இடுகைகள்

கனம்

ஒவ்வொரு கணமும் கனம் உன் கண் காணா கணங்களில்!

நீயின்றி..2

எந்த ரஸவாதமும் செய்யமுடியாமல் தோற்றுத்தான் போனது நேற்றைய இரவும் நீயில்லாமல்!

டைகர்.

அதிகாலையில் எப்படி எழுவீர்கள்? நீங்களாகவா? இல்லை கடிகார அலாரம் அடித்தா? இல்லை மனைவி அலாரம் அடித்தா? இல்லை அப்பா ? அம்மா? உடன்பிறப்புகள்? தொலைபேசி? ஒரு நாய்க்குட்டி உங்களை எழுப்பியிருக்கிறதா... அந்த உரிமையை நீங்கள் அதற்குக் கொடுத்திருக்கிறீர்களா..... நான் கொடுத்திருக்கிறேன். அதன் பெயர் டைகர். ப்ரவுன் (பழுப்பு ) மற்றும் வெள்ளை கலந்த உடம்பு. முகம் வெளிர் பழுப்பு. பார்த்ததும் கொஞ்சத் தோன்றும் முகம். துடிப்பு. குட்டியாக வந்த பொழுதே அதன் துள்ளலைப் பார்த்து டைகர் என்று பெயர் வைக்கப்பட்டது. காலையில் கதவைத் திறந்ததும் வீட்டிற்குள் வரத் துடிக்கும். எக்கும். அம்மாவின் மூன்றாவது பிள்ளை. என்னைய விட  உங்க அம்மாவுக்கு நாய் தான் முக்கியம் என்று என் அப்பாவின் புலம்பலுக்குக் காரண நாயகன். குட்டியாய் வந்த அடுத்த நாள் காலையில் பால் ஊற்றினோம். குடித்துவிட்டு அம்மாவின் காலுக்குள் புகுந்து புகுந்து ஓடி விளையாடியது. அவ்வளவு தான் அம்மா அடுத்த நாள் ஒரு பிளாஸ்டிக் பந்தை  வாங்கிப்போட்டார்கள். அதை கடித்து கடித்து உருட்டி விளையாட ஆரம்பித்தது. அதனுடன் பந்தைப் பிடுங்குவது ...

பாதம்

உங்கள் மலரிதழ்களை விலக்கிக்கொள்ளுங்கள்! நீங்கள் பரிசளித்திருந்த முட்களின் முகம் தெரியட்டும்! முட்களுக்குப் பழக்கப்படாமல் பாதம் பலமாவதில்லை!

கிருஶ்ணன் மாடு

நெற்றியில் மட்டும் வெள்ளையாக இருக்கும் மாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா.? யாரோ சிறு வயதில் என்னிடத்தில் மாடுகளுக்கு நெற்றியில் வெள்ளை இருந்தால் அது கிருஶ்ணன் மாடு என்று சொல்லியிருக்கிறார்கள். அந்நியன் படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தின் சிறு வயது பாத்திரத்திற்கு, அதன் பாட்டி கருடபுராணம் பற்றி சொல்லும்பொழுது அச்சிறு பையனுக்கு ஒரு ஜூம் (zoom) வைப்பார்களே அது போல் எனக்கும் மூளைக்குள் ஒளிந்துகொண்டது அந்த கிருஶ்ணன் மாடு. ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் அந்த மாதிரி நெற்றியில் வெள்ளை பூத்த அதுவும் உடல் முழுக்க கருப்பாகவும் அல்லது பழுப்பாகவும் இருந்து நெற்றியில் சிறிய அளவு வெள்ளை இருக்கும் பசு மாடுகள் அழகு. அதை தடவிக்கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். மதுரை நகர்ப்புறத்தில் இரவு நேரத்திலோ அல்லது விடியல் காலையிலோ தெருக்களில் செல்லும் பொழுது பசுமாடுகள் ஓரமாய் அமர்ந்திருக்கும். பார்க்கவே சாதுவாய் அமர்ந்திருக்கும் மாடுகளின் கொம்புகளை நான் பிடித்து ஆட்டிவிட்டு நகர்வது உண்டு. அதுவும் அதுபாட்டுக்கு அமர்ந்திருக்கும். எங்கள் தெருக்களில் இது போன்ற பசுக்கள் காலையில் ஊர்வலம் வரும். க...
அவசர அவசரமாய் பகிரப்பட்ட முத்தங்களில் முத்தம் மட்டுமே இருந்தது பிரியம் காட்ட கொஞ்சம் மறுவாய்ப்பு கொடு...

கசியாத கண்ணீர்

இக்கவிதையைத் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..... மிகவும் குழப்பமான காலையில் நீ விழித்ததாய் சொல்லியபோதும்..... நானற்றத் தனிமையிலும் நீ என்னுடன் உழன்றதை உளறியபோதும்.... எந்த பிரயத்தனத்தில் நம் கை கோருமென நீ பிரயத்தனப்பட்டபோதும்... உன் உணர்வுகளுக்கு மொழிபெயர்க்கத் தெரியாத என் கசியாத கண்ணீரும் பேசத்தெரியாத மொழியுமாய் இக்கவிதையைத் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.....!