நிறுவு 4
பொதுவாக ரிலையன்ஸ் அல்லது பிக் பஸார் போன்ற டிபார்ட்மெண்ட் கடைகளுக்குச் செல்லுகையில் ஒரு ரூபாய் குறைவாகக் கிடைக்கிறதா என்று பார்க்கிறோம். ஆனால் கடை வீதிகளில் நாமே மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து கடைகளுக்குச் சென்றோமேயானால் அதை விடக் குறைவாக வியாபாரிகள் தருவார்கள். நேரமின்மை, அலைச்சல் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நானும் கூட சில பொருட்களை இப்படிப்பட்ட டிபார்ட்மெண்ட் கடைகளில் வாங்குவதுண்டு.
ஆனால காய்கறிகளை மட்டும் மார்க்கெட்டில் அல்லது உழவர் சந்தையில் வாங்குவதுண்டு. விவசாயிகள்நேரடியாக பயன்பெறட்டும் என நினைப்பதுண்டு. காலையில் உழவர் சந்தைக்குச் சென்று காய்கறி வாங்கச் சென்றேன்.
சில விசயங்கள் புரிவதில்லை. பீட்ரூட் 20 ரூபாய் என்றார். எனக்குக் கால் கிலோ போதுமென்றேன். கொடுத்தார். பிறகு பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு வாங்கிவிட்டு எவ்வளவு என்றேன். அந்தந்த காய் கூடைகளைப் பார்த்து மனப்பாடமாய் கணக்குச் சொன்னார். 68 என்றார். அவர் பீட்ரூட்டைப் பார்த்துச் சொல்லும்பொழுது மட்டும் 20ஐ கூட்டினார். பீட்ரூட் எவ்வளவு என்றென். 20 என்றார். கால் கிலோவா என்றேன். ஓ...10 தான் என்று மீதி பத்து ரூபா கொடுத்தார். வெண்டை 24 என கடையின் பலகையில் எழுதப்பட்டிருந்தது. கால் கிலோ வாங்கினேன். 10 ருபாய் வாங்கினார். சில நேரங்களில் டிபார்ட்மெண்ட் கடைகளுக்கு இவர்களே நம்மை அனுப்புகிறார்களா எனத் தோன்றுகிறது. அவ்வளவு எளிதாக ஒருவரை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது மிகவும் எளிதாகிவிட்டது.
பணம் பண்ணுவது தான் குறிக்கோள். ஆனால் அதற்கான உழைப்பைக் கொடுக்க முன்வருவதில்லை மக்கள். Reputation என்பது என்ன. அதற்கான ஆழமான வரையறை என்ன....அது எப்படி கிடைக்கும்.
வெண்டைக்காயை 4 ரூபாய் அதிகம் விற்றது அவரது வியாபாரத் தந்திரம்எ ன்று சொல்லிவிடமுடியாது. இன்றைக்கு காயை எப்படி விற்பது என்பதில் தான் அவர் இருந்திருக்கிறார். ஆனால் ஒரு புதிய வாடிக்கையாளர் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்றோ அவர் வாடிக்கையாக அவரது கடைக்கு வர வேண்டும் என்று அவர் நினைக்க வில்லை. short term and long term benefits என்று இருக்கிறது.
என்னுடைய நிறுவனத்திற்கு ஆள் வைத்து வேலை செய்யுமளவிற்கு வருமானம் இல்லாத சூழல். ஆனால் ஆள் யாரையாவது நியமித்தால் தான் வியாபாரம் பெருகும் என்ற நிலைமை. பகுதி நேரத்திற்கு யாராவது வருவார்களா என நினைக்கையில் ஒரு பாலிடெக்னிக் மாணவன் வந்தான். மிகவும் கஷ்டப்படுவதாகவும், தந்தை வேலையில்லாமலிருப்பதாகவும், அம்மா சாதாரண கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலைக்குச் செல்வதாகவும், அவனுடைய செமஸ்ட்டர் கட்டணத்தைக் கூட வேலை பார்த்துத்தான் கட்டவேண்டிய சூழல் என்றும் அவன் கூறினான். சாயங்காலம் 5 மணியிலிருந்து 9 மணிவரை வேலை. தினமும் 100 ரூபாய் சம்பளம் என பேசப்பட்டது. சாயங்காலம் கல்லூரி முடித்து என் அலுவலகத்திற்கு வரவேண்டும். நாங்கள் பில் அடித்து வைத்திருப்போம். மருந்துகளை பெட்டியிலிட்டு பார்சல் செய்து வெளியூருக்குரிய லாரி நிறுவனங்களில் அதை புக் செய்து விட வேண்டும் மற்றும் மருந்து கடைகளுக்குச் சப்ளை செய்ய வேண்டும். அதிகபட்சமாக 8 கி.மீ க்குள் தான் அவனுக்கு வேலை கொடுக்கப்படும். லாரி நிறுவனங்களும் அவன் இல்லத்திற்கு அருகிலேயே இருப்பதால் அவனுக்கு அவ்வேலை எளிது. ஒரு நாளைக்கு 2 மருத்துவமனைகள் மட்டுமே வழங்கப்படும்.
அவன் 5 மணியிலிருந்து 6 மணியாக மாற்றிவிட்டான். கல்லூரி முடிவது அப்பொழுதுதான் என நாங்களும் விட்டுவிட்டோம். இப்பொழுது 8 மணிக்கு மேல் வெளியே இருந்தால் அம்மா திட்டுவார்கள். அவர்களுக்கு நான் வேலை பார்ப்பது தெரியாது , தெரிந்தால் பணத்தை வாங்குவார்கள் எனவும் கூறினான். ஆதலால் எங்களுக்கு பிரஸ்ஸர் கொடுத்தான். அவன் வருவதற்குள் நாங்களே பேக் செய்து அடுக்கி வைத்து விடுவோம். அவன் வந்ததும் பெட்டிகளை எடுத்து விட்டு சென்றுவிடவேண்டும்.
இப்பொழுது 100 ரூபாய் பத்தாது 150 கொடுங்கள் என்று கூறியிருக்கிறான்.
வேலை செய்வதும், அதற்கான ஊதியத்தைப் பெறுவதும் ஒரு கலை என்பது போல்,
வேலை பெறுவதும், அதற்கான ஊதியத்தைக் கொடுப்பதும் மிகப்பெரிய கலை.
இப்பொழுது வேலையெல்லாம் இருக்கிறது.
ஒவ்வொரு மருத்துவமனையிலும், ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பிளம்பர் வேலை , எலக்ட் ரீசியனும் தேவையிருக்கிறார்கள். அவ்வளவு எளிதல்ல இப்படி வேலைக்கு ஆட்கள் கிடைப்பது.
உழைப்பைக் காட்டிலும் அதிகமான ஊதியத்தைப் பெறுகையில் தான் ஆளுமையும், மேலாண்மையும் தேவைப்படுகிறது.
வேலையும் அதற்கான முக்கியத்துவமும் கருத்திற்கொண்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
செருப்பு பழுதாகிறது. செருப்பு தைப்பவரிடம் செல்கிறேன்.
சின்ன தையல் போதும்.
முழுதும் சுத்தி தைக்கட்டுமா என்கிறார்.
வேண்டாம்.
சின்ன தையல் போடுகிறார்.
எவ்வளவு
பத்து ரூபாய்.
ஆனால் ஐந்து ரூபாய் தான் தகும் அவ்வேலைக்கு.
ஆனால் பேரம் பேசவில்லை. பாவம் அவரால் அவ்வளவு தான் கேட்கமுடியும். ஒரு வேலையை செய்துவிட்டு கூடுதலாய் கேட்கிறார் பிச்சை எடுக்காமல், திருடாமல்.
கொடுக்கலாம்.
பிச்சையிடுவதைக் காட்டிலும் உழைப்பவருக்குக் கொடுக்கலாம்.
அந்த மனிதத்தைத் தவறாகப் பயன்படுத்த இச் சமூகத்தில் நிறைய ஆள் உண்டு.
மனிதர்களை ஆள்வது அவ்வளவு சாதாரணமானதல்ல. ஆனால் உளவியல் ரீதியாக நாம் அணுகிறோமென்றால் எல்லாம் எளிது.
இன்னும் நிறுவலாம்......

கருத்துகள்
கருத்துரையிடுக