இடுகைகள்

பிராட்....பிராராராட்....பேண்ட்

ஓர் உறவுக்காரர் என்னை அழைத்து அவருடைய பிராட்பேண்ட் இண்டர்நெட் கனெக்ஸன் சரியில்லையெனவும் அதை எங்கு புகார் செய்யவேண்டும் எனவும் கேட்டார். நமக்குத் தான் சமூக சேவைனா ஆளா பறப்போமே.....பரவாயில்லை நானே புகார் செய்ஞ்சுறேனு வாக்குக் கொடுத்தேன்.....அங்க ஆரம்பிச்சது என்னோட இந்த வாரம்...... மதுரையில இருக்குறவங்களுக்குத் தெரியும் பி.ஸ்.என்.எல் ஆபிஸ் அமைப்புப் பற்றி. மதுரை தமுக்கம் மைதானத்திற்கெதிராய் பல ஏக்கர் நிலப்பரப்போடு தலைமை போஸ்ட் ஆபிஸ், டெலிபோன் எக்ஸ்சேஞ் என எல்லாம் சேர்ந்து ஒரே இடம்.....ஆனால் பயங்கர இட வசதி....... அந்த ஆபிஸிற்கு இரண்டு நுழைவுவாயில்கள் கிழக்கு பார்த்து ஒன்று......(அது ஒரு மெயின் ரோடு) வடக்கு பார்த்து ஒன்று அது ஒரு மெயின் ரோடு. நான் கிழக்கு பார்த்த ரோட்டில் உள்ள வாசல் வழியே நுழைந்தேன்....வாடிக்கையாளர் சேவை மையம் னு போட்ருந்தானுக.....வண்டிய பார்க் பண்ணிட்டு நானும் என் நண்பனும் வாடிக்கையாளர் சேவை பிளாக்கிற்கு நடந்தோம். நமக்குத்தான் மூளை கண்ணாபிண்ணானு வேலை பார்க்குமே.......அதுவும் ஒரு மணி வெயில்வேற....எப்படியிருக்கும்......கேக்கவா  வேண்டும்.....ஒரு மரத்தட...

சும்மா ஒரு கதை...

அம்மா வேகமாம்மா .... டைம் ஆயிருச்சு ...... பரபரப்பாய் கிளம்பினான் ப்ரவீன் . முழுப்பெயர் ப்ரவீன் குமார் . வீட்டின் வெளியே இவன் நண்பர்கள் காத்துக்கொண்டிருந்தனர் . முக்கியமாக மாடசாமி ( கல்லூரிப் புகழ் மண்டையன் ) கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 2 நாள் முகாம் ஒரு கிராமத்தில் . கல்லூரியிலிருந்து அக்கிராமம் வந்தடைந்தார்கள் . அக்கிராமத்தில் ஒரு கண்மாய் . அக்கண்மாயிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் . ஆனால் கால்வாய் முழுதும் முள்செடிகளும் , மணல்மேடுகளும் , சிதைந்த கரைகளுமாய்ருந்தன . அதைச் சீர் செய்ய 4 கல்லூரிகளின் மாணவர்கள் வந்திருந்தனர் . அதில் தான் நம் ப்ரவீன்குமாரும் , மண்டையனும் . பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேலைகள் பகிரப்பட்டன . ப்ரவீனும் , மாடசாமி என்ற மண்டையனும் அரிவாள் , மண்வெட்டி சகிதமாக ஒரு ட்ராக்டரில் மற்ற மாணவர்களுடன் கிளம்பினர் . " ஏண்டா மண்டையா ! இவனுக கூப்பிட்டு போறத பார்த்தா ... கண்மாயிலிருந்து கடல் வரைக்கும் தூர் வாறனும் போலேயே .... இல்ல ப்ர...

"வியலும்....ஸ்டார்ட் ம்யூசிக்"

அப்பொழுது நான் முதுகலை முதலாண்டு படித்துக்கொண்டிருந்தேன். வேதியியல் துறை. வேதியியல் துறை என்னையும் ஒரு வேதிப் பொருளாக மாற்றிக்கொண்டிருந்தது. அப்போது யாராவது கவிதை எழுதுகிறார்கள் என்றால் ஆர்வமாகப் படிப்பேன். நமக்குக் கவிதை அவ்வளவாக வராது. (அவ்வளவாக என்பது அபாண்டம்....சுத்தமாக வராது) ஆனலும் முயற்சி செய்வேன். வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு ஒன்றுக்குக் கீழாய் ஒன்று எழுதி கவிதை எனப் பிரகடனம் செய்துவிடுவேன்.(இப்ப வரைக்கும் அப்படித்தான்)... அச்சமயங்களில்....என் வீடு...சொல்லியே ஆகனும்... என் தந்தை- ஜாலியான அப்பா....கண்டிப்பான தமிழ் ஆசிரியர். என் தாய்- கண்டிப்பான அம்மா...கண்டிப்பான ஆசிரியை. டிஸிப்லின் னு வந்துட்டா....அதாங்க ஒழுக்கம்...னு வந்துட்டா...மிலிட்டரி ஆபிஸர்ஸ் மாதிரிதான்.... என் அண்ணன்- ஒரு வினையூக்கி (கெமிஸ்ட்டரி படிச்சவங்களுக்குத் தெரியும்.....வினையூக்கி வினையில் ஈடுபடாது....ஆனால் வினையை வேகப்படுத்தும்) போல் தான்... படிப்பு ஒழுக்கம் தவிர வீடு ஜாலி எல்லாரையும் சொல்லிட்டேன்...அப்புறம் நான்...நம்ம செயல்பாடு பாருங்க தெரியும்..... வீட்ல லேண்ட்லைன் ஃபோன் இருக்கும்... ஆனால் ரொம்ப நே...