தூங்குறியா.....
தூக்கம் என்பது என்ன. ஒரு மனிதன் ஆரோக்கியமான வாழ்விற்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கத்தில் மூளை என்ன வேலை செய்கிறது இப்படி அறிவியல் சம்பந்தமான கட்டுரைய எதிர்பார்க்குற தோழர்கள்லாம் அடுத்த தெரு வழியா போகலாம். இது நான் பார்த்த உணர்ந்த தூங்கிய தூக்கத்தைப் பற்றியது. பொதுவாக தூங்கனும்னா சில டெக்னிக் இருக்கு. மாத்திரை போடுவானுக. டி.வி பார்ப்பானுக. புக் படிப்பானுக. . இரவு படுக்கைல மல்லாக்க படுத்தாத்தான் தூக்கம் வரும் இல்லாட்டி குப்புறக்கா படுத்தாத்தான் தூக்கம் வரும்ன்றது லாம் வேற கணக்கு. எனக்கும் தூக்கத்திற்கும் உள்ள பல தருணங்களைத் தொகுத்தா இப்படி வருது. கரிமேடு மார்க்கெட் பகுதில முத்து ஸ்கூல் இருக்கு. அதான் நம்ம ஆரம்பப்பள்ளி. அஞ்சாப்பு வரை அங்க தான் படிச்சேன். (அஞ்சாப்பு என்பது ஐந்தாம் வகுப்பு என்று அர்த்தம்..யுவ புரஸ்காருக்குலாம் ட்ரை பண்ணாதனால பேச்சு டமிளில எழுதுறேன்..) அஞ்சாவது படிக்கிறப்ப ஆயுத லட்சுமி டீச்சர் தான் க்ளாஸ் டீச்சர். உடனே தமிழுக்கு ஒருத்தங்க ஆங்கிலத்துக்கு ஒருத்தங்கனு நினைக்காதீங்க. அவங்க தான் ஆள் இன் ஆல். ஆள் ரொம்ப குட்டையா இருப்பாங்க. ஒல்லியா இருப்பா