கொழுப்பு

மாரடைப்பு ஒரு மரணத்தை விழுங்கியிருக்கிறது. மாரடைப்பு என்பது என்ன...
அதிலிருந்து தப்பிக்க வழி என்ன...
இதெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். தெரியாமலிருந்தாலும் இனிமேலாவது மருத்துவரைச் சந்தித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இருந்தாலு சில எளிய முறைகள் உள்ளன.

உங்கள் உயரம் என்ன...
உங்கள் எடை என்ன...
உயரத்திற்கேற்ற எடை இருக்கிறதா....
உதாரணத்திற்கு உங்கள் உயரம் 165 செமீ. என வைத்துக்கொள்வோம்.
உங்கள் எடை 65கிலோவில்ருந்து 68 இருக்கலாம். இது தான் மிகச்சரியான ஆரோக்கியமான சமநிலை.

இல்ல....அவ்வளவு மெலிஞ்சுட்டா..நல்லாருக்காது...பாக்குறவங்க நம்மள பாத்து " என்னப்பா இப்படி மெலிஞ்சுட்ட னு சொல்றது கஷ்டமாருக்கு" இப்படிலாம் பேசுனீங்கனா...நீங்க நெஞ்ச பிடிச்சு உட்காருறப்ப எவனும் கூட வரமாட்டான். (இது என் பஞ்ச்)

இப்பொழுது 30 வயதுகாரர்களுக்குக் கூட சர்க்கரை வியாதி, மாரடைப்பு வருகிறது.

முதலில் உடல்நிலையைப் பொறுத்தவரை நாம் எப்படி யிருக்கிறோம் என்பதை முதலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

உடல் எடை உயரத்திற்கேற்றவாறில்லாம் கூடுதலாக இருந்தால் லிபிட் டெஸ்ட் எடுத்துப் பார்க்கவேண்டும். அதாவது கொழுப்பு.

உடல் எடைக்கு அதுவும் காரணமாயிருக்கலாம்.  அந்த டெஸ்டில் LDL(இது தாங்க கெட்ட கொழுப்பு...மோசமானது), அப்புறம் triglycerides (இவனும் மோசமானவனுங்க) HDL (good chloesterol...but to be improved by aerobic exercises) இப்படினு ஏராளமான சமாச்சாரம் இருக்கும்

மாரடைப்பு னா கொச்சைத் தமிழில் சொல்லலாம்னா எப்படி சொல்றது....இதயத்துக்கு இரத்தம் சரியா போகல னு அர்த்தம். scientific கா சொல்லனும்னா ஆக்ஸிஜன் போகல...

சரி...இரத்தம் ஏன் போகல...அது போகாதனால தான் மாரடைப்பு வருது.

எங்கேயோ அடைப்பு இருக்கும் அதான் போகல....
இவ்வளவு நாளா இல்லாத அடைப்பு என்ன புதுசா வருது...

இப்பத்தான் நம் உடம்பில் இருக்குற கொழுப்பு கதைக்கு வர்றேன். இப்படி அதிகமா இருக்குற கொழுப்பு என்ன ஆகும்னா...இரத்தக் குழாய்களில் உள்ள போய் உட்கார்ந்திக்குரும்.

உதாரணத்திற்கு வீட்டு மொட்டை மாடியில் போர் வாட்டர் டேங்க் இருக்கு. ரொம்ப நாளாச்சுனா உள்ள உப்பு படியுதுல அப்படி.

அது மாதிரி எக்ஸ்ட்ரா கொலஸ்ட்ரால் இரத்தக் குழாய்களில் உள்ள படிஞ்சிக்குரும். அதுனால இரத்தம் சரியா அதோட நார்மலான ஸ்பீட்ல போகமுடியாது. (விவிரம் தெரிந்தவர்களுக்கு எத்திரோக்ளியோரசிஸ் என்று சொன்னால் புரியும்) அதுனால என்னாகும் இரத்தம் ஓட்டம் தடைபடும்.

இரத்தம் எப்போதுமே ஓடிக்கிட்டே இருக்கணும். கொஞ்சம் நின்றாலே என்னாகும்.....உறைஞ்சிரும் ..(உங்க தமிலில் சொல்லனும் னா க்ளாட் ஆகிரும்)  இரத்தம் அழுத்தம் அதிகமாகும். அதுனால மாரடைப்பு வரும்.

இது ஒரு பகுதி தான். வயது மூப்பு, சர்க்கரை நோயினால் வரும் பாதிப்பு இதுலாம் தான் காரணம்...

இதைத்தவிர மனஅழுத்தம் கூட காரணமாக இருக்கலாம்.

டாக்டர் எதுக்காக நட நட னு சொல்றாங்க....உடம்ப குறைக்க...உடம்ப குறைக்கிறதுனா...கொழுப்ப....உயரத்திற்கேற்ற எடை இருக்க...

சரிங்க பாஸ் உய்ரமும் எடையும் சரியா இருக்கு...அப்ப மாரடைப்பு வராதா னு கேட்கக் கூடாது. ஏன்னா அதுக்குத்தான் பல காரணம் சொல்லியிருக்கேன்.

கொழுப்பு அளவையும் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும். இதைப் பற்றிய அறிவியல் இல்லாதவர்களுக்கு ஒரு குண்டு வைக்கிறேன். LDL  மற்றும் triglycerides  போன்றவை எவ்வளவு இருக்க வேண்டும் என்ற அளவையை மிகவும் மீறி விட்டால் ஒருவரால் மீண்டும் அதை மறுபடியும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது சிரமம். மாத்திரையைத் தவிர வேறு வழியில்லை.

நான் பரிசோதனை செய்தபொழுது LDL  எனக்கு பார்டர் லைன்.
அசைவ சாப்பாடு வாரம் ஒருமுறை என்பதை மாதம் ஒருமுறை ஆக்கிவிடுதல் நலம் எனத் தோன்றியது.
தேங்காய் சட்னி கொழுப்பு அதிகம் உள்ள பதார்த்தம்...(இதை ஏன் சொல்றேன்னா...சில பிரகஸ்பதிகள் நான் அசைவமே சாப்பிடுறதில்லை....ஆனா கொழுப்பு மட்டும் ஏறிட்டே போகுது...டாக்டர் ஏமாத்துறான்..நு பீலாவிடுங்க....ஆனா வீட்டு கிட்சனுக்கு போனா த் தெரியும்...தேங்காய் விட்டு விலாசுவானுக....தப்பு மக்கா...தப்பு......)

என் நண்பன் ஒருவனுக்கு வயது 34. இரத்த அழுத்தம் 150 க்கு மேல சூட்டப்....அது எவ்வளவு இருக்கனும்னு தெரியுமா....(120/80....இத தெரிஞ்சுக்காம இராஜபக்சே வுக்கு மோடி அழைப்பு விடுதத்து தப்புனு ஸ்டேடஸ் போட்டா உங்கள மாதிரி மஞ்ச மாக்கான் யாருமில்லங்க....முதல் நம்மள பாப்போம்...)

நண்பனுக்கு 150க்க் மேல போனதும் எனனைய கூப்பிட்டான். அவனும் மார்க்கெட்டிங்க் வேலை...பிரஸ்ஸர் இருக்கும் உண்மை தான் அதுக்காக இவ்வளவா...
உன் உயரம் என்னடா நு கேட்டேன். எடை என்ன னு கேட்டேன்
ரெண்டுக்கும் வித்தியாசம் பாத்தா நம்ம ஸ்நேகிதர் 20 கிலோ எக்ஸ்ட்ரா இருக்கார்.
அப்புறம் ப்ளட் பிரஸ்ஸர் எகிறாம கொஞ்சவா செய்யும்...

டாக்ட்ர பாரு னு சொன்னேன். அதுக்கு முன்னாடி லிபிட் டெஸ்ட் எடு னு சொன்னேன். (நம்ம சொன்னா எவன் கேககுறான்)

நம்ம சார் கேக்கல... டாக்டரையும் பாக்கல...

2 நாள் கழிச்சு சார் (அதாங்க நம்ம ஸ்நேகிதர்ர்ர்ர்) போன் பண்ணினார்....

என்னடா டாக்டர பாத்தியா
இல்ல....கம்பெனி பிரஸ்ஸர்னு விட்டுட்டேன்...
சந்தோசம்...இப்ப என்னடா....
யூரின் போறப்ப நுரை அதிகமா போகுது....(சிரிக்கக்கூடாது மக்கா...கதைய கேளுங்க...)

பிரஸ்ஸர் செக் பண்ணியா....
ம்.....180 தான்...

டாக்டர பாரு...

அடுத்த நாள் பாத்துட்டான். லிபிட் டெஸ்ட் , யூரின் டெஸ்ட்....

ரிசல்ட் பாத்தா....நான் சொன்ன LDL , triglycerides  எல்லாமே இருக்க வேண்டிய அளவுக்கு மூன்று மடங்கு அதிகம்.

யூரின் டெஸ்ட் ல சில பிரச்சினைகள்.
டாக்டர் இரத்த அழுத்தம் குறைய மாத்திரைகள் எழுதிவிட்டு , கிட்னி ய பாக்க கிட்னி டாக்டருக்கு அனுப்புறாரு...(நெப்ராலஜிஸ்ட்)

நெப்ராலஜிஸ்ட் பரிசோதனை செய்ததில்...நண்பரின் உடம்பில அதிகமான கொழுப்பு கிட்னியின் மேல் படிந்து....கிட்னியை சரியாய் வேலை பார்க்கவிடவில்லை. விளைவு...கிட்னி உடம்பிற்கு த் தேவையான புரதங்களை எடுத்துக்கொள்ளாமல் வெளியேற்ற ஆரம்பித்துவிட்டது...அதனால் தான் நண்பர் சொன்ன நுரை அதிகம் வருதல்.

இது எல்லாவற்றிற்கும் மூலகாரணம் கொழுப்பு அதிகமாதல். இப்பொழுது நண்பர் எடை குறைத்து மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கிறார் உணவு விசயத்தில். எடை குறைநததால் எல்லோரும் கவலைப்படுகிறார்களாம்.

ஒன்று தான் மக்கா....முந்தில்லாம் திண்ணையில உக்காந்திருக்குற கிளவி...என்னாடா மெலிஞ்சுட்ட....நல்லா சாப்ப்பிடுடா...னு சொல்லும்...
இப்ப யாரும் சொன்னாலும் கவலை படாதீங்க.......சந்தோசமா இருங்க.......

சும்மாவா நம ஸ்கூல் டீச்சர்லாம் திட்டினாங்க.....கொழுப்பு அதிகம்டா உனக்குனு.....அதிகம்னா பிரச்சினைதான்.....

எங்க இத படிச்சுட்டு எத்தன பேர் எடை உயரம் இரத்த அழுத்தம் னு யோசிப்பீங்க......

யோசிங்க பாஸ் ....யோசிங்க.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....