முதல் பிறழ்வு
முதல் பிறழ்வு முதல் பிறழ்வுனு தலைப்பைப் பார்த்ததும் பிறழ்வு பொறழ்வுனு கவிதை கிவிதை எழுதிருவேனு வயசானவங்கலாம் நெஞ்ச பிடிச்சிர வேணாம். அதுலாம் பண்ண மாட்டேன். பயப்படாம படிக்கனும். அப்புறம் ஏன் பிறழ்வுனு தலைப்புனா அப்படித்தான்....ஒரு அந்தி வேளை நேரம், ஆகச்சிறந்த தருணம், மழைமுடிந்த இரவு, பிரயத்னம், இப்படிலாம் வார்த்தைகள போட்டாத்தான் நமக்கு இலக்கியவாதினு மார்க் போடுறானுக சீனியர் இலக்கியவாதிக... சரி விடுங்க...விசயத்துக்கு வாங்க மக்களே.. சமயத்துல முதன்முதலா ஏதாவது ஏடாகூடமா பண்ணி அது சொதப்பிருக்கும். உடனே இப்படித்தான் அந்த காலத்துல னு சீரியஸா கதை சொல்லாதீங்க..நான் சொல்லப்போறதுலாம் வெட்டிக்கதை தான். முதல் தடவையா பண்ண மிஸ்டேக் பற்றிய வெட்டிக்கதை.( யாருய்யா அது கல்யாணம் அந்த லிஸ்ட்ல வருமானு மனசுக்குள கேக்குறது....) மெடிக்கல் ரெப் ஆகி நான் பஜாஜ் எம்80 வண்டி வச்சிருந்தேன். மதுரைல இருந்து வெளியூருக்கு வண்டில போறதா இருந்தா நானும் என் நண்பனும் சேர்ந்து போவோம். அவன் புதுசா வண்டி வாங்குனான். அதுவும் பைக்.ஸ்பெலணடர் ப்ளஸ் பைக். புது பைக் ல திருப்பாசேத்தி ஒரு நாற்பது கி.மீ இருக்கும். போக்லாம்