வாழ்த்து

இன்று காலை அதே உணர்வு.

பள்ளியில் படிக்கும்பொழுது பிறந்தநாளன்று சீருடை அணியத்தேவையில்லை. புத்தாடை அணிந்து கொள்ளலாம் என்று காலையில் சீக்கிரம் எழுந்து ஒரு விதமான உற்சாகத்துடன் இருப்போமே அப்படி.

ஒரு குழந்தைக்குப் புத்தாடையோ, நண்பர்களோ, அந்த பிறந்தநாளோ அப்படிப்பட்ட உணர்வு , காலம் செல்லச்செல்ல பொறுப்புகள் கூட கூட பிற்காலத்தில் வருவதில்லை.

ஆனால் அதே உணர்வு மறுபடியும் நண்பர்களின் வாழ்த்துகளால்.

வாழ்த்துதல் எவ்வளவு உன்னதமான காரியம் என்பது தெரிகிறது.
பறத்தலில் ஒரு முக்கிய அறிவியல் சூத்திரம், இறக்கைகளுக்கு அடியில் கொடுக்கப்படும் சிறிய அளவிலான உந்தம்.

கொஞ்சம் பறக்கின்றேன்.

மறுபடியும் குழந்தையாதல் அனைவருக்கும் விருப்பமுள்ள ஒன்றே.
நான் ஆகியிருக்கின்றேன்.

தினசரி கடக்கும் வெகுச் சாதாரண நாளாய் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும்,  என்னுலகில் உலவிக் கொண்டிருக்கும் இந்நாளுக்குள் உட்புகுந்து எனக்காய் சில புன்னகைகளையும் சில வார்த்தைகளையும் விடுவித்துச் செல்லுதல் கலைந்து செல்லும் மேகங்கள் போல் இல்லை அவை.

ஒவ்வொருவரின் மனத்துக்குள் மகிழ்ச்சியை மலராய் தூவிடலாம். நிகழ்ந்திருப்பதாய் நான் நம்புவது - நண்பர்கள் மகிழ்ச்சியை ஒரு விதையாய் தூவியிருக்கிறார்கள்.

அனைவரின் பாசத்திற்கும், நடபிற்கும் நன்றி என்ற ஒரு வாக்கியம் அவ்வளவு கைம்மாறுகளையும் தாங்கியிருக்குமா எனத் தெரியவில்லை.

வாழ்த்துதல் ஒரு வாழ்வித்தல்.

நன்றி.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....