இரா.முருகவேள் எழுதிய 'முகிலினி' நாவலை முன்வைத்து....
இரா.முருகவேள் எழுதிய 'முகிலினி' நாவலை முன் வைத்து... பழனிக்குமார் மதுரை. 2003-04 காலகட்டம். மதுரையிலிருந்து மாற்றுதலாகி கோயம்புத்தூருக்குப் போயிருந்தேன். ஒரு முறை நண்பருடன் சேர்ந்து மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு வேலை நிமித்தமாக மலை ஏற ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தி அந்த உயரத்திலிருந்து தூரத்தில் ஊர்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஓர் ஆலையைக் காண்பித்தான். இந்த 'முகிலினி' யைப் படிக்க ஆரம்பித்ததும் 17 வருடங்களுக்கு முந்தைய அந்த ஞாபகம் வந்தது. அந்த நண்பனுக்குத் தொடர்பு கொண்டு நீ காண்பித்தது எந்த ஆலை என்றேன். அவனுக்கு அது ஞாபகம் இல்லை. பிறகு ஆமா...விஸ்கோஸ் ஃபேக்டரியா என்று கேட்டான். அதைப் பற்றி ஒரு புத்தகம் உங்கூரு காரர் தான் எழுதிருக்கார். படிச்சிட்டு இருக்கேனு சொன்னேன். ஆமாமா, அந்த ஃபேக்டரிய அந்த சிறுமுகை ஊர்க்காரங்களே உள்ள புகுந்து கொள்ளை அடிச்சுட்டாங்களாம் என்றான். அப்பொழுது அந்தப் புத்தகத்தில் வெறுமனே முப்பது ஐம்பது பக்கங்கள் தான் படித்திருந்தேன். புத்தகத்தை முழுதாய் படித்துவிட்டப்பிறகு என் நண்பன் சொன்னது உண்மை த...