நாய்க்குட்டி 1

நாய்க்குட்டிகள்
போல்
இருந்துவிடுதல்
அவ்வளவு எளிதல்ல..

ரொட்டித்துண்டுகளுக்குப்
பின்பான 
விரல் வாசத்தைக்
கண்டுகொண்டபடி
ஆற வேண்டும்...

எப்பொழுதும்
உடனிருக்கவேண்டும்
என்றபடிக்கு
முணுமுணுக்க வேண்டும்..

தழுவலிலும்
ஆற்றுப்படுத்துதலிலும்
ப்ரியத்தின் வாசனையில்
போதாமை கொள்ளுதல்
வேண்டும்.

கால்களுக்குள்
வட்டமிட்டபடி
போகுமிடமெல்லாம்
ஓர் உலகம்
வரையவேண்டும்..

அதிர்வானச் 
சொல்லுக்கும்
அன்பானச் 
சொல்லுக்கும்
ஏங்கியபடி
நிற்கவேண்டும்..

மொழியில்லாத
சமிக்ஞைகளைப்
புரியும்படிக்குக்
கைகளைக் கொண்டு
அளவளாவியபடி
யாசிக்கவேண்டும்..

தவ்வியபடி
முகம் நுகர்தல்
வெறும்
உணவுக்கானதல்ல
என்றபடிக்குத்
தவமிருக்க வேண்டும்..

நாய்க்குட்டிகளுக்கு
ப்ரியமானவர்களின்
சாயலைத்
தந்துவிடாதபடிக்கு
நாய்க்குட்டிகளாகவே
இருந்துவிடுதல்
அவ்வளவு 
எளிதல்ல...

20.35
27/12/2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....