விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து
விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து... சாம்ராஜ்ய காலம் முதல் நாயக்கர் காலம் பிறகு அங்கிருந்து இப்பொழுதுவரை என இந்தியாவில் உள்ள எல்லா மதங்களிலும் நடந்த மாற்றங்கள் பற்றிய பெரிய ஆய்வை எழுதியிருக்கிறார் தோழர் அருணன். மத நல்லிணக்கம் பேணுவோர், நாத்திகம் பேணுவோர் தவிர மதங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். முகலாயர்கள் ஆண்டபொழுது முஸ்லீம்களின் எண்ணிக்கை கணிசமானது தான். ஆங்கிலேயர்கள் ஆண்டபோது கிறித்தவர்களின் எண்ணிக்கை கணிசமானது தான். இரு மத ஆட்சியாளர்களும் வைதீக நெறி மதங்களைப் பின்பற்றுபவர்களையும் அரவணைத்திருக்கின்றனர். சைவ வைணவ என்ற வைதீக நெறி மதங்களைப் பின்பற்றியோரை ஹிந்து என அழைத்தவர்கள் முஸ்லீம்கள் என்பது போன்ற தரவுகளை அருணன் வழங்கியிருக்கிறார். அந்த கால இஸ்லாமியர் எண்ணிக்கை, கிறித்தவர்களின் எண்ணிக்கை என புள்ளிவிவரத்துடன் வழங்குவது அதிகாரத்தைப் பயன்படுத்தி மதமாற்றம் அதிகமாக நடக்கவில்லை என்பதைக் காட்டியிருக்கிறார். கிறித்தவ மிஷனரிகள் கல்வி தானம், மருத்துவதானம் செய்ததற்க