இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மின்னலைப் போல...

எல்லாமே மின்னலைப் போலத்தான் கடக்கின்றன. யாரும் பார்த்தறியாத் தருணங்களில் கைகளை வேகமாக ஒன்றிணைத்து விடுவித்துக்கொள்வதும்.. ஒவ்வொரு கண்களைப் பார்த்தும் விலகி நம் கண்களுக்குள் மட்டும் சம்பாஷணைகளைத் தொடுத்துக்கொள்வதும்.. சின்னஞ்சிறிய அதனினும் நுண்ணளவிலான ஆசை கொண்டு கொண்டாடியத் தருணங்கள் எல்லாமே மின்னலைப் போலத்தான் கடக்கின்றன. பிடித்தப் பாடலின் அந்த வரிகளைக் குறுக்கிடும்பொழுது பகிர்ந்த முத்தங்களைப் போல மின்னல்களும் கடந்துவிடுகின்றன மேகத்தில் விழுந்தக் கீறல்களைத் தெரியப்படுத்தாமல்.....

இந்த அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன்.

இந்த அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன். இந்த காலி  இருக்கையில் நீ வந்திருந்தால் அமர்ந்திருக்கலாம். பாதி படித்து  மீதிப் பக்கங்கள்  திறந்தபடியே கிடக்கும் இந்தப் புத்தகத்தை நீ எடுத்துப் புரட்டியிருக்கலாம். ஒழுங்கற்றுக் கிடக்கும் என் மேசைக் காகிதங்களை வரிசைப்படுத்தி நீ அமரலாம். சுவற்றில்  சாய்ந்தபடி தொங்கும் ஒரு பிள்ளையாரை நீ  நேராக்கி வைக்கலாம். நேற்றைய நாளில் இருந்து இன்றைய நாளுக்குக் கிழித்து வைக்கலாம். சமமற்ற மின்சாரப்  போக்கால் குளிர்சாதனப்பெட்டி மின்னழுத்தச் சத்தம்  கொடுக்கையில் தெரிகிறது இந்த அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன். மறுபடியும் இந்த இருக்கை காலியாகத் தானே  இருக்கிறது. பாதிப் பக்கங்கள் புரட்டப்படாமல் தானே புத்தகம் திறந்து கிடக்கிறது. ஏதோ ஒரு தனிமை தானே இந்தக் காகிதங்களை வீசியிருக்கிறது. உன்னால் நேராக பிள்ளையார்  வெறும் குறியீடு தானே.. காலண்டர்களில் இன்றுகள் உன்னால் துவங்கப்படாமல் இருக்கின்றன.. என்னைப்போலல்லாது இந்தக் குளிர்சாதனப் பெட்டி ஏன்  சமமற்ற அழுத்தத

பனை விதைக்குள் செங்குத்து நிழல் - சென்றாயன் (முன்வைத்து)

கவிஞர் சென்றாயன் அவர்களின் " பனை விதைக்குள் செங்குத்து நிழல்"                                   தொகுப்பை முன் வைத்து ஒரு கவிதையை நாம் எதற்குப் படிக்க வேண்டும். வாசகனைப் பார்த்துக் கேட்பது போல் ஒரு கவிஞனை அல்லது ஒரு படைப்பாளியைப் பார்த்துக் கேட்க முடியாது. அப்படிக் கேட்பது இங்கு அனைவரின் சார்பாக ஏதாவது ஒரு மன்றத்தில் ஏதாவது ஒரு படைப்பாளிடம் கேட்டிருக்கலாம். ஆனால் ஒரு வாசகனிடம் இப்படிக் கேட்பது மிகவும் ப்ரியம் கொண்டதாக இருக்கிறது. கவிதைகள் பிடிக்கும் என்போரைப் போன்றே கவிதைகள் பிடிப்பதில்லை எனச் சொல்வோரும் உண்டு. சக வாசகன் கவிதையை ஒதுக்க நேரிடும்பொழுது இன்னொரு வாசகன் கவிதை பிடிக்கும் என்பது எப்படி சாத்தியமாகிறது. இலக்கியம் பல வகை ஒழுக்கக் கூறுகளைக் கொண்டது போல் கவிதையையும் ஓர் ஒழுக்கக்கூறாகவே எடுத்துக்கொள்ளலாம். ஒழுக்கக் கூறு என்ற சொல்லாடல் புதியதாக இருக்குமானால் அளவை என்று கூட படித்துக்கொள்ளலாம். கவிதையைக் கையாள்வது கடினமானக் காரியம் என்றே நான் கருதுகிறேன். ஒரு சிறுகதை படிப்பதைக்காட்டிலும் ஒரு கவிதை படிப்பது பல அனுபவங்களை எனக்குப் புகட்டுவதாகவே உணர்கிறேன். வாழைப்பழத

மறதி நோய்...Dr Neethiarasu அவர்களின் உரையை முன் வைத்து

08/07/18 அன்று மதுரை வாக்கர்ஸ் க்ளப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் விருந்தினராக வந்த  DR.நீதி அரசு , நரம்பியல் நிபுணர்,மதுரை அவர்களின் சொற்பொழிவை முன்வைத்து.... வாக்கர்ஸ் க்ளப்பில் சில சமயங்களில் மாதாந்திரக்கூட்டம் நடக்கும். அறுபது சேர்கள் கூட்டத்தைப் பார்த்து பார்த்து போடப்படும். பொதுவாக முப்பது நபர்கள் ஆஜர் ஆவார்கள். கூட்டம் ஒரு பெரிய பூங்காவின் நடுவே மரத்தடியில் நடப்பதால் ஆங்காங்கே அமர்ந்திருப்பவர்கள் நடப்பவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே நடப்பார்கள். இன்று நடந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட இருநூறு நபர்கள் இருப்பார்கள். ஆங்காங்கு நின்று டாக்டர் நீதி அரசின் சொற்பொழிவைக் கேட்டார்கள். அதற்கானக் காரணம் இரண்டு. ஒன்று சில மாதங்களாகவே வாட்ஸப் ஆடியோ வழி மருத்துவர் நீதி அரசு அவர்களின் ஆடியோ ஒன்று குழந்தைகளுக்கான நரம்பியல் சம்பந்தமான அறுவுரை ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. இன்னொன்று இன்று எடுத்துக்கொண்டத் தலைப்பு - மறதி நோய் வராமல் தடுக்க என்ன செய்வது. (prevention of Dementia) ஞாபக மறதி அவ்வளவு பெரிய நோயா என்று நீங்கள் கேட்டால் நெட்டை போய் பாருங்கள். நாம் அந்த நோய்க்குள் போய்க்கொண்டி