மழைக்கு
முந்தைய
விகசிப்பும்
பிந்தைய
ஈரமுமாய்
இருந்ததுன்
குறுஞ்செய்தி!
A separation ஈரானிய மொழி திரைப்படம்
A Separation ஈரானிய மொழி திரைப்படத்தை முன்வைத்து. பொதுவாக வளரக் கூடிய நாடுகளில் மனிதனின் வாழ்வியல் என்பது அங்கு நிலவக்கூடிய பொருளாதார நிலைமைகளை வைத்து என்ற படியே இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற படி பல காரணிகள் இருக்கின்றன. வேலை பார்க்கும் சூழல் நிமித்தமாக புலம் பெயர்தல் என்பது நாம் கேள்விப்பட்டதுண்டு. மிகவும் பிற்போக்கான கருத்துகளைப் பின்பற்றும் தேசங்களில் கூட கல்விக்காகவோ, பொருளாதாரத்திற்காகவோ புலம் பெயர்தல் அவசியப்படுகிறது. ஆனால் தனிமனிதன் ஓர் இடத்தில் தன்னைத் தகவமைத்துக்கொள்ள பல காரணிகளைத் தின்று செரிக்கிறான். சிலர் அதைத் தியாகம் என்று அழைக்கிறார்கள். ஈரானிய மொழி திரைப்படமான 'A Separation" கூட அப்படியானச் சில அளவைகளை முன் வைத்து ஒரு குடும்பத்திற்குள் நிகழும் நிகழ்வுகளைச் சொல்கிறது. 11 வயது ஆகும் மகளிற்கு நல்ல கல்வி கொடுக்க வேறு இடம் செல்ல வேண்டும் என்பது குடும்பத்தலைவியின் ஆசை. இந்த ஊரில் அவளுக்கு நல்ல கல்வி கிடைக்காது என்பதை விட இங்கு கிடைப்பதை விட மேம்பாடானக் கல்வி என்பது அவளது நிலைப்பாடு. குடும்பத்தலைவனுக்கு 80 வயதில் இருக்கும் Alzhiemers (மறதி போன்ற ந
கருத்துகள்
கருத்துரையிடுக