ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - கருத்து.
" ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" நூலை முன் வைத்து....... ஏதோ ஒரு மூலையில் நமக்கு இப்பொழுது மிகவும் பரிச்சயப்பட்ட ஒரு வசனமாகிய ' ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் முதலில் அவனது ஆசையைத் தூண்ட வேண்டும் ' என்பது போன்ற ஓர் அடிப்படைத் தத்துவத்தை அதற்குப் பின்பான நம் சுயநலத்தை நிலைநாட்டுவது மற்றும் மனிதன் - மனிதன் அல்லது ஒரு சமூக இன்னொரு சமூக நம்பிக்கைத் துரோகம் என்பது ஒரு கட்டத்தில் நாகரிகம் வளர வளர நாடு விட்டு நாடு பரவுதல் அல்லது பரப்புதல் அல்லது தன் பலத்தை அடுத்த ஆள் மீது திணித்து, தான் மட்டும் வாழ்தல் என்ற அரக்கத்தனம். என்றோ நடந்தது இன்று வரலாறு. இன்று நடப்பது இன்னொரு வரலாறு. ஆனால் 'நாகரிகம் வளர வளர' என்ற ஒரு சொற்றொடர் கூட போதுமானதாய் இருக்கிறது நம்மை நாமே சீர் குலைத்து சீர் அழிய. இதை ஒரு வரலாறாகப் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் நடந்து முடிந்தக் கதையாக இல்லாமல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை இப்பொழுது நம்மால் முழுதாய் கண்கள் அகல மூளை அகல பார்க்க முடிகிறது. தமிழில் இரா.முருகவேள் மொழிபெயர்த்த ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய '