இடுகைகள்

மதுரை டூ அரியலூர்

ஒரு கட்டுரையில் புகைவண்டியில் செல்லுவது பற்றிச் சொல்கையில் அது பிடிக்காது  என்று குறிப்பிட்டிருந்தேன்.  எனக்கு ஏன் புகைவண்டி (முதலில் புகைவண்டி னு எழுதுறதுக்கு ட்ரெயின் னு போட்டுக்கிறேன்...தமிழில் எழுதுனா வரிவிலக்கா கொடுக்கப்போறாங்க...)  ட்ரெயின்ல போறது ஏன் பிடிக்காதுனா....அதற்கு ஒரு பிளாஷ்பெக் இருக்கு. கல்லூரி முடித்து வேலை சேர்ந்ததும் 3 மாதத்தில் சென்னையில் மீட்டிங் என்று அழைத்தார்கள்.  நான் பஸ்ஸில் போகலாம் என என் சீனியரிடம் சொன்னேன்.  அவர் அவ்வளவு தூரம் பஸ்ஸிலா என ட்ரெயினில் போலாம் எனச்சொன்னார். ரிசர்வ் பண்ணவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நானும் சரி என்றுவிட்டேன்.  8.30 க்கு பாண்டியன். ஆனா 8 க்குலாம் வாப்பா னு அழைத்தார்.  சரினு போனா.. பூட்டியிருந்த கம்பார்ட்மெண்ட் க்கு வெளியேக்யூ இருந்தது.  க்யூ நிற்கனும்னா....அது போகுது...போகுது......மதுரையில கிளம்புற ட்ரெயினுக்கு வரிசை அடுத்த ஸ்டேசன் சோழவந்தான் வரைக்கும் நிற்கும் போல..... சரினு நானும் என் சீனியரும் போய் நிற்கிறோம்... இப்ப ட்ரெயின் அன்ரிசர்வ் கம்பார்ட்மெண்ட்ட திறக்குறாங்க..... கேமராவ ...

அநேகம்....

அவர் ஒரு குடை வைத்திருந்தார். கருப்பு நிறத்தில் இருக்கும் மடக்கிய அந்த குடைக்கு அழுக்கும், சில வண்ணங்களாலான ஒட்டுகளும் போதும் ஒரு மேய்ப்பவனின் வறுமையைக் காண்பிக்க. ஆறு ஆடுகள் வைத்திருக்கிறார். அந்த ஆடுகள் கட்டுப்பாடற்று ஓடுகையில் எல்லாம் கட்டுப்படுத்த அவைகளுக்கும் அவருக்கும் தொடர்பாய் எந்த கயிறும் இல்லை. மாற்றாக அந்த குடைக்கம்பியும் அதட்டும் அவருடைய குரலும் தான். எப்பொழுது வேண்டுமானாலும் மழை வரும் அந்த நண்பகலுக்கு முந்தைய நேரத்தில் அனேகமாய் ஒரு நல்ல மேய்ச்சல் நிலத்தைத் தேடி அவர்கள் செல்லலாம். சாத்தியப்பட்ட , பழக்கப்பட்ட அந்த மேய்ச்சல் நிலம் அனேகமாய் அவர்களுக்குத் தொலைவில் இருக்கலாம். இவர்களைக் கடந்த ஒரு கிலோமீட்டருக்கெல்லாம் என் இருசக்கரவாகனத்தை நிறுத்தும்படியாய் மழை குறுக்கிடுகிறது. துளிகள் விழாத அந்த கூரையின் கீழ் நிற்க, அதன் எதிர்புறத்தில் ஒரு கனரக இயந்திரம் மேய்ச்சல் நிலத்தை வீடு கட்ட ஏதுவாய் கற்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது அந்த ஆடுகள் துள்ளிக்குதித்து ஓடி வருவது ஏதோ ஒரு துளி விழுந்த கண்ணுக்கு அவை தள்ளாடி தள்ளாடி வருவது போல் திட்டு திட்டாய் தெரிய ஆரம்பித்தத...

நியாபகம்

அந்த பறவை சிலிர்த்துக்கொண்டு துணையின் கழுத்தில் அலகைத் தோய்க்க லாவகமாயிரண்டும் உன்னை நியாபகப்படுத்துகின்றன- நீ பறவைகளைப் பார்ப்பதேயில்லையா?

நீ

தனிமை கடற்கரை மழை எல்லாம் ஏதுவாயிருக்கிறது- நீயற்றதைத் தவிர!
பனி விழும் இவ்விரவு- மன்றாடல்களைப் போர்த்தியதாய் வலி தோல்வி காரணங்களாலான துதித்தலில் தலை மறை ஆடையுடன் ஒளிந்து செல்லும் சகக் கர்த்தனைக் காணாது வெறும் மெழுகு எரிக்கும்!

பலூன்

இறையொளி வேண்டி விழியேந்தும் பிரார்த்தனைகளின் மத்தியில் வாசல் தாங்கும் பலூனைப் பார்த்தபடியாய் சிறுமியொருத்தி! பலூன் இறைத்தூதன்!
எழுந்து பார்க்கையில் ஆகச் சிறந்த கருணையை எதிர்நோக்கி கரம் கூப்பியிருக்கும் ஒரு சடலம்