ஓரிழப்பைப் பெற்ற வீடு பாவம்....! சேகரமாயிருந்த ரோஜாக்களெல்லாம் நுகர மறுத்து சாலைக்குத் தள்ளப்படும் வாசல்கொண்டவீடு பாவம்.... சவம் கிடத்தப்பட்டத் தரையை எந்தச் சலனமுமின்றி இரத்தச்சம்பந்தமில்லா மூதாட்டி ஒருத்தித் துடைத்தல் கொண்ட வீடு பாவம்....! எல்லாம் முடிந்த பின்னும் ஒருவரைத் தவிர- எப்போதும் போல் எல்லோரும் ஆகும் வரை அவ்வீடு பாவம்...!
இடுகைகள்
ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பால்யக்காதலிகள்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பால்யக்காதலிகள் பரஸ்பரமானவர்கள் அல்லர்! என் இதயக் கல்லுக்கு முதல் உளி செய்து கொடுத்தவர்கள் அவர்கள்! என் கடிகார முட்களை முன்னோக்கியே நகர்த்திக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்! தாஜ்மகாலை படம் வரைந்து பாகம் குறிக்கச் செய்த மும்தாஜ்கள் என் பால்யக்காதலிகள்! சில தெருக்களின் நீள அகலங்களை அங்கலாய்க்கச் செய்தவர்கள் அவர்கள்! மிட்டாய் துண்டுகளைத் துண்டாடி அதன் பாதியைப் பகிரப் பயிற்றுவித்தவர்கள் என் பால்யக்காதலிகள்! கோயில்விழா இரவு கச்சேரிகளில் இசையை மீட்டுக் கொடுத்தவர்கள் அவர்கள்! கொடுக்காமல் புதைக்கப்பட்ட சில வாழ்த்து அட்டைகளில் இன்னமும் வாழ்பவர்கள் என் பால்யக்காதலிகள்! என் சாளரங்களை வேவு பார்த்த தேவதைகள் அவர்கள்! வெயில் நேரத்து மழையாய் என் வாசல் நனைத்துச் சென்ற மழைக்காயங்கள் என் பால்யக்காதலிகள்! காலியாயிருக்கும் பக்கத்து இருக்கைகளைக் கண்களால் குடிகொள்ளச் செய்தவர்கள் அவர்கள்! மேகம் விலகிய பின்னும் கலையாத வானவில் கூட்டம் என் பால்யக்காதலிகள்! பழைய பூங்காக்கள் கோயில்களின் எனக்கானப் புராதனங்கள் அவர்கள்! என் பால்யப்புகைப்படத்தின் நிழற்படமாயிருக்கும் பால்யக்காதலிகள் பரஸ்பரமானவர்கள் அல்லர்!
டைனிங் டேபிள்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
டைனிங் டேபிள்... அழகான மர வேலைப்பாடுகள்.. சில டிசைன்கள் தந்திருக்கிறார்கள். ஒரு கோலம் போட்டதுபோல நடுவே தடயங்கள் வைத்திருக்கிறார்கள். அம்மேசையின் மீது நடுவே சில பழங்களை வைத்துக்கொள்வதற்கும், உப்பு, மிளகுப் பொடி என நிரந்தரமாய் சிலவற்றை வைத்த்துக்கொள்வதற்கும் வசதி கொடுத்திருக்கிறார்கள். இப்படி சில டைனிங் டேபிள் பார்த்தேன். எங்கள் வீட்டிலும் ஒரு டேபிள் இருக்கிறது. அதை டைனிங்க்கிற்காக வாங்கி வைத்துக்கொண்டு மற்ற எல்லா வேலைகளையும் அதில் செய்கிறோம். கால்களுக்கு மட்டும் டிசைன் கொடுக்கப்பட்டு மிகவும் எளிமையாய் இருக்கும் எங்கள் வீட்டின் டைனிங் டேபிளின் மேல் பகுதி கரும்பச்சை நிறத்தினாலான மைக்கா போடப்பட்டிருக்கும். எனக்கு விவரம் தெரிந்து டைனிங் டேபிள் வாங்கி ஒரு மாதம் தான் அதில் அமர்ந்து சாப்பிட்டிருக்கிறேன். இப்பொழுது அதில் என்ன என்ன சுமை ஏற்றியிருக்கிறோம்..-.ஒரு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், புதிதாய் வாங்கப்பட்ட திண்பண்டங்கள். வாங்கிய புத்தகங்களில் இன்னும் படிக்கப்படாமல் இருக்கும் புத்தகங்கள், அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் கடிதங்கள் (மொத்தமாய் சேர்ந்த பின் தொகுக்க வேண்டும்), வங்கிகளில