இடுகைகள்

செப்டம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனவில்

படம்
அது ஒரு கடுமையான மணல் தேசமாயிருந்தது.... எண்ணிக்கைகள் பல வைத்துத் தேடிக்கொண்டாலும் கிட்டாத புவியின் திறந்த மார்பு அத்தேசம்... தாபசுரத்துடன் அலைந்தலைந்து தவழ்ந்தழும் யாத்ரீகங்களுக்கான அருகதையற்ற தேசமது.... அது ஒரு கடுமையான வனத் தேசமாயிருந்தது.... அரவங்களை விரும்பாத அமைதியை மாத்திரம் இரைச்சலாய் உற்பத்தி செய்யும் வனாந்திரத்தின் தேசமது.... நோக்குங் கண்களற்று பச்சைய உதிரிகள் செறிந்து வீழும் உதிர்வன தேசம் தான் அது..... அது ஒரு கடுமையான வார்த்தைகளின் தேசமாயிருந்தது..... சொல்லும் சொல்லும் புணர்கையில் குருதி கொட்டும் வாய் தேசத்தின் எச்சமது.... மெய் முழுதும் அமிலந்தெறிக்கும் மெய்யற்ற எழுத்து கொண்ட சொல்லாலான தேசம்...... அது ஒரு கடுமையான வாழ்வியலின் தேசமாயிருந்தது.... வெற்றுப் புன்னகைக்கான நிழலுதலையே வாடிக்கையாக்கிக் கொள்ளும் வாழ்வற்றத் தேசம் தான் அது..... தொலைதலும் தொலைதலின் நிமித்தமும் ஆகச் சிறந்த தொலைந்த தேசமாய்த்தானிருந்தது அந்தக் கனவில்.....

க்ர்ர்ர்ர்....க்ர்ர்ர்ர்......

இந்த கட்டுரைக்கு முன்னுரை ஏற்புரைலாம் இல்லங்க.... ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வர்றேன். மதுரை டூ கொடைக்காணலுக்கு காரில் போனது தான் இந்த கட்டுரை. இதுல என்ன பிரமாதம் னு கேக்குறீங்களா.. காரை நானே தான ஓட்டிட்டு போனேன்... இதுல என்ன இருக்குனு சொல்வீங்களே.....(உங்களுக்கு கார் ஓட்டத்தெரியும் ...அதுனால ஈஸியா கேப்பீங்க....) நான் தான் இதுவரைக்கும் மலையில ஓட்டுனதே இல்லையே.... சரிப்பா...மலைல தான் ஓட்டுனது இல்ல...சமதள பகுதில ஓட்டிருப்பேல...னு கேப்பீங்களே....(கேக்கணும்...0 ஓட்டலாம்...ஆனா என்ட்ட தான் காரே இல்லையே...அப்புறம் எப்படி ஓட்டுறது.... எப்புடி.....அல்லைய புடிக்குதா....பயப்படாம கொடைக்காணலுக்கு போலாம்... வாங்க... கி.பி. 2009ம் ஆண்டே நான் கார் டிரைவிங்லாம் போயி லைசென்ஸ் வாங்கிட்டேன். இருந்தாலும் ஓட்டிக்கொண்டே இருந்தாத்தான பயிற்சி ஆகும். நண்பர்களின் கார் கிடைக்கும்பொழுது அவர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்லும்பொழுது நானே ஓட்டி போயிருக்கேன். எனக்கு இந்த கார் ஓட்டுறதுல பயம் நகரத்துக்குள்ள டிராபிக்ல ஓட்டுறதுதான். டிரைவிங் பயிற்சி போனப்ப என்னத்தடா படிச்சனு கேக்காதீங்க....அரைமணி நேரம் தான் நமக

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

கல்லூரியில் படிக்கையில் நடந்த நிகழ்வுகளும் அதை நினைப்பதும் பெரிய வரம். ஒவ்வொரு ஆசிரியர்களும் ஒரு விதம். physical chemistry ஆச்ரியர் t.k. ஜெனார்த்தனன் சார். பாடம் நடத்துறதே வித்தியாசமா இருக்கும். பல்லைக் கடித்து சொல்வது போலிருக்கும். குட்டையாயிருப்பார். சிவப்பாயிருப்பார். சாதுவான குணம். அவரது குரல் மெலியதாயிருக்கும். அந்தக் குரலில் பஞ்ச் பேசுனா எப்படியிருக்கும் அப்படி. அவர் பாடம் நடத்துற அழகே அந்தக் குரல் அந்த தொனி.ஒருமுறை ஒரு சாதித்தலைவர் கார் விபத்தில் இறந்தார். அது நடந்த இடம் அவர் வீடு அருகே. ஒரு லாரியும் காரும் மோதிய விபத்து. அடுத்த நாளில் ஜெனார்த்தனன் சார் எங்களுக்கு எப்படி பாடம் நடத்துவாரோ அப்படியே அந்த விபத்தை சக ஆசிரியர்களுக்கு விவரித்தார். இப்பொழுது வரும்  கேப்பிட்டல் ஆங்கிலத்தை பல்லைக் கடித்து வாசித்துப் பார்க்கவும் ( that LOrry Came FRom that side, this FEllOE's car came from this side....big TERRIFIC  bombarded...) இதைத்தான் அவர் சொன்னார். அங்கு சென்ற என் காதுகளுக்கு அவர் பாடம் நடத்தியது தான் கேட்டது ( THat atom comes FRom that orbit and Another ATom comes from opposi

ப்ரியமுடன்

எதையாவது சொல்லிவிட்டுத்தான் பிரியவேண்டும் என்பது உன் ப்ரியம்... மறுமுறை சந்தித்தலும் அது பிரசவிக்கும் ரணமும் விருப்பமற்று நீ விரும்பியதை முயற்சித்துக்கொண்டே இருக்கிறாய் பகிர்வதற்கு.... அடர்த்தியான மௌனங்களை இலகுவாய் உதிர்க்குமுன் விழிகளில் தெரிகிறது பிரிவிற்கான நெடி... எதிலுமே முரண்படாத எதிர்பார்ப்புகள் முரண்பட்டு நிற்கின்றன இன்னொரு பிரிதலைத் தரும் சந்திப்பு அழகானதல்ல என்று இன்னும் விலகமுடியாமல் நிற்கிறது விலகுவதற்காக விழுந்த உன் நிழலும் எதையாவது சொல்லிவிட்டுப் பிரிய ப்ரியமுடன்.....

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 3

ஒரே மாதிரியான விசயத்தை தொடர் கட்டுரையாக எழுத முயலும்பொழுது அது சம்பந்தப்பட்ட மற்ற நினைவுகளும் எழுகின்றன. ஆசிரியர்கள் பற்றி எழுத முயலும்பொழுது பால்ய நினைவுகளும் எழுகின்றன. சில குறும்புத்தனமான நிகழ்வுகளும் எழுகின்றன. அதைப் பற்றி இன்னொரு கட்டுரை கூட எழுத ஆரம்பிக்கலாம் போல. நான் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கு திவ்யானந்தம் என்றொரு ஆசிரியர் வந்தார். அவரது வகுப்பு வித்தியாசமாக இருக்கும். அவர் நாற்காலியில் அமர்ந்துகொள்வார். புத்தகத்தை விரித்துக்கொள்வார். படிக்க ஆரம்பிப்பார். கதை போல் இருக்கும். கதை போல் சொல்வார். யாராவது பேசினால், நீ வந்து அடுத்த வருசம் கார்ப்பரேசன் பள்ளிக்கூடத்தில் தான் சேருவ....அஙதான் நடத்தமாட்டாங... இப்ப்டி ஒரு சாபம் கொடுப்பார். கார்ப்பரேசன் பள்ளியில் சேந்தா ஒழுக்கம் போயிரும் வாழ்க்கை போயிரும் நு அவர் சொல்லும் பொழுது - இந்த அன்னியன் படத்துல விக்ரமின் சிறுவன் கதாபாத்திரத்திற்கு அவனது பாட்டி கருட புராணத்தைப் பற்றி சொல்லும்பொழுது அச்சிறுவனுக்கு ஒரு zoom கொடுப்பார்கள். அதுபோல் தான் எனக்கும் கொடுத்தார்கள். அது மனதில் பதிந்துவிட்டது. நான்

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 2

அதுவரை 5 வருடங்கள் ஆரம்பப் பள்ளியில் படித்துவிட்டு 6ம் வகுப்பிற்கு ஒரு மேனிலைப்பள்ளி உள் வருவது ஒரு பதட்டமானச் சூழ்நிலையாகவே எனக்கு இருந்தது. ஒரு நுழைவுத்தேர்வு வைத்துத்தான் எடுப்பார்கள் என்பதால் 5ம் வகுப்பு முழுஆண்டுத் தேர்வு விடுமுறை எப்படி இருந்திருக்கும். அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம், அண்ணன் ஒரு பக்கம். அண்ணன் அதே பள்ளியில் 10ம் வகுப்பு நுழைய இருந்தான். ஒரு வழியாய் 6ம் வகுப்பு நுழைந்தேன். பெரிய பள்ளிக்கூடம். குறிப்பாய் பழைய பள்ளிக்கூடம் போல் இல்லாமல் மைதானம் இருக்கிறது. விளையாட்டுப் பாடம் உள்ளது. நல்லொழுக்கம் வகுப்பு இருக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர். அது எனக்குப் புதிது. பழைய பள்ளியில் 5 வருடங்கள் 5 ஆசிரியைகள். இப்பொழுது அப்படியல்ல.. அது ஒரு  கிறித்தவ பள்ளி. பாதி ஆசிரியர்களின் பெயர்கள் ஆங்கில வடிவமாகவே இருந்தன. அதைச் சொல்வதில் எனக்குப் பெருமையாயிருந்தது. 6ம் வகுப்பு க்ளாஸ் டீச்சர் பீட்டர். ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல். கணக்குப் பாடம் ஞானப்பிரகாசம். முதல் இடைத் தேர்வில் நான் கணக்குப் பாடம் பெயில். 32 மார்க். அப்பொழுதெல்லாம் விடைத்தாளைக் கையில் கொடுத்

என்னை வளர்த்த ஆசிரியர்கள்..

ஒரு முறை தர தரவென இழுத்துக்கொண்டு போனது நியாபகம் இருக்கிறது. I A க்ளாஸ். லூரிமேரி டீச்சர். கையைப் பிடித்துக்கொண்டு அமர வைத்தது நியாபகம் இருக்கிறது.  பிறகு ஏதோ ஒரு நாள் மழை பெய்த மாலை. நான் தான் கடைசி வரிசை. ஓட்டுக்கட்டிடம். மழை வழிந்து என் முதுகு முழுதும் ஈரம். டீச்சர் என்னை அழைத்து கரும்பலகைக்கு அருகில் அமரவைத்தது நியாபகம் இருக்கிறது. புது வீடு வாங்குவதற்கு எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டைப் பார்க்க வந்தபொழுது எங்கள் அம்மா அவர்களையும் அவர்களது கணவரையும் வீட்டிற்கு அழைத்த நியாபகம்.  அவர் என்னை அழைத்து மடியில் அமர வைத்துக்கொண்டார். டீச்சர் மடியில் உட்காரலாமா....வா என்று அப்பா என்னை அதட்டினார். இரண்டாம் வகுப்பு காந்திமதி டீச்சர். நான் படித்தது மதுரை கரிமேடு மார்க்கெட் பகுதியிலுள்ள மதுரை முத்து ஆரம்பப்பள்ளி. தரையில் தான் அமர வேண்டும். ஓட்டுக் கட்டிடம் பாதி பள்ளிக்கூடம். காந்திமதி டீச்சர் எங்களுக்குள் குறுக்கே சென்று தான் கரும்பலகை அருகே வர முடியும். அப்படி ஒருமுறை வரும்பொழுது என் கையை மிதித்து விட்டார். பயந்து கொண்டு நான் கத்தக் கூட வில்லை. திடீரென காந்திமதி

மனக்குதிரை

மாதத்தின் முதல் நாள் பிறந்தாகிவிட்டது. சென்ற மாதத்தின் சேல்ஸ் க்ளோஸ் முடிந்தபாடில்லை. ஆகஸ்ட் 30ம் தேதி சனிக்கிழமை 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகிவிட்டது. ஆதலால் 1ம் தேதி திங்கள்கிழமை காலையிலிருந்து பரபரப்பு. இன்று சேல்ஸ் க்ளோஸ் பண்ணியாகவேண்டும். ஆனால் ஆர்டர் கொடுக்கவில்லை. இப்படித்தான் விடிந்தது. ஏறத்தாழ காலை 6 மணி. எவ்வளவு வேலைகள் யார் யாருக்குப் பேச வேண்டும்.  என்ன என்ன பேச வேண்டும். செப்டம்பர் பிறந்தும் ஆகஸ்ட் மாத சேல்ஸா....முடித்தாக வேண்டும். உடன்வேலை பார்க்கும் சகப்பணியாளர் 5 பேருக்கும் அழைக்க வேண்டும். ஆர்டரை 3 மணிக்குள் அலுவலகத்திற்குள் கொடுக்க வேண்டும். அவற்றையெல்லாம் 6 மணிக்குள் பில் அடித்துவிட்டு சாயங்காலம் பணிக்குத் திரும்ப வேண்டும். மணி காலை 6.30. யாரும் எழுந்திருப்பார்களா... இப்பொழுதே பேசிவிடலாமா... காலையிலேயே மேனேஜர் கூப்பிட்டுவிட்டார் என அலுத்துவிடுவார்கள் தானே....வேண்டாம்...கொஞ்சம் பொறுத்திருந்து அழைப்போம்....என மனக்குதிரை பொறுத்திருந்தது. மணி காலை 7.20  கைகள் துறுதுறுவென இருந்தன. அழைக்க ஆரம்பித்தேன். எப்பொழுது ஆர்டர் கொடுப்ப? எப்ப ஆபிஸுக்கு வருவ....