இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாய்க்குட்டி 1

நாய்க்குட்டிகள் போல் இருந்துவிடுதல் அவ்வளவு எளிதல்ல.. ரொட்டித்துண்டுகளுக்குப் பின்பான  விரல் வாசத்தைக் கண்டுகொண்டபடி ஆற வேண்டும்... எப்பொழுதும் உடனிருக்கவேண்டும் என்றபடிக்கு முணுமுணுக்க வேண்டும்.. தழுவலிலும் ஆற்றுப்படுத்துதலிலும் ப்ரியத்தின் வாசனையில் போதாமை கொள்ளுதல் வேண்டும். கால்களுக்குள் வட்டமிட்டபடி போகுமிடமெல்லாம் ஓர் உலகம் வரையவேண்டும்.. அதிர்வானச்  சொல்லுக்கும் அன்பானச்  சொல்லுக்கும் ஏங்கியபடி நிற்கவேண்டும்.. மொழியில்லாத சமிக்ஞைகளைப் புரியும்படிக்குக் கைகளைக் கொண்டு அளவளாவியபடி யாசிக்கவேண்டும்.. தவ்வியபடி முகம் நுகர்தல் வெறும் உணவுக்கானதல்ல என்றபடிக்குத் தவமிருக்க வேண்டும்.. நாய்க்குட்டிகளுக்கு ப்ரியமானவர்களின் சாயலைத் தந்துவிடாதபடிக்கு நாய்க்குட்டிகளாகவே இருந்துவிடுதல் அவ்வளவு  எளிதல்ல... 20.35 27/12/2020

காலை மாலை தவறாது...

காலை மாலை தவறாது அன்பாயம்  வழங்கப்படுவதாய் உறுதிமொழியுடன்  நட்சத்திரம் ஒன்று எரிந்து விழுந்தபடி ஓர் இரவு ஆரம்பிக்கிறது. காலை மாலை தவறாது நீர்வார்க்கும் பூக்கள்  நட்சத்திரங்களைத்  தாங்கியபடி மின்னித்தொலையும்- கண்சிமிட்டல்களை மறக்க இயலாதபடிக்கு ஒரு பகல் ஆரம்பிக்கலாம். காலை மாலை தவறாது கால்வருடி பகலை  நீவிவிடும் உன் நாய்க்குட்டிக்கு வெம்மையாய் உன் விரல் தழுவல் தேவைப்படலாம்... காலை மாலை தவறாது வெறுமனே  விரல் தழுவல் வேண்டும் நாய்க்குட்டியின் சாயல் மட்டும் தானில்லை. மற்றபடி நான்- நானே தானன்பே..... 22.33 25/12/20

தூத்துக்குடியும் புயலும்

தூத்துக்குடினு ஒரு ஊர். துறைமுகம் இருக்குறனால பணப்புழக்கம் இருக்குற ஊர். அரசுக்கு வருவாய் தர ஊர். ஆனால் இரண்டு வருடத்துக்கு முன்னதாக தூத்துக்குடி மாநகரில் மழை இல்லை. ஆனால் ஒட்டப்பிடாரம் , கோரம்பள்ளம், தெய்வச்செயல்புரம், புதுக்கோட்டை போன்ற தூத்துக்குடிக்கு அருகில் உள்ள வெளியூரில் பெய்த கனமழையில் பெருக்கெடுத்த ஒரு நாளைய மழை, கால்வாய் வழியாகக் கடலுக்குப் போகும்வழியில் தூத்துக்குடி மாநகரில் புகுந்தது. அந்த ஊர் மக்கள் ஒரு சொட்டு மழை இல்லாமல் அவ்வளவு தண்ணீரை உள்வாங்கினர்.  பிரைண்ட் நகர், அண்ணா நகர்   மில்லர்புரம் போன்ற பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தால் மோட்டர் போட்டு ஒவ்வொரு தெருக்காரர்களும் அடுத்தத் தெருவிற்குக் கடத்தி ஒவ்வொரு தெரு தண்ணீரும் மெயின்ரோட்டிற்கு வந்து பிறகு வடியவேண்டும். சாதாரண அடைமழைக்கே தண்ணீர் வடிய மூன்று நாட்கள் பிடிக்கும். இத்தனைக்கும் அந்தப் பகுதிகளில் நிறைய மேல்தட்டு மக்கள் குடியிருக்கும் எலைட் பகுதிகள்.  மருந்துவிற்பனை பிரதிநிதியின் மேலாளராக, ஒருமுறை  மழை விட்ட மூன்று நாள் கழித்து தூத்துக்குடி சென்றிருந்தேன். நிறைய மருத்துவர்கள் இருக்கும் ஒரு பகுதியே தீவாக மாறியிருந்தது. ஒர