ஈஈஈஈஈஈ....

கல்லூரி காலங்களில் சினிமாவிற்கு நண்பர்கள் படை சூழ போவது ஒரு பேரின்பம். ஒட்டுமொத்தமாக வரிசையில் அமர்ந்து சீரியஸான வசனங்களுக்கு 'ம்ம்ம்..' னு ம் கொட்டிப் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு. அதற்குப் பிறகு அதே படத்தையோ அல்லது அது மாதிரியான காட்சிகளைப் பார்த்தாலே மகிழ்வான நினைவுகள் வந்துபோகும்.
பொதுவாக நகைச்சுவை உணர்வு இருப்பவர்களால் ஒரு நிகழ்வை எளிதாக எடுத்துக்கொள்ளமுடியும்.
நான் அதில் தேர்ச்சிபெற முயல்வேன் எப்பொழுதும். ஒருமுறை வீட்டிற்குள் வேலை முடித்து நுழையும்பொழுது அம்மா டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள். டிவியில் ஒரு பழையபடம். நான் கவனிக்காமல் நகர்ந்துவிட்டேன். ஆனால் அம்மா டிவியை வைத்த கண் விடாமல் பார்க்கிறார்
அப்படி என்ன படம்டா னு பார்த்தால் சிவாஜி நடித்த திரிசூலம் படம். அந்தப் படம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் அது என்ன சீன் னு....
அத தான் எழுதப்போறேன்.
அந்தப் படம் பார்க்காதவங்களுக்காக அந்தப்படத்தோட கதை .
நம்ம ஐயா அதான் சிவாஜி கதாநாயகர்ர்...கே.ஆர்.விஜயா நாயகிஈஈஈஈ.
லவ்...அப்புறமா....மேரேஜ்ஜு..அப்புறமா பிரிஞ்சிறாஙைக..
ரெண்டு மகைங்க...அவைங்களும் சிவாஜி..(சிவாஜினு ஒருமைல எழுதுறதா சிவாஜிகள்னு பன்மைல போடுறதானு தெரியல)
அந்த காலத்துல சிக்ஸ்பேக் உடம்புலாம் ஹீரோக்களுக்கு கிடையாது. அதுலயும் நம்ம ஐயா பெல்ஜம்போ பெல்பாட்டம் பாடி....ஒரு சிவாஜியே ஸ்கீரின்ல பாதி..இதுல கே. ஆர்..விஜயான்ற நாயகிஈஈஈஈஈ..ஸ்கீரின்புல்லா அவைங்கதான்.
சரி கதைக்கு வருவோம்...ஐயா காஷ்மீர்ல இருக்குறாரு...நாயகிஈஈஈஈ டெல்லில....இவ உயிரோடு இருக்கானு அவருக்குத் தெரியாது...
ஐயா வருவாருனு சாகலனும் நெத்தில பொட்டு வச்சே காத்திருக்கும் நாயகிஈஈஈஈஈ.....
இவன்தான் அப்பன்னு தெரியாம மகன் அப்பாட்ட வேலைக்குப் போறதும்...அந்தாளும் மகன்னு தெரியாம வேலை தர்றதும்...ட்விஸ்ட்டாமாமாமாமா...
சந்தேகம் வந்து அப்பா கேரக்டர் ராஜசேகர்...டெல்லி லேண்ட்லைன்ன கண்டுபிடிச்சு காஷ்மீர்ல இருந்து ட்ரங்க் கால் போட  சொல்ல்றாரு....
கனெக்ஷன் கிடைக்குது...
இருபது வருஷத்துக்குப் பின்னாடி பிரிஞ்ச ஜோடி பேசப்போற சீன்னு...
ஒரு பக்கம் காஷ்மீர்
இன்னொரு பக்கம் டெல்லி....
ஒரு பக்கம் சிவாஜி
இந்தப்பக்கம் கே ஆர் விசயா...
தமிழ்நாட்டையே அழவச்ச சீன்னு....
சிவாஜிய கேக்கவா வேணும்.....அந்த காலத்துலேயே அஞ்சு ரூபா சம்பளத்துக்கு அம்பது ரூபாய்க்கு நடிச்சவர்ரு...சேம்பிளா சொல்லனும்னா ஒரு பாட்டு...கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா....கலையெல்லாம் கண்கள் சிந்தும் கலையாகுமா...னு பாட்டு....இவர் வீல் சேர்ல உக்காந்துக்கிட்டு பாடுற பாட்டு. அதப் பாத்தீங்கனா தெரியும்...கேமராவ முன்னாடி வச்சிட்டு கேமராமேன்னும் டைரக்டரும் டீ சாப்பிட போயிருக்கலாம். இவர் முகத்துக்கு மட்டும் ஃப்ரேம் ...தனியா நடிச்சிட்டு இருப்பாரு....இந்த வகைல எம்ஜிஆருக்கு சிவாஜி பரவால..ஏன்னா எம்ஜிஆருக்கு கட்டிப்பிடிக்காம அழவே தெரியாது....காதலி...தங்கச்சி...அம்மா...மரம்...ஆட்டுக்குட்டி..இப்புடி ஏதாவது ஒண்ண கட்டிப்பிடிச்சாத்தான் நடிப்பு வரும்.....
சரி கதைக்கு வருவோம்...
சிவாஜி காஷ்மீர்ல.
இந்தம்மாவ பாக்கனுமே.. இந்தக் கட்டுரை ஆரம்பத்துல இருந்தே நாயகிஈஈஈ னு மூணு ஈஈஈஈ போட்ருப்பேன்...ஏன்னா அது கேஆர் விசயா ஸ்பெஷல்....புன்னகை அரசியாம்...அந்தம்மா சிரிச்சாலும் ஈஈஈஈ அழுதாலும் ஈஈஈஈஈ னுதான் இருக்கும்....அதான் நாயகிஈஈஈஈஈ.
சரி கதைக்கு வாங்க..
காஷ்மீர்ல இருந்து ஃபோன் போகும்.
இந்தப்பக்கம் கே ஆர் விஜயா எடுக்கும்.
ஹலோ னு சொல்வாங்க...
அவர் குரல்ல கண்டுபிடிச்சிருவாரு...
இந்தம்மா பேரு சுமதி..
அவர் அங்க இருந்துட்டு சுமதீஈஈஈஈ சுமதீஈஈ னு நாலு ஈஈஈ ய போடுவாரு....
இந்தப்பக்கம் இந்தம்மாவ கேமராகாரன் சுத்தி சுத்தி காமிப்பான். நேரா ரைட்டா வெஃப்டல தலைகீழா....புருஷன் கொரல கேட்ட அதிர்ச்சியாமா.....
அதிர்ச்சில இந்தம்மா ஃபோன்ன கீழே போட்ரும்...அதுவும் விழுந்திரும்...
இப்ப அவர காமிப்பாஙைக....
சுமதீஈஈஈஈஈ...சுமதீஈஈஈஈஈ னு கத்துவாரு...
இப்ப இந்தம்மாவ காமிப்பாஙைக...
தொங்கிட்டு இருக்குற ஃபோன் ரிசீவர எடுக்க தவழும்.
அதுவும் விழுந்து கிடக்கும்...
முகத்துல தண்ணிய ஊத்தி வியர்த்த மாதிரி காமிச்சிருபாஙைக...ஃபோன் ரிசீவர எடுக்க அவ்ளோ கஷ்டப்படும்...
கேமராகாரன் வேற கேமராவ அங்கிட்டு இங்கிட்டு காமிப்பான். ஃபோன் ரிசீவர் பக்கம் இருந்து அந்தம்மா தவழ்ற தூரத்த காமிப்பான்...
அந்தம்மாக்கு பின்னாடி இருந்து ஃபோன் எவ்வளவு தூரம்னு காமிப்பான்...
இப்ப டாப் ஆங்கிள்ல இருந்து ரெண்டு எப்புடி கிடக்குதுனு காமிப்பான்..
அந்தம்மா வியர்த்துவிறுவிறுத்து தவழ கஷ்டப்பட்டு வரும்..பேக்கிரவுண்ட் மியூசிக் வேற...
தியேட்டர்ல இருக்குற ஆடியன்ஸ்ல ஒருத்தன் டக்குனு ஸ்கிரீன கிளிச்சுட்டு உள்ள போயி ஃபோன எடுத்து அந்தம்மா கையில கொடூத்து பேசுமானு சொல்ற அளவுக்கு இருக்கும்....
இந்தப் பக்கம் நம்மாளு வேற....சுமதீஈஈஈ சுமதீஈஈஈஈ னு கத்துவாரு..
அந்தம்மா ஃபோன எடுத்ததும் அந்த காலத்துல தாய்க்குலம்லாம் கைய தட்டிருக்கும்...
அந்தம்மா ஃபோன எடுத்து " என்ன்ன்ங்ங்க....."னு சொல்லும் பாக்கனுமே.. .
ஒரே டயலாக்கு.. 
"என்னங்ககககக"
அந்தம்மா சிரிக்குதா அழுகுதானே தெரியாது..  அப்படி ஒரு ஈஈஈஈஈஈ..
நம்மாள கேக்கனுமே.....
சுமதீஈஈஈ...
நான்தேன் ராஜசேகர்ர் பேசுற்ற்றேன்ன்ன்...னு இழுப்பார்....
இந்தம்மா..வேறென்ன அதேதான்
"என்ன்ன்ன்ங்ங்ங்ககககக"
கொய்யாலே...தமிழ்நாடே அழுதுருக்கும் அந்த சீனுக்கு....பக்கம் பக்கமா...டயலாக்கு அடிப்பார் நம்மாளு...
இப்ப வாங்க கதைக்கு.  இந்த சீன் தான் ஓடுது நான் வீட்டுக்குள நுழைஞ்சப்ப....
அதுவும் கே ஆர் விசயா தவழ்ற சீன்னு....
அம்மாக்கு கண் கலங்க ஆரம்பிக்குது. ..
என்னம்மா சாப்பாடு. 
புளிக்கொழம்புடா.. சோறு நீயே போட்டுக்கோ...
அங்கிட்டு...சுமதீஈஈஈஈ சுமதீஈஈஈஈ
கேமராவ சுத்த விடுற சவுண்டு...
அம்மா...தொட்டுக்கிற என்ன....
சுமதீஈஈஈஈஈ....சுமதீஈஈஈஈஈ
நான் கேட்டது கேக்கல...
கொய்யாலே நானா ராஜசேகரானு பாத்ருவோம்...
ம்மா...தொட்டுக்கிற என்னமா....
அப்பளம்டா...னு அம்மா கண்ண கசக்குறாங்க....
நியாயமா பாத்தா வெறும் அப்பளத்துக்கு நான்தான் கண்ண கசக்கனும்...
இப்ப நான் வந்து அம்மா பக்கத்துல உக்கார கே ஆர் விசயா ஃபோன எடுத்துட்டு ஈஈஈஈஈஈஈ னுது...
ஏம்மா...இவ சிரிக்கிறாளா அழுறாளா...
எருமை...எப்புடி நடிப்பு....பாரு
இப்ப டி வில..
சுமதீஈஈஈஈ உனக்கு ஞாபகம்ம் இர்ருக்காஆஆ நான் ஒரு தடவை குங்குமச்சிமிழ்ழ்ழ் வாங்கிட்டுஉஉஉஉ வந்ந்தேன்ன்ன்.. ..னு டயலாக்...
அம்மா அழ ஆரம்பிச்சுட்டாங்க...
இப்ப நான் கேட்டேன்...
ஏம்ம்ம்மா...தனம்ம்...புளிக்கொழம்புனு சொன்ன...புளி மட்டும்தேன் இருக்கு....கொழம்பக்க்க் காணாம்ம்ம்மேஏஏஏஏஏஏஏஏஏ (சிவாஜி சாரி ராஜசேகர் மாடுலேஷன்ல....)
அம்மா சிரிக்கிறாங்க...
அந்த சீன்ன நான் சீரியஸா உள்வாங்குனாலும்
இப்ப வரை அந்த சீன் எனக்கு ஹியூமர் தான்...
.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....