இப்படியிருக்கத் தேவையில்லை....
இந்த இரவு
இப்படியிருக்கத் தேவையில்லை....
ஒரு நெடிய பகலை
அதிலிருந்த
ஓர் அமில மழையை
நினைவுறுத்திய படி
கருமையாயிருக்கும்
இந்த இரவு
இப்படியிருக்கத் தேவையில்லை....
தானாயிழப்பதற்குள்
கருச்சிதைவிற்குள்ளான
வானவில்லின்
பிரேத நெடி வீசும்
இருட்டிரவு
இப்படியிருக்கத் தேவையில்லை.....
பாரமற்ற
ஒற்றை வார்த்தையின்
பாரம் தாளாதுத்
துவண்ட
முன்னொருகாலத்து அந்தகாரக்
கண்ணீரைப் பருகத் துடிக்கும்
இன்றைய இரவு
இப்படியிருக்கத் தேவையில்லை.....
விடிவதற்கு முன்
ஏதோ ஒன்றைத்
துறக்கத் துணியாதிருக்கும்
இவ்விழிகளினிரவு
இப்படியிருக்கத் தேவையில்லை.....
இப்படியிருக்கத் தேவையில்லை....
ஒரு நெடிய பகலை
அதிலிருந்த
ஓர் அமில மழையை
நினைவுறுத்திய படி
கருமையாயிருக்கும்
இந்த இரவு
இப்படியிருக்கத் தேவையில்லை....
தானாயிழப்பதற்குள்
கருச்சிதைவிற்குள்ளான
வானவில்லின்
பிரேத நெடி வீசும்
இருட்டிரவு
இப்படியிருக்கத் தேவையில்லை.....
பாரமற்ற
ஒற்றை வார்த்தையின்
பாரம் தாளாதுத்
துவண்ட
முன்னொருகாலத்து அந்தகாரக்
கண்ணீரைப் பருகத் துடிக்கும்
இன்றைய இரவு
இப்படியிருக்கத் தேவையில்லை.....
விடிவதற்கு முன்
ஏதோ ஒன்றைத்
துறக்கத் துணியாதிருக்கும்
இவ்விழிகளினிரவு
இப்படியிருக்கத் தேவையில்லை.....
கருத்துகள்
கருத்துரையிடுக