காலை மாலை தவறாது...
காலை மாலை
தவறாது
அன்பாயம்
வழங்கப்படுவதாய்
உறுதிமொழியுடன்
நட்சத்திரம் ஒன்று
எரிந்து விழுந்தபடி
ஓர் இரவு
ஆரம்பிக்கிறது.
காலை மாலை
தவறாது
நீர்வார்க்கும்
பூக்கள்
நட்சத்திரங்களைத்
தாங்கியபடி
மின்னித்தொலையும்-
கண்சிமிட்டல்களை
மறக்க இயலாதபடிக்கு
ஒரு பகல்
ஆரம்பிக்கலாம்.
காலை மாலை
தவறாது
கால்வருடி
பகலை
நீவிவிடும்
உன் நாய்க்குட்டிக்கு
வெம்மையாய்
உன் விரல்
தழுவல்
தேவைப்படலாம்...
காலை மாலை
தவறாது
வெறுமனே
விரல் தழுவல்
வேண்டும்
நாய்க்குட்டியின் சாயல்
மட்டும் தானில்லை.
மற்றபடி
நான்- நானே தானன்பே.....
22.33
25/12/20
கருத்துகள்
கருத்துரையிடுக