அருணன் எழுதிய ' தமிழ் இலக்கிய (வழி) வரலாறு நூலை முன்வைத்து..
வசந்தம் வெளியீட்டகம் வாயிலாக , அருணன் எழுதிய ' தமிழ் இலக்கிய (வழி) வரலாறு' நூலை முன்வைத்து.... பழனிக்குமார் மதுரை. கால ஓட்டம் என்பது பத்தாண்டுகளாக, இருபது ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. அதனூடே வரலாற்று நிகழ்வுகளாக அரசியல் மாற்றங்கள், புரட்சிகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் நியாய அநியாய தர்க்க மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிகழவும் செய்கின்றன. தமிழ்மொழியின் இலக்கியங்களின் வாயிலாக அவற்றைப் படைத்த புலவர்கள், கவிஞர்கள் அவரவர் காலத்து அழகியலை, துன்பியலை ஆவணப்படுத்தியிருக்கின்றனர். ஒரு பருவத்து தர்க்க மோதல்கள் அடுத்த பருவத்திலும் தொடர்கின்றன. அப்படியான தர்க்க வாதங்களில் கலந்துகொள்வோர் குறிப்பாக நியாயத்தின்பால் நிற்போர், அறம் பேசுபவர் கடந்த கால அறத்தின் சிந்தனைப் போக்குகளையும் அதற்கு மாற்றாய் விளம்பிய தர்க்கங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். திராவிடர் கழக அரசியல், கம்யூனிச சித்தாந்த அரசியல் காலகட்டம் தலைதூக்க ஆரம்பிக்கையில் அதன் தொண்டர்கள் மேற்கொண்ட வாசிப்பனுவ வாழியல் முறை அவர்களது நியாயம்சார்போராட்டங்களுக்கு வலு சேர்த்தது. நாம் கடந்துவந்த வரலாறை நம் மொழி இலக்