இடுகைகள்

விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து

விகடன் பிரசுரம் வெளியிட்ட  அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து... சாம்ராஜ்ய காலம் முதல் நாயக்கர் காலம்  பிறகு அங்கிருந்து இப்பொழுதுவரை என இந்தியாவில் உள்ள எல்லா மதங்களிலும் நடந்த மாற்றங்கள் பற்றிய பெரிய ஆய்வை எழுதியிருக்கிறார் தோழர் அருணன். மத நல்லிணக்கம் பேணுவோர், நாத்திகம் பேணுவோர் தவிர மதங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.  முகலாயர்கள் ஆண்டபொழுது முஸ்லீம்களின் எண்ணிக்கை கணிசமானது தான்.  ஆங்கிலேயர்கள் ஆண்டபோது கிறித்தவர்களின் எண்ணிக்கை கணிசமானது தான்.  இரு மத ஆட்சியாளர்களும் வைதீக நெறி மதங்களைப் பின்பற்றுபவர்களையும் அரவணைத்திருக்கின்றனர்.  சைவ வைணவ என்ற வைதீக நெறி மதங்களைப் பின்பற்றியோரை ஹிந்து என அழைத்தவர்கள் முஸ்லீம்கள் என்பது போன்ற தரவுகளை அருணன் வழங்கியிருக்கிறார்.  அந்த கால இஸ்லாமியர் எண்ணிக்கை, கிறித்தவர்களின் எண்ணிக்கை என புள்ளிவிவரத்துடன் வழங்குவது அதிகாரத்தைப் பயன்படுத்தி மதமாற்றம் அதிகமாக நடக்கவில்லை என்பதைக் காட்டியிருக்கிறார்.  கிறித்தவ மிஷனரிகள் கல்வி தானம், மருத்துவதானம் செய்ததற்க

தொ.பரமசிவன் எழுதிய "பண்பாட்டு அசைவுகள்" நூலை முன்வைத்து..

 தொ.பரமசிவன் எழுதிய "பண்பாட்டு அசைவுகள்" நூலை முன்வைத்து.. சில நாட்களுக்கு முன்னதாக ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் புத்தகம் வாசிப்பாளர்கள் மத்தியில் ஒரு ரீல் பிரபலமாகக் கண்ணில் பட்டது. அதில் எழுத்தாளர். எஸ்.ரா அவர்கள்  " அறியப்படாத தமிழகம்" நூலைப் பரிந்துரைத்திருப்பார். அப்படியான "அறியப்படாத தமிழகம்" மற்றும் " தெய்வங்களும் சமூக மரபுகளும்" என்ற இரண்டு நூல்களின் தொகுப்பே இந்த " பண்பாட்டு அசைவுகள்". (காலச்சுவடு பதிப்பகம்) இப்புத்தகம் எழுதிய தொ.ப  என்று அன்புடன் அழைக்கப்படும் தொ.பரமசிவன் ஒரு பண்பாட்டு ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியர். தொல்லியல் ஆய்வுகளின் கண் நாட்டம் கொண்டவர். அந்த நோக்கில் " பண்பாட்டு அசைவுகள்" பல ஆய்வு தரவுகளைத் தருகிறது. தமிழ் குறித்து ஆரம்பிக்கும் தொ.ப, ஒரு மழையைப் போல, ஓடுகின்ற நதியைப் போல, தமிழ்- தமிழர்- தமிழர் உணவு - உணர்வும்,உப்பும்- உணவும் நம்பிக்கையும்- சோறு விற்றல்- பிச்சை- தெங்கும், தேங்காயும்- உரலும் , உலக்கையும்- சிறுதெய்வங்களுக்கான உணவு என்று ஒன்றோடன்று ஒன்று ஒட்டி இழுத்துச்செல்கிறார்.  வேலை பார்ப்பவர்களுக்கு

Think and grow rich புத்தகத்தை முன்வைத்து..

படம்
நெப்போலியன் ஹில் எழுதிய " Think and  grow rich " புத்தகத்தை முன் வைத்து... தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள், உளவியல்சார் புத்தகங்கள், வணிக மேலாண்மை புத்தகங்கள் இப்படி சில சுவாரஸ்ய வகைகள் உண்டு. இப்படியான வகைமைகளில் நிதிமேலாண்மை சார்ந்த புத்தக வகைகள் உண்டு.  Think and grow rich புத்தகம் அதிக நிதி பெருக்க எப்படியெல்லாம் தன்னைத் தகவமைத்துக்கொள்ளலாம் எனக் கூறுகிறது.   இப்புத்தகம் எழுதிய நெப்போலியன் ஹில்  வாழ்க்கையில் வெற்றிகளின் மூலம் அதிக பணம் சம்பாதித்தவர்களைத் தேடி கலந்துரையாடி அவர்கள் கடந்து வந்த பாதையை, அதன் மூலம் அவர்கள் பணம் அவர்களை நோக்கி வரவைத்த ஆய்வை மேற்கொண்டு எழுதியதே இப்புத்தகம்.  அமெரிக்க நவீன பொருளாதார வாழ்வு இயக்கவியலை நோக்கி இந்தியா நகர ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எந்தப் பொருளை நாம் நுகரவேண்டுமென உலக பொருளாதாரமயமாக்கல் நிறுவன நாடுகள் முடிவு செய்கின்றன.  உணவு மாறுகிறது. பழக்கம் மாறுகிறது. கலாச்சாரம் மாறுகிறது.  ஒரு சமூக மாற்றம் பொருளாதார இயலோடு இணைந்து பயணிக்கிறது.  எங்குபார்த்தாலும் உளவியல், தொழில்சார் மேலாண்மை இயல் மேலோங்கி இருக்கிறது.  தன்னம்பிக்கை பேச்ச

எஸ் ரா எழுதிய " எனது இந்தியா" தொகுப்பை முன் வைத்து ....

 எஸ் ராமகிருஷ்ணன் எழுதி ஜூனியர் விகடனில் தொடராய் வந்த " எனது இந்தியா" தொகுப்பை முன்வைத்து... ஒருவர் ஒரு விசயத்தை ஆவணப்படுத்துவது என்பது நடந்த நிகழ்வைப் பதிவதும், அதுசார் சமூக மாற்றங்களையும் இயல்புகளையும் அடுத்த தலைமுறைக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் கருதி தான். ஆனால் உண்மைக்குப் புறம்பான கருத்துகள்,  வரும்போது, உண்மையைத் தேடிப் போகவேண்டிய அத்தியாவசியம் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது.   இப்படியானத் தருணங்களில் தான் வரலாற்றாசிரியர்களின் தேவையும் தொல்லியல் அறிஞர்களின் முக்கியத்துவமும் புரியவருகிறது.  அந்த வகையில் எஸ் ரா வின் " எனது இந்தியா" ஒரு பானை இந்தியத் தொன்மத்திற்கு ஒரு கைப்பிடி பதமான உண்மை.  "சரித்திரம் என்பது உறைந்துபோன கற்படிவம் இல்லை, அது வாழ்வனுபவங்களின் வழியே நாம் கவனிக்கத்தவறிய உண்மைகளை, மற்ந்துபோன நினைவுகளை, அறியப்படாமல் போன துயரங்களை நினைவூட்டும் அறிவுத்துறை" என்று தான் ஆரம்பிக்கிறார்.  வரலாற்றின் படிக்கட்டுகளில் நிரபராதிகள் காத்திருப்பார்கள் என்றபடிக்குச் சாகும்வரை ஷாஜஹானுக்கு அவர் எதிர்பார்த்த நீதி அவரது மகன் ஔரங்கசீப்பால் வீட்டுச்சிறையில

ஃபர்னிச்சர் 4

  ஃபர்னிச்சர்- இது ஒரு தேவையில்லாத ஆணியின் புடுங்கல் திணை. கடந்தவாரம்  திடீரென " இப்போ" ராமசாமியாட்டம், இப்பவே சென்னை போகவேண்டிய நிலை. அதுவும் பகல் பயணம்.  பெயர் தெரியாத ஆம்னி பஸ்களே "சிவப்பு பஸ்ஸில்" தெரிந்ததால் நம்பி ஏறுவதற்குப் பயம். கட்டக்கடைசியாய் மறுநாள் வைகையில் போட்டால் என்ன என்று யோசித்து இந்த உலகத்தின் அதிவேக நெட்வொர்க்கான irctc க்குள் ஒரு மணி நேரமாக நுழைந்து அதிகாலை கிளம்பும் வைகைக்குப் பார்த்தால், நீ நினைச்ச கூந்தலுக்குலாம் உனக்கு டிக்கெட் கிடைக்காது என்று அதில் ஏற்கனவே துண்டு போட்ட இணைய பிரகஸ்பதிகள் சமிக்ஞைகள் சொல்ல, வேறு ஏதாவது பகல் நேரத்து ட்ரெயின் இருக்கிறதா என்று பார்க்க தேஜஸ் என்ற ஒரு ட்ரெயின்.  மறு படியும் வீட்டு மொட்டை மாடி, நடுத்தெரு , பெரிய டவர் க்குலாம் கீழ் நின்றும் ஏர் டெல்லின் இணைய தள சுற்றலில் வெகு சீக்கிரமாய் ஒரு மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்தாகிவிட்டது.   சம்பவத்தன்று மதியம் மதுரை புகைவண்டி நிலையம்.  எப்பொழுதும் சென்னை போகும் ரயில்கள் முதல் ப்ளாட்ஃபாரத்தில் தான் நிற்கும் என்று  போய்ப்பார்த்தால் ட்ரெயினைக் காணோம். ஸ்டாப்பை விட்டு தள்ளி

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 17

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 17 பழனிக்குமார் ஒரு மெடிக்கல் ரெப்பின் தொழில் வாழ்வில் பயணங்களும் காத்திருப்புகளும் தான் அதிகப்படியாய் நிகழ்பவை. ஒரு மருத்துவரைப் பார்க்க மூன்று மணி நேரம் கூட காத்திருப்போம். மருத்துவரைப் பார்க்கலாம் என்னும்போது ஐந்து நொடிகள் தான் நேரம் என்பார்கள். அந்த ஐந்து நொடிகளுக்காக மூன்று மணி நேரம் காத்திருப்புகள் தான் தவம். அங்கு இருக்கும் நேரங்களில் டிவி, புத்தகம், மொபைல், வேடிக்கை, நண்பர்களுடனான உரையாடல் என்று அந்தக் காத்திருப்புகள் நிகழும். சில காத்திருப்புகளும் பயணங்களும் சுவாரஸ்யமாய் நிகழும். ஒரு பைக் பயணம். அது. அருப்புக்கோட்டை வேலை முடித்துவிட்டு, திருச்சுழி என்ற கிராமத்தில் வேலை முடித்துவிட்டு, திருச்சுழியிலிருந்து நரிக்குடி வழியாக மதுரை வரும் ஒற்றையடிப்பாதை போல் ஒரு பாதை உண்டு. என் அம்மாவின் ஊர் என்பதால் பள்ளிப்பருவங்களில் அந்தச் சாலை வழியாக மருதுபாண்டியர் போக்குவரத்து பேருந்தில் வந்த காலங்களிலிருந்து இப்பொழுது வரை அந்தச் சாலை மோசமானதாகத்தான் இருக்கும். அன்றும் கூட. என் நண்பர் மற்றும் என்னுடன் வேலை பார்ப்பவருமானவரும் நானும் வந்து கொண்டிருந