ஃபீனிக்ஸ்
அடுப்பில் பால்பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அம்மாவை படுக்கையில் இருந்து எழுப்பி சுவற்றில் சாய்ந்திருக்குமாறு அமர வைப்பதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. வேகமாக அடுப்படிக்குள் ஓடி வந்து அடுப்பை அணைத்துவிட்டு பாலை இறக்கினாள். வெள்ளாவியாய் பாலிலிருந்து ஆவி பறந்தது போல் இருந்தது. பால் பாத்திரத்தை நகர்த்தியதும் வெள்ளையில் மஞ்சள் பூத்த அந்தப் பாலின் நிறம் சூடானது தெரிந்தது. சற்று பால் ஆறுவதற்குள் பாத்ரூமிற்குள் சென்று குழாயை மெதுவாகத் திறந்து அதனடியில் பெரிய வாளியை வைத்தாள். அம்மாவிற்கு காஃபி போட்டுவிட்டு வருவதற்கும் அந்த வாளி நிறைவதற்கும் ஏற்றபடி அந்தக் குழாயைச் சன்னமாகத் திறந்துவைத்தாள். இப்பொழுது அவளுக்கு நேரம் இல்லை. அம்மா ஒரு சர்க்கரை நோயாளி. சர்க்கரை அதிகமாகி ஒரு காலில் விரலை வெட்டி விட்டார்கள். ஒரே மகள் என்றால் அம்மாவிற்கு யார் இருக்கிறார்கள். அப்பா டிவிஎஸ் ஆலையில் மேற்பார்வையாளர். இந்த டிவிஎஸ் ஆலையில் வேலைபார்ப்பவர்களுக்கு விசுவாசம் எப்படித்தான் வருமோ தெரியாது. அந்த ஊழியர்களின் வீட்டில் எல்லாம் அந்த தாத்தா பாட்டியின் படம் வைத்துவிடுகிறார்கள். ஓவர் டைம் என்றால் முகம் சுளிக்காது ப