விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 9
பழனிக்குமார் மதுரை விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 9 நான் வேலை பார்த்த நிறுவனம் மூடப்போகிற தருவாயில் இருந்தது. என் உடன் வேலைபார்த்தவர்கள் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்திலேயே தஞ்சம் அடைய நானும் என் பயோடேட்டாவுடன் ஒரு வருட அனுபவத்தைக் குறிப்பிட்டு மும்பைக்கு ஃபேக்ஸ் செய்துவிட்டு, தமிழ்நாட்டு ரீஜீனல் மேனேஜருக்கு அலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவரோ, மதுரையில் ஏற்கனவே இரு நபர்களை நியமித்துவிட்டோம். கோவைக்குப் போகிறாயா என்றார். முடியாது என்று மறுத்துவிட்டாலும் இரு நாட்கள் கழித்து மும்பையிலிருந்து ஃபோன். மூன்றாவது நபராக என்னை மதுரைக்குத் தேர்ந்தெடுத்து மும்பையில் பயிற்சி தந்தார்கள். பயிற்சி முடித்து நான் ட்ரெயின்ல் வந்துகொண்டிருக்கும்போது தான் தமிழ்நாட்டு மேனேஜருக்கு இந்தச் செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி, என் நியமிப்பில் ஆரம்பமாகியது எங்கள் ரீஜினல் மேனேஜருக்கும் ( தமிழ்நாடு) ஜோனல் மேனஜருக்கும் வாய்க்கால் தகராறு. ஜோனல் மேனேஜர் என்பவர் ஆந்திரா தமிழ்நாடு கேரளா க்கு மேலதிகாரி. மதுரை க்கென ஏரியா மேனேஜர் இல்லை என்பதால், ரீஜீனல் மேனேஜரே எங்களுக்கு வந்துகொண்டிருந்தார்.