பழனிக்குமார் பக்கங்கள் அரங்கேற்றம் ஆரம்பம்
என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4
கல்லூரியில் படிக்கையில் நடந்த நிகழ்வுகளும் அதை நினைப்பதும் பெரிய வரம். ஒவ்வொரு ஆசிரியர்களும் ஒரு விதம். physical chemistry ஆச்ரியர் t.k. ஜெனார்த்தனன் சார். பாடம் நடத்துறதே வித்தியாசமா இருக்கும். பல்லைக் கடித்து சொல்வது போலிருக்கும். குட்டையாயிருப்பார். சிவப்பாயிருப்பார். சாதுவான குணம். அவரது குரல் மெலியதாயிருக்கும். அந்தக் குரலில் பஞ்ச் பேசுனா எப்படியிருக்கும் அப்படி. அவர் பாடம் நடத்துற அழகே அந்தக் குரல் அந்த தொனி.ஒருமுறை ஒரு சாதித்தலைவர் கார் விபத்தில் இறந்தார். அது நடந்த இடம் அவர் வீடு அருகே. ஒரு லாரியும் காரும் மோதிய விபத்து. அடுத்த நாளில் ஜெனார்த்தனன் சார் எங்களுக்கு எப்படி பாடம் நடத்துவாரோ அப்படியே அந்த விபத்தை சக ஆசிரியர்களுக்கு விவரித்தார். இப்பொழுது வரும் கேப்பிட்டல் ஆங்கிலத்தை பல்லைக் கடித்து வாசித்துப் பார்க்கவும் ( that LOrry Came FRom that side, this FEllOE's car came from this side....big TERRIFIC bombarded...) இதைத்தான் அவர் சொன்னார். அங்கு சென்ற என் காதுகளுக்கு அவர் பாடம் நடத்தியது தான் கேட்டது ( THat atom comes FRom that orbit and Another ATom comes from o...
கருத்துகள்
கருத்துரையிடுக