இடுகைகள்

செம்பருத்தி

இது ஒரு மழைக்காலம் தான் அதற்காக ரோட்டில் இந்த அளவு சகதியாக இருப்பதற்குக்காரணம் மழை இல்லை. ரோடு போடுவதற்காக கொட்டப்பட்ட மண் தான். இவர்கள் எப்போதுமே இப்படித்தான். மழைக்காலத்தில் தான் பாதாளச்சாக்கடை போடுவது கேபிளிற்காகத் தோண்டுவது ரோட்டைப் போடுவது என்று செய்வார்கள். அப்படித்தான் ரோட்டைப் போட மண்ணைப் போட்டு சில இடங்களில் பள்ளங்களை நிரப்ப செம்மண்ணைப் போட்டு சாலையைச் செந்நிறமாய் வைத்திருக்கிறார்கள். நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் முக்கியமான ஒரு பகுதிக்கு இந்தச் சாலை தான் பிரதானம். எல்லாம் குடியிருப்புகள் இருக்கும் சாலை. சாலையில் நடப்பவர்கள் ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிக்கும் தண்ணீருக்கும் ஏற்றபடி தாண்டி தாண்டிச் சென்றார்கள். சோமசுந்தரம் மாமா தான் என் முன் போய்க்கொண்டிருக்கிறார். ஒரு கையில் மஞ்சள் பை வைத்திருக்கிறார். சிவப்பு நிற லெதர் பேட்டா செருப்பின் நுனியில் சற்று சகதி அப்பியிருக்கிறது. இடது கையால் தன் பேண்ட்டை ஏற்றிப் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தவருக்குப் பின்னால்தான் பஜாஜ் பல்சரில் போய்க்கொண்டு இருக்கிறேன். அரை கிலோமீட்டரில் என் வீடு. அதற்கு நான்கு வீடுகள் முன்னதாகத் தா...

டிவிஎஸ் சேம்ப்

மாப்ள விஷயம் தெரியுமா (இப்படி உரிமையா கேக்குறவன் என் நண்பன் கணேஷ்குமார். இப்பொழுது தொடர்பில் இல்லை. இப்பொழுதுனா இப்பொழுது. ஏன் என்றால் அப்படி அவன் கேட்டபொழுது வருடம் கி.பி 1994. ) சொல்லுடா... அவங்க அப்பா வண்டி வாங்கிருக்காங்களாம். என்ன வண்டி தெரியுஉஉஉமாஆஆஆஆ னு பெருமையா கேட்டான். அப்ப டிவிஎஸ் சேம்ப் பயங்கர ஃபேமஸ். என் சீனியர் உதயச்சந்திரன் அதுல வருவான். ஒரு நாள் அவன் வண்டி ஸ்டார்ட் பண்ணப்ப ஹாரன் அடிச்சேன். சின்னப்பிள்ளைத்தனமா இருக்குல. அப்பலாம் மோட்டர்வண்டிகளை தெரிஞ்சவங்க ஓட்டுறது கம்மி. அப்படி யாராவது இருந்தா அவங்கட்ட அனுமதி வாங்கி ஒரு தடவை ஹாரன் அடிப்பேன். இப்ப கணேஷ்குமார் அப்பா வாங்கிருக்கார். டே..சூப்பருரா...என்ன கலர் சில்வரா.. (சில்வர் தான் உதயச் சந்திரனோடது) இல்லடா ப்ளு... டே சூப்பர்றா..(சூப்பர் டா வத்தான் நாக்கு வளையாம சூப்பர்ர்றா...னு வர்து) இப்ப நான் பக்கத்து வீட்டு நண்பன்ட்ட சொன்னேன். அவன் பேரும் கணேஷ். கணேஷ்னா வெறும் கணேஷ். கணேஷ்ன்ற பேர சுருக்கமுடியல. அவன் என்னுல பாதி அப்ப. ஒரு வயசு ஜுனியர். எது பண்ணாலும் சேர்ந்துதான். பட்டம் விடுறது, பம்பரம் சுத்துறது, ...

புஜ்ஜிமா அப்பளம்

காட்சி 1 தலைமைச் செயலகத்தில் உள்துறை அமைச்சரின் அறை. வந்த ஃபோனில் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியானார் அமைச்சர். என்னய்யா சொல்ற..என்று ஃபோனில் கேட்டார். அதற்கு அந்த முனையில் என்ன சொன்னார்கள் என்று அருகில் இருந்த உதவியாளர்க்குக் கூட கேட்கவில்லை. பெரிய பிரச்சினையாகுமேயா..என்றார். சரி விடு பாத்துக்கலாம். அப்பத்தான் இவைங்களும் அடங்குவாய்ங்க என்று சமாளித்து விட்டு அலைபேசியைத் துண்டித்தார். என்னங்கய்யா ஆச்சு என்றார் உதவியாளர் ஒரு சம்பவம் யா என்றார். ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி பிரஸ்ஸர் மாத்திரை ஒன்றை விழுங்குவதற்கும் சுகாதாரத்துறையிலிருந்து ஃபோன் வந்தது. என்னங்க விசயம் வந்ததா என்றார். அந்தப்பக்கம் பேசியது இந்த முறை உதவியாளருக்கும் கேட்டது. பேசியதைக் கேட்க உதவியாளருக்கும் வியர்த்தது. இப்படி ஒரு சம்பவமா , இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்க முடியாது நடக்கவும் வாய்ப்பில்லாதச் சம்பவமென அவர் உறைந்து கிடந்தார். கடைசியாக அந்த முனையில் பேசியவர் விடுங்க சார் அப்பத்தான் இவைங்களும் அடங்குவாய்ங்க. இந்தச் சம்பவத்துல ஏதாவது சிகிச்சைனு ஏதாச்சும் சம்பவம் நடந்துச்சுனா நம்ம மச்சினன் மருத்து...

மருந்து விற்பனை பிரதிநிதியாகிய நான்...

சில நாட்களுக்கு முன் ஒரு மருத்துவர் வீட்டில் துப்பாக்கிமுனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது. விசாரித்த சில நாட்களில் அச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளைக்காரர்கள் பிடிபடுகிறார்கள். துப்பாக்கி சப்ளை செய்த சஸ்பெண்ட் ஆன ஒரு காவல்துறை அதிகாரி கவர்னர் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி என வட்டம் வருகிறது. கொள்ளைக்காரர்களுக்கு அந்த மருத்துவரிடம் பணம் இருக்கும் என்றும் அவர் வீட்டையும் காண்பித்துக்கொடுத்தவர் ஒரு மருந்துவிற்பனைபிரதிநிதி. இப்படித்தான் செய்தி வெளிவந்துள்ளது. பொதுவாகவே மருந்துவிற்பனைபிரதிநிதி களைப் பார்த்தாலே மக்களுக்கு ஏகப்பட்ட அவல உணர்ச்சிகள் உண்டு. மருத்துவர்களுக்கு டீல் போடும் சூத்திரதாரர்கள் நோயாளிகள் காத்திருக்க அவர்கள் உள்ளே சென்று வெகுநேரம் வெட்டி பேச்சு பேசுபவர்கள். வெயிலிலும் மழையிலும் நாயாய் அலைபவர்களென ஓர் அவல உணர்வோடு இங்கு பார்ப்பவர்கள் உண்டு. இது மிகைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் அது உங்கள் பெருந்தன்மை. உண்மையில் இந்த மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் என்பவர்கள் யார். அயல்நாட்டு பிரதிநி...

கொதிநிலை

ஒரு சிறிய பாத்திரத்தில் கொதிக்க வைத்தப் பாலை ஊற்றிப் பிறகு பிரத்யேகமான டீத்தூளை அதில் தூவி தேவைக்கேற்ப சீனி சேர்த்து நல்ல கொதிநிலைக்குக் கொதிக்க வைத்து சிறிதளவு புதினா வெட்டிவேர் வகைகளை மேலே தூவி சில நொடிகளில் அதை இறக்கி வடித்து டீ க்ளாஸில் ஊற்றி பாய் கடையின் மாஸ்டர் நீட்டினால் காத்திருக்கும் கைகள் எனக்கு எனக்கு என நீண்டு எடுக்கும். அப்படி அந்தக் கடை பிரசித்தம். உண்மையில் அந்தக் கடை பிரசித்தமா இல்லை அந்தக் கடையின் டீ பிரசித்தமா எனக் கேட்டால் அந்தக் கடையின் டீ தான் பிரசித்தம். பாய் கடை டீ என்றால் தனி கிக்குத்தான் என்று சொல்லிக்கொண்டே வந்து டீ பருகுவார்கள். அன்று அவனுக்குக் கூட அந்தப் பகுதியில் தான் வேலை. அந்தப் பகுதியில் அவன் வேலைக்கு வந்துவிட்டால் பாய் கடையில் டீ அருந்திவிட்டுத்தான் செல்வான். ஒரு விற்பனையாளனுக்கு டீ சாப்பிடுவது என்பது ஒரு பழக்கம் அல்ல. சமயத்தில் அதுவும் ஒரு வேலை போலத்தான். எதற்காக டீ சாப்பிடுகிறோம் என்று தனித்து உணராதபடிக்குக் கூட அவன் டீ சாப்பிட்டு இருக்கிறான்.  வேலை சரியாக நடக்கவில்லை என்றால் , களைப்பாக உணர்ந்தால், போகும் வழியில் பிடித்த நண்பர்களைப் பார்...