்குச் சமமானக் கடினமான வேலை, அந்த மருத்துவர் நம் மருந்தை எழுத ஆரம்பித்துவிட்டால் அவரது அல்லது அவருக்கு அருகில் இருக்கும் மருந்துக்கடையில் நம் மருந்தை ஸ்டாக் வைப்பது. அவர் ஆயிரக்கணக்கான மருந்தை எழுதுவார், அதில் நம் மருந்து எது என்பதை அந்தக் கடைக்காரருக்குத் தெரியப்படுத்தவேண்டும். இதற்காக மருந்துக்கடைகளுக்குச் சப்ளை செய்ய ஒரு மொத்தவிலைக்கடையை (மெடிக்கல் ஹோல்சேல்) நியமித்திருப்போம். அந்த மருத்துவர் எழுதுகிறாரா என்பதைப் பார்க்கவேண்டும், அந்தக் கடைக்காரர் வாங்கிவிட்டாரா எனப் பார்க்கவேண்டும், அந்தக் கடைக்காரருக்கு அந்த ஊரின் மொத்தவிலைக்கடைக்காரர் சப்ளை செய்துவிட்டாரா எனப் பார்க்கவேண்டும், இதற்கு இடையில் அந்த மருந்து அந்த மொத்தவிலைக்கடைக்காரரிடம் இருக்கிறதா என்றும் அவ்வப்போது பார்க்கவேண்டும். இது தான் சங்கிலித்தொடர். நான் மேலாளராகப் பொறுப்பேற்