மாமனார் வீடு

நான் என்னமோ தப்புத்தண்டா பண்ணி மாமியார் வீட்டுக்கு அதாங்க ஜெயிலுக்குப் போயிட்டு வந்துருக்கேனு நினைக்காதீங்க.

இந்த பதிவு உண்மையிலேயே என் மனைவின் அப்பா அம்மா வீடு  என்பதையே குறிக்கும்.

எங்கள் குலதெய்வம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாச மலையிலுள்ளது. அங்கு வருடத்திற்கு ஒரு முறை வேன் பிடித்து நண்பர்களுடனும் உறவினர்களுடனும் போய் வருவது வழக்கம்.

ஆனால் அதே ஊரில் பெண் கிடைத்ததும் அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வேனில் முடியுமா முடியாது. பஸ் அல்லது புகைவண்டி தான்.

நமக்கு இந்த ட்ரெயின் னாலே அலர்ஜிங்க...முதன்முறையாக நான் ட்ரெயின்ல போனது வேலைக்கு வந்து ஒரு முறை கம்பெனி மீட்டிங்க் என அழைத்தார்கள். ஒரு புண்ணியவான் சென்னைக்கு நான் அழைத்துச்செல்கிறேன் என்று சொல்லி முதன்முதலாக மதுரை டூ சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏற்றிச் சென்றான் பாருங்க...லக்கேஜ் வைக்கிற பெர்த்தில் ஏறி உட்கார்ந்தோம்....4 பேரு....கால மடக்கி......ரமணா படத்துல கட்டிடம் இடிந்து சிம்ரனும் அவ மகளும் எரிந்து அப்படியே சாம்பலா சிலையா இருப்பாங்கள....அப்படி உக்காந்துருந்தேன்.....தாம்ப்ரம் சொன்னப்பின்னாடி தான் கால விரிச்சேன்....இன்னும் நியாபகம் இருக்கு . இப்பக்கூட கால ஒரு தடவை விரிச்சு பாக்குறேன்...இந்த மோசமான அனுபவத்துல ட்ரெயின் என் வாழ்வில் எப்பவே தடம் புரண்டுருச்சு.

சரி விசயத்துக்கு வருவோம். மதுரையிலிருந்து பாபநாசத்திற்கு எப்படிச் செல்வது.
ரூட் நம்பர் 1. -  நேரா திருநெல்வேலி பஸ் (பாயிண்ட் டூ பாயிண்ட்) அப்புறம் பாபநாசம் (ஓரளவிற்கு 4 அல்லது 5 மணி நேரத்துல போயிரலாம்)

ரூட் நம்பர் 2 - நேரா பாபநாசம் பஸ் வழி இராசபாளையம் தென் காசி...( இந்த ரூட்ல ஏறுனா அவ்வளவு தான்.....நிறைய ஊர்கள்....நல்ல டிரைவர் அமையலாட்டி அவ்வளவு தான்...ஒரு டீக்கடையில் வாசலில் கூட்டம் அதிகமா நிண்டா கூட பஸ் ஸ்டாப்புனு நினைச்சு...பஸ்ஸ நிப்பாட்டிருவானுக...)

ரூட் நம்பர் 3 - மதுரை டூ தெங்காசி பேஸஞ்சர் ட்ரெயின் அப்புறமா அங்க இருந்து டவுன் பஸ்.....(ட்ரெய்ன்னாலே நமக்கு உவ்வ்வ்வ்வ்வ்வ்வே)

எனக்கு திருமணம் ஆனதும் மறுவீடு அழைத்துச் சென்றார்கள்..என் மாமனார் வீட்ல எல்லோருக்கும் ட்ரெயின் தான் போக்குவரத்தே....சும்மா இருக்குற நேரத்துல குடும்பத்தோட உக்காந்து ட்ரெயின் நேரம் மாறியிருக்கா எது எது அகலரயில் பாதை மாறியிருக்கு. என்ன என்ன ட்ரெயின் எப்ப எப்ப வரும் எங்க எங்க போகும் இதுலாம் என்டர்டெயின்மெண்ட்டா பேசுவாங்க போல...இதுக்குலாம் ஹெட்.....என் பொண்டாட்டி தான்.....(ஆண்டவன் எப்படி போட்டான் பாருங்க முடிச்ச.....எனக்கு ட்ரெயின்னாலே உவ்வ்வ்வே.....அவளுக்கு பஸ்னாலே உவ்வ்வ்வ்வே....)

இப்ப மறுவீடு கிளம்பனும்...கேமரா வ கட் பண்ணி ஆன் பண்ணா மதுரை ஜங்க்ஸன் ல பெட்டியோட நிக்குறான் பழனிக்குமார்.  மன்னிக்கவும் நிக்க வைக்கப்பட்டான் பழனிக்குமார். மதுரை டூ செங்கோட்டை ட்ரெயின் பேசஞ்சர்....கல்யாணத்துக்கு முன்னாடியே ட்ரெயின் உவ்வ்வ்வ்வே வை என் மனைவியிடம் சொல்லிவிட்டதால் என் மனைவி சிரித்துக்கொண்டே வருகிறாள். சமோசா...சமோசா னு ஒருத்தன் வித்துக்கிட்டு இருந்தான்.
எதிர்த்தாப்புல் இருந்த மனைவியின் அக்காள் பையன் என்னைய பாத்தான் அந்த சமோசாவை பார்த்தான்.....(டே....வேணாம் டா......வேணாம் டா னு என் மனச்சாட்சி அவன்ட சொல்றதுக்குள்ள....) அம்மா...சமோசா....னு பயபுள்ள கத்திருச்சு....."ச்ச்ச்ச்ச்சூ.........முடியல...." அவ அக்கா புருசர்...சமோசாக்காரர  கூப்பிட..." அண்ணே ! எனக்கு வேணாம்....னு முந்திக்கிட்டேன்..." விட்டானுகளா...."ட்ரெயின்ல சமோசா சாப்பிடாம எப்படி னு என் மனைவி சிரிக்கிறாள்...."  கேமரா வ கட் பண்ணி ஆன் பண்ணா....பழனிக்குமார் சமோசா தின்னுக்கிட்டுருக்கான்.....(இங்க ஒரு மானஸ்தன் இருந்தானேனு என் மனச்சாட்சி தேடிக்கிட்டு இருந்துச்சு)

இதுதான் கடைசி பயணம் அந்த ஊருக்கு ட்ரெயின்ல...உவ்வ்வ்வ்வ்வ்வே....

அப்புறம் பலமுறை அங்க போனாலும் பஸ் தான்.
ட்ரெயின விட்டு இறங்குனதும் என் மாமனார் வந்திருந்தார். ஒரு கால் டாக்ஸி. அம்பாசிடர் கார். தென் காசி டூ பாபநாசம். அம்பாசிடர் கார் ஒரு பள்ளத்துல ஏறி இறங்குச்சு அப்பத்தான் அது அம்மாஆஆஆஆசிடர் கார்னு தெரியும். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் முதல் தயாரிப்பு கை மாறி கை மாறி கை மாறி தென் காசியில் ஓடிட்டு இருக்கு. இன்னும் பத்தே வருசத்துல ஊட்டில நடக்கப்போற பழைய கார் கண்காட்சியில் அது இருக்கும்.

அடுத்தது மாமனார் வீடு. மாமனார் வீட்டில் தங்குவது பலருக்கு பல அனுபவம். எனக்கு என் வீட்டைத் தவிர ஒரு வித நெருடல் இருக்கும் . ஒரு வித சிணுங்கலான உணர்வு இருக்கும்.

ஒரு டிவி...கேபிளில் கரண்ட் இருக்கும் பொழுது வீட்டில் கரண்ட் இருக்காது. வீட்ல இருந்தா கேபிள் தெரியாது. நான் போனதும் இந்த தூரல் நிண்ணு போச்சு படத்துல பாக்யராஜ பாக்க வர கூட்டம் மாதிரி வரும்...ராஜி வீட்டுக்காரரா.....எப்படி இருக்கீங்க....னு பாசமா கேப்பாங்க...நல்லாருக்கேன்..ன்ற பதில யாருனே தெரியாமலேயே இப்ப வரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.
ஒரு வழியா மாடியில் இருக்குற ரூம்க்கு வந்துருவேன். மனைவிய எதிர்பார்க்க முடியாது. அவ அவங்க அப்பா அம்மா னு செட்டில் ஆகியிருப்பா..இருந்தாலும்  அப்பப்ப என்னைய பேலன்ஸ் பண்ண

தண்ணீ வேணுமா....
இருக்கு
டிவி பாக்குறீங்களா...
வெறும் டிவியவா...
உடனே சிரிப்பாள்...
போ..நீ போ...மதுரையில புருஷன் எப்படி கொடுமைபடுத்துறானா...எப்படிலாம் நடத்துறேனு உங்க அப்பா அம்மாட்ட சொல்லு...
ஓரத்துல பழைய வாரமலர் இருந்தது ஒருதடவை....சரி அதையாவது படிக்கலாம் னு பார்த்தா...சந்திரமுகி வேடத்தில் சிம்ரனுக்குப் பதிலாக ஜோதிகா ஒப்பந்தம் னு ஒரு செய்தி.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு.....வாரமலர் இல்ல....இறந்தகால மலர்...
என் மாமனார் வீட்டிற்கு அடிக்கடி செல்வது கிடையாது. தூரம் ஒரு பக்கம் இருந்தாலும் , விடுமுறை கிடைக்காது  என்பதை விட விடுமுறை எடுத்து போகணுமா இவ்வளவு தூரம் என்று நினைப்பது  மற்றொரு எண்ணம் என் மனைவியின் அப்பா வீடு கொஞ்சம் ஏழ்மையானது. நான் வருகிறேன் என்ற பெயரில் அவர்கள் கொஞ்சம் தடபுடலாய் பரபரப்பாவதில் எனக்குப் பிடித்தம் இருப்பதில்லை. மனைவியும் அவள் அக்காளும் சேர்ந்து போவார்கள். அவர்கள் அடிக்கடிச் செல்வார்கள். நம்ம போறது மிகவும் குறைவு.
இப்படியிருக்கு போனவாரம் மனைவியின் தாத்தா இறந்துவிட்டார். போகவேண்டிய கட்டாயம். காரியத்தையும் முடிக்க வேண்டும்.

நமக்குக் கம்பெனி நம்ம சகலை தான். (மனைவியின் அக்காளின் கணவர்..)
அண்ணே...எங்கண்ணே இருக்கீங்க.....
ஊருக்குக் கிளம்பிட்டேன் தம்பி...
அதுக்குள்ளயுமா...(அவங்க இருக்குறது திருச்சிய தாண்டி அரியலூர்...)
ஆமா...
எப்படிண்ணே வருவீங்கனு தான் கேட்டேன்....நம்மாளு போட்டார் பாருங்க ட்ரெயின் டைம் டேபிள....
வீட்லருந்து கிளம்பிட்டேன் தம்பி....பல்லவன் வரும்...ஏறிட்டோம்னா...திருச்சி போயிரலாம்...நைட்டு கன்னியாகுமரியோ இல்லாட்டி நெல்லையோ புடிச்சுட்டோம்னா...காலையில திருநெல்வேலி வந்திடலாம்...அவன் காலையிலேயே வந்துருவான்...கன்னியாகுமரினா கொஞ்சம் நான் சீக்கிரமே கிளம்பனும்.....இன்டர்சிட்டி ஒண்ணு வரும்...அதுல கூட்டத்த பாக்கணும்...அப்புறம் வர்றதுல ஏறிடுறனும்....

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸு நமக்கு ட்ரெயின் டைமிங்க் அவர் சொன்னதுல எனக்கே ஒரு ஜங்க்ஸனுக்குள்ள இருந்த உணர்வு...)

வேலைய முடிச்சு இரவு அங்க போனப்ப மணி 9.30 நம்மாளு முன்னாடி உக்கார்ந்திருப்பால...ஜம்முனு...இருந்தாலும் வீட்டுக்கு மூத்த மருமகன்ல....
அவர் என்னைய கேட்டாரு....இப்பத்தான் வர்றீங்களா......
ஆமா...வேலைய முடிச்சுட்டு வர்றேன்...
(ஒருத்தர் நல்லா இருக்கீங்களானு கேட்டா நம்ம என்ன பண்ணுவோம்..நீங்க எப்படி இருக்கீங்க னு கேப்போம்ல...இப்ப அவர் என்ன கேட்டார்....இப்பத்தான் வர்றீங்களா..னு தான.....இதே தொணில அந்தாளுட்ட ஒரு கேள்விய கேட்டுப்புட்டேன்...)

நீங்க எப்ப வந்தீங்கண்ணே...!
அவ்வளவுதான்....ஆரம்பிச்சாரு சாரு.....பல்லவன்......திருச்சி....கன்னியாகுமரி..கூட்டம்...நெல்லை...அப்புறம் நாகர்கோயில்- பெங்களூரு...எக்ஸ்ப்ரஸ்.....
(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு- நான் என்ன பண்ண முடியும் சிவப்பு துணிய காமிச்சு வாய் ட்ரெயின நிப்பாட்டவா முடியும்....)
ம்...ம்...ஓ....அப்படியா....கூட்டமா...அப்புறம்...ஓ....பெங்களூரு எக்ஸ்ப்ரஸா....அவன் சீக்கிரமாவே வந்திருவான்ல....(என்னமோ எனக்கு டைம்லாம் தெரியுற மாதிரி அள்ளிப்போட்டுக்கிட்டு இருந்தேன்...வேற வலி சாரி வழி...)
தாத்தா இறந்து மூணு நாளாச்சு...காரியமும் வச்சிருக்காங்க...னு உக்கார்ந்திருந்தேன்.. சாப்பாடு வெளியில் ஏற்பாடு பண்ணி பட்டைய கிளப்பிட்டு இருந்தாரு என் சின்ன மாமனார்.
அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிக்கிட்டே இருந்தேன்.
அப்புறம் வாட்ஸ் அப்...பேஸ்புக்...சும்மாவே மெட்ரோபொலிட்டன் சிட்டி ல இருந்தாலே நான் வச்சிருக்குற நெட்வொர்க்குக்கு 3G கிடைக்காது. இப்பொழுது  பாபநாசம்.. சுத்தி மலை...ஒரு பக்கம் ஆறு...டவர் கிடைக்கிறதே பெரிய அதிசயம்...இன்டர்நெட் சுத்திட்டே இருக்கு...என்னடா னு நிமிர்ந்து பார்த்தா...பக்கத்துல பாத்தா உக்கார்ந்திருந்த சகலைய காணாம். எதிர்த்தாப்புல வந்து ஒரு வயதானவர் உக்காந்திருக்கார். சொந்தக்காரரா இல்ல பக்கத்து வீட்டுக்காரரா யாருனு தெரியல...எனக்கு எப்படி அவருக்கு ரியாக்ஷன் கொடுக்கனும்னு தெரியல.....என் மொபைல் இன்டர்நெட்டக்காட்டிலும் என் தலை ரொம்ப சுத்துச்சு....இது தேவையா பழனிக்குமார்....பேசாம மொபைலய பாப்போம்....
அப்படியும் டைம் போகல...
நம்ம சகலையவும் காணாம்....மேல போயி பாக்கலாம்னு மேல போனேன்....3 கிளவிகள்...சொந்தக்கார பக்கிக தான்..நடுவுல...நம்மாளு...(யோவ்...நீ பாட்டுக்க இங்க வ்ந்து உக்காந்துட்ட...நான் தனியா உக்காந்துருக்கேன்..மனசுல கேட்டுட்டு....) அவருக்குப் பக்கத்துல ஒரு ஸ்டூல் இருந்தது ...பக்கத்துலேயே இருப்போம் னா....
அந்த கிளவிகள் பக்கத்து ஊராம்...விருது நகர் போகனுமாம்...எப்படி போகலாம் னு நம்மாளுட்ட கேட்டுருச்சுக......
நம்மாளு சொல்லிக்கிட்டு இருக்காப்புல...குருவாயூர்-சென்னை எக்ஸ்ப்ரஸ், திருச்செந்தூர் டூ சென்னை...அப்புறம்....ஏதோ ரெயில்வே பட்ஜெட் ல தமிழ்நாட்டு ட்ரெயின் பேரெல்லாம் சொல்ற மாதிரி ஆரம்பிச்சாரு....
ஆகா...சகலை ஆரம்பிச்சுட்டாரு....இதுக்கு கீழ முகம் தெரியாத ஆள்ட்டேயே பேசிருக்கலாம் போலேயே.....
சம்பந்தமே இல்லாம ஒரு நண்பனுக்கு போன் பண்ணிட்டே அங்க இருந்து வெளிய வந்து கீழேயே உக்காந்துட்டேன்....
கீழ என் மாமனார்.." மாப்ள ஏதாவது புத்தகம் படிக்கிறீங்களா...."
வேணாம் மாமா...(எதுக்கு அவ்வை சண்முகி படத்தில் கமல் பெண் வேடம் னு போட்ருக்குற புத்தகத்தப் படிச்சு என்ன பண்ண....)
இந்தாங்க...ஒரு பேப்பர் கொடுத்தார். தினத்தந்தி...
படிடா....பழனிக்குமார்...படி..னு....தலையங்கம்...அப்புறம் மாநிலச்செய்தி, மாவட்டச் செய்தி, சினிமா விமர்சனம், சினிமா விளம்பரம், அதுல இருக்குற பஞ்ச் டயலாக், விளையாட்டுச்செய்தி, வணிகச்செய்தி, அப்புறம் முதல் பக்கத்துல பத்திரிக்கையின் காது னு சொல்வாங்களே தலையங்கத்துக்கு மேல இரண்டு பக்கமும் கொடுத்துருக்குற விளம்பரம் வரை எல்லாத்தையும் படிச்சிட்டேன்....எக்ஸாம் வச்சா....அன்றைய தினத்தந்தில இருந்து கேள்வி கேட்டா நூத்துக்கு நூறு தான்.

எல்லாத்தையும் முடிச்சாலும் கூட நம்ம சகலைய காணாம். அது சரி அவர் அந்த பாட்டிகளோட எந்த ட்ரெயின்ல வாயிலேயே போயிட்டு இருக்காரோ....

காரியச் சடங்குகள் முடிந்தன....
மதிய உணவு....
பொசுக்குனு சகலை வாங்க சாப்பிடுவோம் னு முதல் பந்தியிலேயே உக்கார...நான் வேணும்னா அடுத்த பந்தில உக்காருறேன்...மத்தவங்க சாப்பிடட்டும்...னு ஒரு அவார்டு வின்னிங் பெர்பாமன்ஸ் கொடுத்தேன்....
நீங்களும் சாப்பிடுங்க னு ஒரு சத்தம்....யாருனா....இந்த கட்டுரையின் ஆரம்பத்துல என் மாமனார் வீட்ல வந்ததும் அப்பா அம்மாவோட செட்டில ஆன என மனைவி....
நான் உடனே...."ஏய் ..உன்னைய எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு.....நேத்து பாத்தேன்...அடுத்து இப்ப மதிய சாப்பாட்டுக்குத்தான் பாக்குறேன்...." னு சொன்னேன்...
அவ வந்து...."யெஸ்..க்ளாட் டூ மீட் யூ..." னு கைய கொடுத்துட்டு...நீங்களும் சாப்பிடுங்க..னு சொல்றா.....
(சும்மாவா...அவ புகுந்த வீட்லயே எல்லா பந்தையும் சிக்ஸரா அடிப்பா....இது ஓன் பிட்ச்.....பந்து போடுற பவுலரையும் சேத்து அடிக்குற பார்ம் ல இருப்பா....) இது தேவையா...
சகலைக்கு பக்கத்துல உக்காந்து சாப்பிட்டு முடித்து....அடுத்து மதுரைக்குக் கிளம்பனும்.
சகலைட்ட சொன்னேன்...."அண்ணே...நான் கிளம்புறேன்...நேரா திருநெல்வேலி..போயி மதுரை பை பாஸ் ரைடர் பஸ் ல போகப்போறேன்....
நம்மாளு....நான் 4.40 க்கு அம்பாசமுத்திரத்துக்கு செங்கோட்டை டு திருநெல்வேலி பேசஞ்சர் வருவான்....அதுல போயி......நெல்லைல போயிட்டோம்னா..நைட்டு திருச்சி போயிரலாம்....அங்க இராமேஸ்வரம் வருவான்...அங்க.....

எனக்கோ....உவ்வ்வ்வ்வ்வ்வே........



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....