மின்னலைப் போல...
எல்லாமே
மின்னலைப்
போலத்தான்
கடக்கின்றன.
யாரும்
பார்த்தறியாத்
தருணங்களில்
கைகளை வேகமாக
ஒன்றிணைத்து
விடுவித்துக்கொள்வதும்..
ஒவ்வொரு கண்களைப்
பார்த்தும்
விலகி
நம் கண்களுக்குள்
மட்டும்
சம்பாஷணைகளைத்
தொடுத்துக்கொள்வதும்..
சின்னஞ்சிறிய
அதனினும்
நுண்ணளவிலான
ஆசை கொண்டு
கொண்டாடியத் தருணங்கள்
எல்லாமே
மின்னலைப்
போலத்தான்
கடக்கின்றன.
பிடித்தப் பாடலின்
அந்த வரிகளைக்
குறுக்கிடும்பொழுது
பகிர்ந்த முத்தங்களைப்
போல
மின்னல்களும்
கடந்துவிடுகின்றன
மேகத்தில் விழுந்தக்
கீறல்களைத்
தெரியப்படுத்தாமல்.....
கருத்துகள்
கருத்துரையிடுக