தயிர்சாதம்
மதியம் மணி மூணு. பயங்கரப் பசி. ஹோட்டலுக்குப் போறோம் டைனிங் டேபிள் மேல ஏறி உட்கார்ந்து சாப்பிடுறோம். அவ்ளோ பசி. பிரபலமான ஹோட்டல். மதிய வேளைகளில் அவ்வளவு கூட்டமாக இருக்கும். சர்வர்கள் பாய்ந்து பாய்ந்து வேலை பார்ப்பார்கள். வெறும் இலைய பாத்துட்டா டபக்குனு சாதத்தைக் கொட்டுற வேலை ஆர்வம் இருக்கும். நிற்க.இதுலாம் நடக்கும். நடக்கணும். இன்று நான் போய் அமர்ந்தேன். உயரமான ஒரு ஆசாமி ஹோட்டல் சூப்ரவைசர் போல. வெள்ளை சட்டை கருப்பு பேண்ட். பருத்த சிவந்த அந்த மனிதன் நெற்றியில் குங்குமம். சுறுசுறுப்பா நடுவில் நிற்கிறார். நான் அமர்ந்த டேபிளைப் பார்த்தார். சாருக்கு என்ன வேணும் கேளு னு ஒரு சத்தம். தண்ணிய வை னு அடுத்த சத்தம். யப்பா...மிரட்டி வேலை வாங்குறாரே னு ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏன்னா அங்க ஒரு பக்கியும் வரல. வெகு நிதானமாக ஒரு மத்திம வயதுக்காரர் வந்தார். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஆர்டர் எடுக்க டிப்டாப் ஆசாமி இருப்பதைப் பார்த்து காப்பியடித்ததில் சில தவறுகளுடன் இருந்தார். கிழிந்த பேப்பரில் ஆர்டர் எடுக்கப்போகிறார். சட்டையை பேண்ட்டுக்குள் திணிப்பதில் அவருக்கு விருப்பமில்லை போல. இண் பண்ணிட்டு எ