கல்
கல் என்றால் பாறாங்கல் இல்லை.
கல் என்றால் படி.
நான் சொல்லப்போறது எல்லா மொழியும் படி.
எவனோ சொல்றானேனு ஹிந்திய படிக்க மாட்டேன்...நான் தமிழ்நாட்டுக்காரன் அப்படி இப்படி னு முட்டாத்தனமா பேசக்கூடாது. (நான் என்னைய சொன்னேன்....)
இப்படி மனசுல பட்டத கொஞ்சம் நீளமா எழுதுனா எப்படி இருக்கும். தமிழினத் துரோகி னு எவனாவது சண்டைக்கு வருவானா....(பொழுது போகும்ல.....)
பல விமர்சனங்கள் வரும்.
வரட்டும்
கமெண்ட் வரும்.
வரட்டும்
அவனுக அப்படி பேசிக்கிட்டு இருக்குறப்ப நான் பேஸ்புக்க மூடிட்டு வேலைக்குப் போயிருப்பேன்.
விசயத்துக்கு வருவோம்.
ஹிந்திய படிக்கக்கூடாது னு ஒரு புத்திசாலி கூட்டம் மறுபடியும் எந்திருச்சுருக்கு.
அடப் பதர்களா...இன்னுமாடா....னு என் மனச்சாட்சி கேக்குது.
என் மனச்சாட்சிக்கிட்ட நானே பேசிக்கிட்டேன்.இவனுக ஹிந்திய வேணாம் னு சொல்லக் காரணம் என்ன
1. உண்மையிலேயே தமிழ் பற்றா இருக்குமோ....( பற்றுல வள்ளுவர ஓவர்டேக் பண்ணிருவானுகளோ)
2. 6ம் வகுப்பு படிக்கிறதுல இருந்து தமிழத் தவிர வேற எதுவும் தெரியாதோ....
3. இங்கிலீஸ் பாடத்துல பெயில் ஆகிருப்பானுகளோ....
4. இப்ப வேற வேலை இல்லாம சும்மா டைம் பாஸுக்கு இணைய போராளி குருப் ல சேந்துருப்பானுகளோ....
இப்படி பல பாயிண்ட்டுகள என் மனச்சாட்சி கேக்குது.
தமிழ்நாட்ட விட்டு எங்க போனாலும் ஆங்கிலம் வேணும். ஹிந்தி வேணும்.
ஆனா தமிழ் நல்ல மொழி. செம்மொழி. அத விட்டு க் கொடுக்க மாட்டோம் னா..எப்படி.
ஏம்பா எல்லாப் பயலும் தமிழ் வாத்தியாரா வேலைக்குப் போகப்போறீங்களா...
தமிழ் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளோடு சேர்ந்து ஏன் நம்மளும் அரசியல் பண்ணனும். பலியாடு ஆகனும்.
முல்லைப் பெரியாறு, காவிரி, இலங்கைத்தமிழர், மீனவர் இப்படி கிடப்பில் போடப்பட்ட பல பிரச்சினைகளை மத்திய அரசுக்கு வலுவாய் நம்மால் ஏன் கொண்டு போகமுடியவில்லை. மத்திய அரசின் எல்லாத் திட்டங்களுக்கும் முட்டி மோதிக்கிட்டு இருந்தா தீர்வு கிடைக்காது.
பல மொழி கற்றுக் கொள்வதினால் அறிவு பெருகுமே தவிர குறையாது. பல மொழி இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வந்தது எப்படி.
நம் அப்பாக்கள், அண்ணங்கள் பண்ணிய தப்பு நம்மை ஹிந்தி படிக்கவிடாமல் பண்ணியது. அதே தப்பை நம் தம்பிகளுக்கு நாம் செய்யக்கூடாது.
நாம் இந்தியா முழுதும் பரவ வேண்டும். அதற்கு இந்தி தான் ஊடகம். அது இருந்தால் தான் முடியும்.
ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் சென்றோம். இப்போது அப்படியில்லை. காலத்திற்கேற்றவாறு மாறுகிறோம். மொழி விசத்திலும் அப்படித்தான்.
பல மொழிகள் கற்றுக் கொள்ளவேண்டும். சிறந்த பொறியாளர்கள் தமிழ்நாட்டில் வளர்கிறார்கள். அவர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லவேண்டும். திறமையை வளர்க்க வேண்டும். புகழ் பெற வேண்டும். வெறும் தமிழ் பத்தாது.
இது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அரசியல் விட வில்லை. தமிழினக்காவலர்கள் போல் நடிக்கிறார்கள்.
தமிழை வளர்க்க வேண்டும். பொறுப்பும் இருக்கிறது.
ஆனால் மற்ற மொழிகளையும் மதிக்க வேண்டும்.
தமிழினக்காவலர்கள் இப்போது பொங்குவதற்குக் காரணம் ஊடக போதை. பிரபல போதை. அது தான் இவர்களை இப்படி செய்ய வைப்பதாக நினைக்கிறேன்.
உங்களால் ஒரு சலூன் கடையில் கூட முடி திருத்தும் நிலையம் என்று கொண்டு வரமுடியவில்லை. எதற்காக அடுத்தத் தலைமுறைக்குத் தடையாக இருக்கிறீர்கள்.
உங்களுக்கு இந்தி எதிர்ப்பு தீயை மூட்டியவர்களின் குடும்பங்கள் இந்தியில் திளைப்பது உங்களுக்குத் தெரியும்.
எவனோ இந்தியிலும் ஆங்கிலத்திலும் பள்ளியில் தேர்ச்சி பெறாத மக்குத்தடிகளின் பேச்சை என் தோழர்கள், தோழிகள் , தம்பிகள், தங்கைகள் கேட்கமாட்டார்கள் என்பது முட்டாள்களுக்குத் தெரியப்போவதில்லை என நினைக்கிறேன்.
உங்கள் வீட்டுத் தெருவில் இருக்கும் கடைகளின் வாசகங்களை முதலில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப் போராடுங்கள். பிறகு அடுத்தத் தெருவுக்குப் புத்தி சொல்லலாம்.
பாரம்பரியமாய் ஹிந்தி எதிர்ப்புத் தெரிவித்த அரசியல் கட்சிகள் கூட தங்கள் தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் வைத்திருக்கின்றன். முடிந்தால் அதை மாற்ற , அந்த நாடகத்தை மாற்ற முயற்சிக்கவும்.
அதையெல்லாம் விட்டுவிட்டு மொபைலில் நெட் கார்ட் போட்டுருக்கேன். ஏதாவது ஸ்டேடஸ் போடனும் னு இப்படி தமிழ் இந்தி னு பொங்கக்கூடாது.
நடைமுறைக்கு என்னத் தேவையோ அத பண்ணனும். பில்டப் பண்ணக்கூடாது.
தமிழ் தானா வளரும். அழிக்க முடியாது. அதான் இப்ப இணையத்துல அவனவன் கவித எழுத ஆரம்பிச்சுட்டானுல......(ஓ மை காட்.....) நீங்க தான் காப்பத்தனும்னு இல்ல......
அப்புறம் போராளிகளே.....பழனிக்குமார் சர்ச்சையா ஒரு கட்டுரை போட்டுட்டான்....அதெப்படி இப்படி சொல்லலாம் னு கல்யாண் ஜீவல்லர்ஸ் பிரபு மாதிரி புரட்சி போராட்டம்னு பொங்கக்கூடாது.
எனக்கு வேலை நிறைய இருக்கு.....
ஆப் கி பார் ஹிந்தி கா சர்க்கார் ....நான் படிப்பேன்...எவனும் என்னைய கேக்க முடியாது...

கருத்துகள்
கருத்துரையிடுக