சும்மா ஒரு கதை...


அம்மா வேகமாம்மா....டைம் ஆயிருச்சு......
பரபரப்பாய் கிளம்பினான் ப்ரவீன். முழுப்பெயர் ப்ரவீன் குமார்.
வீட்டின் வெளியே இவன் நண்பர்கள் காத்துக்கொண்டிருந்தனர். முக்கியமாக மாடசாமி (கல்லூரிப் புகழ் மண்டையன்)

கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 2 நாள் முகாம் ஒரு கிராமத்தில்.
கல்லூரியிலிருந்து அக்கிராமம் வந்தடைந்தார்கள்.

அக்கிராமத்தில் ஒரு கண்மாய். அக்கண்மாயிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் கால்வாய் முழுதும் முள்செடிகளும், மணல்மேடுகளும், சிதைந்த கரைகளுமாய்ருந்தன. அதைச் சீர் செய்ய 4 கல்லூரிகளின் மாணவர்கள் வந்திருந்தனர். அதில் தான் நம் ப்ரவீன்குமாரும், மண்டையனும்.

பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேலைகள் பகிரப்பட்டன. ப்ரவீனும், மாடசாமி என்ற மண்டையனும் அரிவாள், மண்வெட்டி சகிதமாக ஒரு ட்ராக்டரில் மற்ற மாணவர்களுடன் கிளம்பினர்.

"ஏண்டா மண்டையா! இவனுக கூப்பிட்டு போறத பார்த்தா...கண்மாயிலிருந்து கடல் வரைக்கும் தூர் வாறனும் போலேயே....
இல்ல ப்ரவீன்...அப்படி தோண்டும்போது இலங்கை வந்திரும்போல.....னு மண்டையனும் பதில் சொன்னான்.

11மணி வெயில் சுளீரெனத் தாக்கியது.
ஒரு பொட்டல் காட்டில் இறக்கிவிட்டார்கள்.
இது தான்பா வேலைய ஆரம்பிங்க னு ட்ராக்ட்ர ஓட்டிக்கிட்டு வந்த செவ்வாழை தாத்தா சொன்னார்.
அனைத்து மாணவர்களும் திகைக்க, ப்ரவீன் மட்டும்...என்ன தாத்தா....கால்வாயவே காணாம்....எங்க தூர் வாற....
தம்பி, கால்வாய கண்டுபிடிக்கத்தான் உங்கள கூப்பிட்ருக்கோம்...னு சொன்னார் செவ்வாழை                                                                                                                                                                                                                              
சுத்தம்....
அட ஓரமா பாருங்கப்பா...மணல் மேடா இருக்குல...அதான் கால்வாய் னு செவ்வாழை சொன்னார்.
எல்லாரும் வேலைய ஆரம்பிச்சாங்க...

மண்டையன் : எங்க அப்பன் அப்பவே சொன்னாரு...நீ படிச்சு என்னத்த கிளிக்கப் போற..வா  விவசாயம் பாக்கலாம்னு......

ப்ரவீன் : ம்க்ம்.....அங்க போனா மட்டும்.....கிளிச்சுருவியாமா.....

வேலையின் நடுவே கிண்டலும் டீ யுமாய் இருந்தார்கள்.

மதியம் சாப்பாடு வந்தது.
கொஞ்சம் சாப்பிட்டு விட்டு கால்வாயின் மண்ல் கரையின் கீழ் சற்று இளைப்பாறினார்கள்.

" வாராயோ...வெண்ணிலாவே.....கேளாயோ...எங்கள் கதைய..." னு கிராமத்துத் தொலைதூரத்து விசேஷ வீட்டில் குழாய் கட்டி பாட்டுச் சத்தம்....

ப்ரவீனும், மண்டையனும் படுத்திருந்தார்கள்.
திடீரென....வளையல் மற்றும் பெண்கள் சத்தம்.
மண்டையன் எந்திரிச்சுப் பார்த்தான்.....

"டேய்...பிரவீன்....பொம்பள பிள்ளைகளும் வந்திருக்காங்கடா.....
பிரவீனும் பார்த்தான்....
மண்டையனுக்கு மகிழ்ச்சித் தாங்கவே இல்லை....
"ப்ரவின்....நம்ம வாத்தி எது பண்ணுனாலும் நமக்குச் சாதகமாவே பண்றாருடா....
ஏண்டா...பொட்டக்காட்டுல வேல பாக்கவிட்டு தயிர்சாதத்தக் கொடுத்து ஏமாத்திட்டாரு...அவர பத்திப் பேசாத மண்டையா.....

" அட அது இல்ல டா....என்ன தான் காய்ஞ்சு கிடந்தாலும் பாரு....கலர் கலரா..பொண்ணுக போறாள்க பாரு....

"இங்க வந்து இந்த பொம்பள பிள்ளைக வந்து என்ன பண்ணப்போகுதுக..." னு ப்ரவீன் சலிச்சுக்கிட்டான்.

"ஏன்....நாங்க வேலைலாம்...பாக்கமாட்டோமா.." னு ஒரு பெண் குரல் கேட்டது.

கால்வாயின் உட்புறத்தில் மணல் மேட்டிற்கு வெளியே அந்த வசீகரீக்கும் குரல் கேட்டது.

ப்ரவீனும், மண்டையனும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர்.

"ஏன் ...பொம்பள பிள்ளைகள்னா சும்மாவா...."னு மறுபடியும் குரல் கேட்டது.
அதை ப்ரவீன் உன்னிப்பாகத் தேடினான்.

"ஏய்...சும்மா இருடி...னு இன்னொரு குரல் அந்த வசிகரீக்கும் குரலை தடுத்தது.....

"டேய்...மாப்ள இரண்டு பேர் இருக்காங்க டா னு மண்டையன் அக்குரலை பங்கு போட்டுக்கிட்டான்.

"அப்புறமென்னடி...பொம்பள பிள்ளைகள இந்த மாதிரி ஆம்பளைக மட்டமா நினைக்கிறாங்க..." வாதிட்டது அக்குரல்...

ப்ரவீன்...தேடினான்...அக்குரலின் சொந்த உருவத்தை....
செடிகளினூடே...ஊடுருவிப் பார்த்தான்...
கொஞ்சமாய் செடிகள்...அதில் மஞ்சள் நிறப் பூக்கள்...
அதனிடையே மஞ்சள் நிற வளையல்களுடன் வலது கை...
வாட்ச் உடன் இடது கை...
மஞ்சளும் பச்சையும் கலந்த ஒரு சுடிதார்....
பூக்களினிடையே பார்த்ததில் ப்ரவீனுக்கு பூ எது அவள் எதென்றே தெரியவில்லை...
பூக்களை விலக்கினான்........சுஜா...
ஆனால் அப்போதைக்கு அவள் பெயர் அவனுக்குத் தெரியாது..

அவள் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவனோ அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
அவள் கூட இருந்தவளை மண்டையன் பார்த்துக்கொண்டிருந்தான்...

ப்ரவீன் சுஜாவின் தைரியத்தையும் அவளது நளினத்தையும் ஒரு சேர மனதில் வடித்துக்கொண்டிருந்தான்.

நான் பார்த்ததிலேயே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி என்பேன்...என அதே தொலைதூரத்து விசேஷ வீட்டில் எம்.ஜி.ஆர் ஓடிக்கொண்டிருந்தார்...மன்னிக்கனும்...பாடிக்கொண்டிருந்தார்.

சுஜாவும் அவள் தோழியும் நகர ஆரம்பித்தனர்.

"உங்க பேர் என்னங்க...." னான் ப்ரவீன்

"ம்......புண்ணாக்கு...." பதிலளித்தாள் சுஜா..
பாத்துங்க.....கால்வாய்க்குள்ள மாடுக ஜாஸ்தி....

பாத்தாலே தெரியுது.....

"மாப்ள....உன்ன அவ மாடு னு சொல்றாடா...னான் மண்டையன்....

விடுடா...உன் பேர் கூடத் தான் மாடசாமி...மாடு னு செல்லமா நாங்க கூப்பிடுறது இல்லையா....

அப்பப்ப நியாபகப்படுத்துங்கடா....நீங்கலாம் மண்டையன் மண்டையன்னு கூப்பிட்டு நானே எக்சாம் பேப்பர்ல என் பேர் எழுதுறதுக்குப் பதிலா மண்டையனே னு எழுதிடப் போறேன்....

அடப்பாவி...நீ சரியா எழுத்றதே உன் பேர் ஒண்ணுதான்....அதுவும் தப்பா.....

பிரவீனும், மண்டையனும் சிரித்துகொண்டே நடக்க....சுஜாவும் அவள் தோழியும் விரைவாக நடந்து மறைந்தார்கள்..

மறுபடியும் வேலை ஆரம்பிக்கப்பட்டது...

வேலை பார்ப்பவர்களுக்கு டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது.
பெண்கள் கொடுத்துக்கொண்டு வந்தார்கள்...
சுஜாவும் அவள் தோழியும் அதிலிருந்தார்கள்.

ஒரு பெண் பிஸ்கட்டையும், டீயையும்  பிரவீனிடம் நீட்டினாள்..
ஆனால் ப்ரவீன் வாங்கவில்லை...
ஏனென்று காலங்காலமாய் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்குத் தெரியும்.
அவன் அதை அவளிடம் இருந்து வாங்க வேண்டுமாம்.

சுஜா வந்தாள்.
ஆனால் அவனுக்குத் தராமல் விலகிப் போனாள்.

"ஏம்மா...எல்லாத்துக்கும் கொடுக்குற...அந்த பயலுக்கும் கொடேன்.....னு செவ்வாழை தாத்தா...வாழ்க்கைக் கொடுத்தார்...

வேண்டா வெறுப்பாய் தட்டை நீட்டினாள்.

"சாரி ங்க..." னான் ப்ரவீன்

"எதுக்கு"

"பொம்பள பிள்ளைகள தப்பா எடை போட்டேன்ல....அதான்"

"பரவாயில்ல....நாங்கள்லாம் ஆம்பள பசங்களுக்கு சரிசமம் தான்..."

"அப்புறம்..ஏன்...பெயர் மட்டும் புண்ணாக்கு னு வச்சுருக்கீங்க...னு ப்ரவீன் கேட்டான்.

அவள் முகம் மலர்ந்தது...ஆனால் சிரிக்கவில்லை...நகர்ந்து போனாள்.
ப்ரவீன் திரும்பிப் பார்த்தான்...மாடசாமி இதை பார்த்துக்கொண்டிருந்தான்...

"டேய்! மண்டையா!..நீ எப்ப டா வந்த..."

"மாப்ள....எல்லாரும் தூர் வாருறோம்...நீ மட்டுந்தான்டா கிணறு வெட்டுற..."

இரவு வந்தது...அனைவரும் முகாம் திரும்பினர்.

மறுநாள் காலை...
மறுபடியும் வேலைக்கு டிராக்டரில் கிளம்பினர்.
அதே போல் மற்றொரு இடத்தில் கால்வாயின் பகுதியில் இறக்கிவிட்டனர்.

அனைவரும் வேலையைப் பார்த்தனர். ப்ரவீனைத் தவிர...
ஏதோ ஒரு குறுகுறுப்பு....
ஓர் ஈர்ப்பு....
எதற்காகவோ...இதயம் படபடக்கிறது...
சில நிகழ்வுகள் தான் சிலருக்கு வாழ்க்கையை மாற்றுகின்றன ...அந்நிகழ்வுகள் நிகழும்பொழுது நாம் நம்மை உணர்வதே இல்லை...
இப்படி ஒரு வேதியியல் மாற்றம் ப்ரவீனுக்கு....
அதே போல் தான் அவளுக்கும் இருக்குமா என்று அவனுக்குச் சந்தேகம்...
அதை யாரிடம் கேட்பது என்று ப்ரவீனுக்கு குழப்பம்...
இருக்கவே இருக்கான் மண்டையன்....அவன் மண்டைய உருட்டுவோம்...

"டேய்...மண்டையா....

"என்னடா.....
"அவ வருவாளாடா....."

"யாருடா"

"அதான்டா...நேத்து வந்தாள்ல....அவ...."

"ஏண்டா...அவனவன் கண்மாய திறந்துவிட்டு தண்ணி வருமா...வராதோ...னு உட்கார்ந்துருக்கான்...உனக்கு புண்ணாக்கு கேட்குதோ...."

வேலை பார்ப்பவர்களுக்கு வடை வழங்கப்பட்டது...

வழக்கம்போல் ப்ரவீன் அவளைத் தேடினான்.
அவள் வராமல் அவள் தோழி வந்தாள்.
மண்டையனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்...

அவள் ப்ரவீனை பார்த்து...."நீங்க இங்க தான் இருக்கீங்களா" னு கேட்டாள்.
ப்ரவீனுக்கு சந்தோஷம் குழப்பம் இரண்டும் ஒருசேர இருந்தது.
ஏன் இப்படி கேட்கிறாள்.
ஒருவேளை சுஜாவும் இவனைத் தேடிருப்பாளோ...
இவனைக் காணவில்லை என இவளிடம் புலம்பிருப்பாளோ...
இவர்கள் காதலிக்க ஆரம்பித்துவிட்டால் இவர்களது தோழர்களுக்குத்தானே தலைவலி...
நண்பர்களிடம் ஆயிரம் தடவை காதலைச் சொல்வார்கள்..சம்பந்தப்பட்டவர்களிடத்தில் வாயைத் திறக்கவே மாட்டார்கள்...
கதைக்கு வருவோம்.
ப்ரவீன் அவள் தோழியிடம்..."ஏன் இப்படி கேக்குறீங்க"
"சும்மாத்தான்..."

"நேத்து வந்தாங்களே...உங்க ஃப்ரண்ட்...அவங்க வல்லையா..."

"அலையாதீங்க....வரச் சொல்றேன்.."

ப்ரவீன் காத்திருந்தான்..
தூரத்தில் ஒரு பெண் வடை இருக்கும் தட்டோடு வந்தாள்.
அவள் சுஜா தான்.
ப்ரவீன் தூர் வாராமல் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தான்.

சுஜா வந்தாள்.
வடை வேணுமா....
கொடுங்க...பசிக்குது...

"என் ஃப்ரண்ட் கொடுத்தா...வாங்கியிருக்க வேண்டியது தானே..." னு சுஜா கேட்டாள்.

"என்னங்க பண்றது.....சில மாடுக...புண்ணாக்க பார்த்தாத் தான் தண்ணியே குடிக்குது..."

சுஜா சிரித்தாள்..

"டேய் மாப்ள...கிணத்துல தண்ணி தட்டுப்பட்டுருச்சு போல..."னு மண்டையன் கவுண்டர் கொடுத்தான்..

ப்ரவீனோ...பறந்து கொண்டிருந்தான்.
இன்னைக்கு சுஜா ஆரம்பித்தாள்..

"சாரி ங்க"

"எதுக்குங்க..."

"நேத்து உங்கள மாடு னு சொன்னேன்ல...."

"என்னங்க....நீங்க இன்னைக்கு கூட மாடு னு சொல்லுங்க அவன் ஒண்ணுமே சொல்ல மாட்டான்..." னு மண்டையன் மறுபடியும் கவுண்டர் கொடுத்தான்.

அவனை ப்ரவீன் கண்களாலேயே விரட்டி விட்டான்...

ப்ரவீனும், சுஜாவும் பேசிக்கொண்டே கால்வாயில் நடக்க ஆரம்பித்தார்கள்...

"உங்க பெயர் என்ன?"

" ப்ரவீன் ங்க...மதுரை...தியாகராசர் காலேஜ்.....எம்.ஸ்.ஸி..ஃபைனல் இயர்....வீடு மதுரை...அண்ணாநகர்....."
ஜாதகத்த தவிர எல்லாத்தையும் சொன்னான்..

"நானும் மதுர தாங்க..."னாள் சுஜா....

அவ்வளவு தான்....இந்த 1980-90 லாம் படத்துல சந்தோஷ சீன்ல அப்படியே பறக்க விட்டு இளையராஜாவ பேக் கிரவுண்ட்ல வாசிக்க சொல்வாங்களே....அப்படி பறந்தான் ப்ரவீன்.
ஒரே ஏரியாவாம்மாம்மாமாமாமாமாமாமாமாமாமாமா.......

"உங்க பெயர நீங்க இன்னும் சொல்லவே இல்லையே...."

"ஏன்...கண்டிப்பா...பேர் சொல்லனுமா..."

"ஆமாங்க...உண்மையான பேர் இல்லாட்டியும்...புண்ணாக்கு வேனாங்க..வேற பேர் சொல்லுங்க...."

"அப்ப தவிடு...னு வச்சுக்கோங்க....நல்ல பேர் தானுங்க......" னு வம்பிழுத்தாள் சுஜா..

ப்ரவீன் நடப்பதை நிறுத்திவிட்டு அவள் குறும்பை ரசித்து விட்டு,

"நீங்க பேர் சொல்லலாட்டி...நானே உங்களுக்கு ஒரு பேர வச்சிருவேன்..."

"ட்ரை பண்ணுங்களேன்....பார்ப்போம்.."

"ம்...ம்....ம்....." ப்ரவீன் யோசித்தான்..
ம்...ம்..ம்... மறுபடியும் யோசித்துவிட்டு.....ஒரு பெயர் சொன்னான்...

" அகிலா"

"யாருங்க....அகிலா....?" னு படபடத்தாள் சுஜா

"எனக்குப் பிடிச்ச பேர் ங்க"
"அதாங்க....யாரு அது....."

"எனக்குப் பிடிச்சவங்க பேருங்க....."



அவள் வற்புறுத்தி வற்புறுத்திக் கேட்க...இவனை இளையராஜா...மறுபடியும் பறக்கவிட்டுக்கொண்டிருந்தார்....

"நீங்க சொல்லலாட்டி நான் போயிருவேன்....." னாள் சுஜா...

"ம்...ம்...போங்க....."

அவள் நகர்ந்தாள்...
இவன் ஓடிப் போய் அவள் முன் நின்று அவள் முகத்தைப் பார்த்தான்..
அவள் முறைத்து விட்டு அவனை விட்டு விலகி நடந்தாள்.

இவன் மறுபடியும் அவள் முன் ஓடிச் சென்று அவள் முகத்தைப் பார்த்தான்.
இப்பொழுது அவள் இவனது தோள்பட்டையைத் தொட்டு விலக்கி நகர்ந்து நடந்தாள்...

அவ்வளவுதாங்க...இளையராஜா மறுபடியும் இவனை தூக்கிக்கிட்டு போறாரு...

"....ஹலோ....அகிலா...எங்க அம்மா பேரு ங்க...." னு கத்தினான் ப்ரவீன்.

அவள் திரும்பவில்லை....ஆனால் சிரித்தாள்...
அவன் அதைப் பார்க்கவில்லை....ஆனால் அவனுக்குத் தெரியும்...
இம்முறை...இளையராஜா...இரண்டு பேரையும் மெலோடியஸ் போட்டு தூக்கிட்டாரு....

பாவம் மண்டையன் தான்...தூர் வாரிக்கிட்டு இருந்தான்.....


                                              இன்னும் தூர் வாரப்படும்..........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8