இடுகைகள்

ஃபர்னிச்சர் 4

  ஃபர்னிச்சர்- இது ஒரு தேவையில்லாத ஆணியின் புடுங்கல் திணை. கடந்தவாரம்  திடீரென " இப்போ" ராமசாமியாட்டம், இப்பவே சென்னை போகவேண்டிய நிலை. அதுவும் பகல் பயணம்.  பெயர் தெரியாத ஆம்னி பஸ்களே "சிவப்பு பஸ்ஸில்" தெரிந்ததால் நம்பி ஏறுவதற்குப் பயம். கட்டக்கடைசியாய் மறுநாள் வைகையில் போட்டால் என்ன என்று யோசித்து இந்த உலகத்தின் அதிவேக நெட்வொர்க்கான irctc க்குள் ஒரு மணி நேரமாக நுழைந்து அதிகாலை கிளம்பும் வைகைக்குப் பார்த்தால், நீ நினைச்ச கூந்தலுக்குலாம் உனக்கு டிக்கெட் கிடைக்காது என்று அதில் ஏற்கனவே துண்டு போட்ட இணைய பிரகஸ்பதிகள் சமிக்ஞைகள் சொல்ல, வேறு ஏதாவது பகல் நேரத்து ட்ரெயின் இருக்கிறதா என்று பார்க்க தேஜஸ் என்ற ஒரு ட்ரெயின்.  மறு படியும் வீட்டு மொட்டை மாடி, நடுத்தெரு , பெரிய டவர் க்குலாம் கீழ் நின்றும் ஏர் டெல்லின் இணைய தள சுற்றலில் வெகு சீக்கிரமாய் ஒரு மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்தாகிவிட்டது.   சம்பவத்தன்று மதியம் மதுரை புகைவண்டி நிலையம்.  எப்பொழுதும் சென்னை போகும் ரயில்கள் முதல் ப்ளாட்ஃபாரத்தில் தான் நிற்கும் என்று  போய்ப்பார்த்தால் ட்ரெயினைக் காணோம். ஸ்...

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 17

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 17 பழனிக்குமார் ஒரு மெடிக்கல் ரெப்பின் தொழில் வாழ்வில் பயணங்களும் காத்திருப்புகளும் தான் அதிகப்படியாய் நிகழ்பவை. ஒரு மருத்துவரைப் பார்க்க மூன்று மணி நேரம் கூட காத்திருப்போம். மருத்துவரைப் பார்க்கலாம் என்னும்போது ஐந்து நொடிகள் தான் நேரம் என்பார்கள். அந்த ஐந்து நொடிகளுக்காக மூன்று மணி நேரம் காத்திருப்புகள் தான் தவம். அங்கு இருக்கும் நேரங்களில் டிவி, புத்தகம், மொபைல், வேடிக்கை, நண்பர்களுடனான உரையாடல் என்று அந்தக் காத்திருப்புகள் நிகழும். சில காத்திருப்புகளும் பயணங்களும் சுவாரஸ்யமாய் நிகழும். ஒரு பைக் பயணம். அது. அருப்புக்கோட்டை வேலை முடித்துவிட்டு, திருச்சுழி என்ற கிராமத்தில் வேலை முடித்துவிட்டு, திருச்சுழியிலிருந்து நரிக்குடி வழியாக மதுரை வரும் ஒற்றையடிப்பாதை போல் ஒரு பாதை உண்டு. என் அம்மாவின் ஊர் என்பதால் பள்ளிப்பருவங்களில் அந்தச் சாலை வழியாக மருதுபாண்டியர் போக்குவரத்து பேருந்தில் வந்த காலங்களிலிருந்து இப்பொழுது வரை அந்தச் சாலை மோசமானதாகத்தான் இருக்கும். அன்றும் கூட. என் நண்பர் மற்றும் என்னுடன் வேலை பார்ப்பவருமானவரும் நானும் வந்து கொண்டிருந...