இடுகைகள்

உயர்திணை

அது ஒரு மரத்தடி. ஒரு கடையின் முகப்பு. ஒரு நண்பனின் வருகைக்காகக் காத்திருந்த் நேரம். அவன் இடப்பக்கமாய் வருவானா...வலப்பக்கமாய் வருவானா என விழித்திருந்தத் தருணம். அப்பொழுது என் காலில் ஏதோ ஊர்ந்த உணர்வு. கீழே பார்த்தேன். நகர்ந்து பார்த்தேன். மீண்டும் காலை யாரோ தொட்டதுபோல் உணர்வு. ஓர் ஆடு படுத்திருந்தது நான்கு கால்களையும் நீட்டி...... ஒருவேளை இந்த ஆடாக இருக்குமோ?????? சில நேரங்களில் நாம் அஃறிணைகளை மதிப்பதே இல்லை. மறுபடியும் நண்பனைத் தேட ஆரம்பித்தேன்.ஆனால் மீண்டும் அதே உணர்வு. காலை யாரோ தொட்டுவிட்டு எடுத்து விடுகிறார்கள். இம்முறை முகத்தைத் திருப்பி கண்களைக் காலில் வைத்தேன். அந்த ஆடு தான்..... தன் முன்னங்கால்களை என் கால் விரல்களோடு ஒட்டி வைத்தது. சட்டென்று ஆட்டினைப் பார்த்தேன். நாம் சிறு குழந்தைகளைத் தலையில் தட்டி விளையாடி அவர்கள் பார்க்கும்போது சிரிப்போம் அல்லவா....அவ்வாறு ஆடு என்னைப் பார்த்தது. "என்ன" என்று கேட்பது போல் ஆட்டினைப் பார்த்தேன். அதுவும் பதிலுக்கு "என்ன" என்று கேட்பது போல் என்னைப் பார்த்தது. அது கருப்பு-வெள்ளை உடம்பு. முகம் முழுக்க...

முத்தம்

உன்னை விட்டுச்செல்லும் ஒவ்வொரு கணத்திலும் உன் இதழ் பறித்துச் செல்லத்தான் ஆசை அதனால் தான் என்னவோ என் முத்தங்கள் உனக்கு இனிக்கின்றன......

மிஸ்டர்..எக்ஸ்

மதுரை புத்தக கண்காட்சி இதற்கு சில முறைகள் சென்றிருக்கிறேன். ஒரு முறை மதுரை முகநூல் நண்பர்களைப் பார்க்க. ஒரு முறை அலுவலக ஊழியர்களுடன்.... இப்படி போனவன் ஒரு முறை ஒரு நண்பனுடன் சென்றிருந்தேன்...அது யார் என்பது சஸ்பென்சாக வைத்துக்கொள்ளலாம். கடைசியாகக் குறிப்பிடுகின்றேன். அதுவரை அவருக்கு ஒரு பெயர் வைத்து இந்தக் கட்டுரையைத் தொடரலாம். என்ன பெயர் வைக்கலாம்....ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்....(யோசிக்கிறேன்)ம்.ம்.ம்.ம்.ம் மிஸ்டர்.எக்ஸ் அதென்ன எக்ஸ் னு கேக்குறீங்களா..... கொய்யாலே...நானும் பத்தாம் வகுப்புல இருந்து பாக்குறேன்....தமிழ் மீடியம் னு கூட பாக்காம....கணக்குப் பாடமா இருக்கட்டும், குவாண்டம் இயற்பியல் இல்லாட்டி வேதியியல் பாடமா இருக்கட்டும்...கண்டுபிடிக்கப்போறத எக்ஸ் னு வச்சுக்கோனு சொல்றானுக...ஏன்  தமிழ் மீடிய பசங்களுக்காகவாவது இந்த எக்ஸ் க்கு பதிலா ஒரு  "அ" னா இல்லாட்டி " ஆ" வனா....ஒரு  "ஐ"னா னு சொல்லலாம்ல....இந்த தமிழினத்தலைவர்கள்லுலாம் இதுக்கெல்லாம் போராட்டம் நடத்தமாட்டாங்களோ... விடுங்க நம்ம கதைக்கு வருவோம்.....ஸோ..நம்ம நண்பன் பெயர்....."மிஸ்டர். எக்...

சந்திப்பிழை

உன் என் காதல் காலத்தின் சந்திப்பிழை.....

தேனீர் கோப்பை 5

படம்
காதலோடு தேனீரும் முழுங்க்ப்படுகிறது பார்வைகளால் நான் விழுங்கப்படுவதால்.....

தேனீர் கோப்பை 4

படம்
ஒரு பட்டாம்பூச்சியின் பூப்பருகுதல் பார்த்தல் அரிது.... வா.... தேனீர் பருகலாம்.....

தேனீர் கோப்பை 3

படம்
நீ குடித்துவைத்த தேனீர்கோப்பையில் கொட்டிக்கிடக்கின்றன எனக்கான ஆசைகள் - உன்னைப் பருக....