என்னை வளர்த்த ஆசிரியர்கள் 3

ஒரே மாதிரியான விசயத்தை தொடர் கட்டுரையாக எழுத முயலும்பொழுது அது சம்பந்தப்பட்ட மற்ற நினைவுகளும் எழுகின்றன. ஆசிரியர்கள் பற்றி எழுத முயலும்பொழுது பால்ய நினைவுகளும் எழுகின்றன.

சில குறும்புத்தனமான நிகழ்வுகளும் எழுகின்றன. அதைப் பற்றி இன்னொரு கட்டுரை கூட எழுத ஆரம்பிக்கலாம் போல.

நான் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கு திவ்யானந்தம் என்றொரு ஆசிரியர் வந்தார். அவரது வகுப்பு வித்தியாசமாக இருக்கும். அவர் நாற்காலியில் அமர்ந்துகொள்வார். புத்தகத்தை விரித்துக்கொள்வார். படிக்க ஆரம்பிப்பார். கதை போல் இருக்கும். கதை போல் சொல்வார். யாராவது பேசினால், நீ வந்து அடுத்த வருசம் கார்ப்பரேசன் பள்ளிக்கூடத்தில் தான் சேருவ....அஙதான் நடத்தமாட்டாங... இப்ப்டி ஒரு சாபம் கொடுப்பார். கார்ப்பரேசன் பள்ளியில் சேந்தா ஒழுக்கம் போயிரும் வாழ்க்கை போயிரும் நு அவர் சொல்லும் பொழுது - இந்த அன்னியன் படத்துல விக்ரமின் சிறுவன் கதாபாத்திரத்திற்கு அவனது பாட்டி கருட புராணத்தைப் பற்றி சொல்லும்பொழுது அச்சிறுவனுக்கு ஒரு zoom கொடுப்பார்கள். அதுபோல் தான் எனக்கும் கொடுத்தார்கள். அது மனதில் பதிந்துவிட்டது.

நான் பத்தாம் வகுப்பு தேர்வில் 383 மதிப்பெண்கள் பெற்றேன்.
நான் படித்த அதே கிறித்தவ தனியார் பள்ளியில் முதல் குரூப் படிக்க விண்ணப்பித்திருந்தோம். 360 மார்க் எடுத்த என் வகுப்புத்தோழன் முதல் குரூப் பெற்றுவிட்டான். எனக்கு கிடைக்கவில்லை. காரணம் அவன் பெயரில் நெல்சன் என்பதும், கையில் ஒரு பாதிரியார் கடிதமும் வைத்திருந்தான். என்னிடத்தில் அது இல்லை .
அந்த வருடம் தான் நாங்கள் வீடும் மாறினோம். ஆரப்பாளையத்திலிருந்து மதுரை அண்ணாநகருக்கு.
வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும். அருகில் ஒரு தனியார் பள்ளி இருக்கிறது. அங்கு தான் சேரணும்னு அப்பாட்ட அழுத்தம் கொடுக்க. விண்ணப்பம் வாங்கி வந்து நிரப்புகையில் அதுவரை வராத என் தாய்மாமா வந்தார்.
எனக்குத் தெரிந்து அவர் எனக்கு ஒண்ணுமே செய்ததில்லை. அன்று ஒன்று பண்ணார்.
நான் சேர நினைத்த தனியார் பள்ளி மோசம். பசஙகளாம் கஞ்சா  அடிக்குறாங..னு ஒரு பிட்டு போட்டார்....(என்னமோ இவர் தான் சப்ளை பண்ண மாதிரி)....அவ்ளோ தான்.....அப்பொழுதுதான் அப்பாவும் தனது நீண்ட நாள் யோசனையை அமல்படுத்தினார். நான் சேர்ந்தது மதுரை மாநகராட்சி இளங்கோ மேனிலைப்பள்ளி.


திவ்யானந்தம் வாத்தியார் சொன்னது போல் ஒரு கார்ப்பரேசன் பள்ளிக்கூடம்.

அப்பா வும் ஒரு கார்ப்பரேசன் பள்ளிக்கூட தமிழாசிரியர். அப்பா தான் சொன்னார். உண்மையாய் ஆசிரியர்கள் இங்கு தான் உழைக்கிறார்கள். தனியார் பள்ளிக்கூடஙகள் 430க்கு மேல் வாங்குன பசங்கள படிக்கவச்சு பேர் வாங்குறாங்க...அது பசங்க திறமை...ஆனா அரசாங்க பள்ளிக்கூடங்கள் தான் சரியா படிக்க முடியாத பசங்களுக்கும் அவர்களுக்கேற்ற்வாறுசொல்லிக்கொடுத்து தேர்ச்சி விகிதத்த காட்டுறாங்க...அதுனால அங்க சேரு னு சொன்னாங்க....

இளங்கோ மாநகராட்சி மேநிலைப்பள்ளி வரவேற்கிறது.

இயற்பியல் ஆய்வுக்கூடம். அதுதான் இயற்பியல் பாடத்திற்கு வகுப்பு...உபகரணங்கள் எல்லாத்தையும் தேவைப்படும்பொழுது வெளியே எடுப்பார்கள்.

வேதியியல் ஆய்வுக்கூடம். அதுதான் வேதியியல் பாடத்திற்கு வகுப்பறை. அங்கும் அப்படித்தான்.

தாவரவியல், உயிரியல் அப்படித்தான். உயிரியல் வகுப்பு செத்த பாம்பு, தவளை பாட்டில்களுக்கு இடையில். ஒரு நாள் பெய்த மழைக்கு உயிருடன் ஒரு தவளை அந்த வகுப்பில் நின்றது. நான் பயத்துடன் பாட்டிலில் இருந்த செத்த தவளை இருந்ததா எனப் பார்த்தேன்.

இப்ப நீங்க கேக்கணும்...தமிழ் ஆங்கில வகுப்புகளுக்கு எங்க போவீங்க..னு

கரெக்ட்...அதுக்கு எங்களுக்கு வகுப்பறைகள் கிடையாது . மைதானத்திலிருக்கும் ஒரு மரம் தான் எங்களுக்கு வகுப்பறை.

இதுல கணக்குப் பாடத்த நான் சேக்கல....

தமிழ் ஆஙில வகுப்புகளுக்காவது எங்களுக்கு வகுப்பறைதான் கிடையாது.

கணக்குப் பாடத்திற்கு டீச்சரே கிடையாது அப்புறம் தான வகுப்பறை...

ஆதலால் கணக்கு வகுப்பை இயற்பியல் சாரும் வேதியியல் டீச்சரும் போர்ச்சுக்கல்லை கிட்லரும், ஸ்டாலினும் அடிச்சு துவைச்சமாதிரி துவம்சம் பண்ணாங்க..கணக்குப்பாடம் நு ஒண்ணு இருக்குறத நாங்க மறந்துட்டோம்.

எல்லோரும் ட்யூசன் படிச்சோம்.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு பேஷன் இருக்கும். கிராப் தலை, தாடி முகம், பெரிய காலர், பெல் பாட்டம் பேண்ட் இப்படி



அதுமாத்ரி 1995 வாக்குல ட்யூசன் படிக்குறது மிகப்பெரிய பேஷன்.
நானும் போனேன்.

கணக்குப்பாடத்திற்கு. கலீம் சார். எழுதுவார் எழுதுவார்....எழுதிக்கிட்டே இருப்பார். அவரது வீட்டு மாடியில் ட்யூசனுக்குனே ஒரு பெரிய 2 கரும்பலகைகள் இருக்கும். அவர்தான் கணக்குப் பாடத்திற்கு ச்பெசலிஸ்ட். 190 வாங்கி 200 வாங்க  கஸ்டப்படும் மாணவர்களே அங்க அதிகம் ஒரு 40 பேர் இருப்பாங்க..நம்மலாம் பாஸ் மார்க்...2 கரும்பலகைகளிலும் 2 தடவ எழுதி அழிச்சு அப்புறம் எழுதி கணக்கோட விடை 0 நு தீர்வு கொடுப்பார். இந்த ஜீரோ வுக்கு இவ்வளோ எழுதனுமா..னு தான் அப்ப எனக்குத் தோணுச்சு.

எஙள் பள்ளியில் இயற்பியல் சார். அவர் நடத்துனாரோ இல்லையோ டெஸ்ட் வச்சார். நல்லா அடிச்சார். அவர் கொஞசம் குட்டையா இருந்தனால அவர உயரமான பசங்கள குனியச்சொல்லி தலையில் கொட்டுவார். எங்களுக்கு அது காமெடியாத்தான் இருக்கும்.

உயிரியல் நடத்துன கலாவதி டீச்சர் பழனி இங்க இருந்து எதிர்தாப்புல இருக்குற காலேஜுக்கு போனும் நு அடிக்கடி என்ட சொன்னாங்க....என்னால முடியல...அது மருத்துவ கல்லூரி.

பள்ளிக்கூடத்துல நடத்துன வேதியியல் டீச்சர் மீனா..அவர் நடத்துறதுக்கு முன்னாடியே நான் படிச்சுருவேன். காரணம் ட்யூசன் எடுத்த ரவிச்சந்திரன் சார். நான் காலேஜ் ல கெமிஸ்ட்டிரி எடுக்க தாக்கத்தை ஏற்படுத்துனவரு. ரவிச்சந்திரன் சார் மாதிரி கெமிஸ்ட்டிரி நடத்த முடியாது. அவர் தமிழ் படிச்சிருந்தா கூட அப்படித்தான பசங்ககிட்ட தமிழ் மீதான தாக்கத்த ஏற்படுத்திருப்பாரு. அந்த அளவுக்கு பாடத்த எங்கள நேசிக்க வச்சாரு. இப்ப ஏதாவது படிக்கணும்னு தோணுச்சுனா கெமிஸ்ட்ரி படிச்சா என்ன நு அப்ப என்னை யோசிக்க வச்சது ரவிச்சந்திரன் சார் தான்.

அப்புறம் ட்யூசன்ல உயிரியல், தாவரவியல் ஆசிரியர் கலைமணி....ஸ்டைலிஷான டீச்சர். அவர்ட்ட டாக்டராகனும்னே படிச்ச மாணவர்கள் ஜாஸ்தி 45 பேர். 44 பேர் ஆங்கில மீடியம். நான் ஒருத்தன் தமிழ் மீடியம். அவர் பாடம் நடத்துறப்ப குறிப்பு எடுக்கவேண்டும். ஆங்கிலத்தில் தான் சொல்வார். பிறகு தமிழில் சொல்வார். சொல்லும்பொழுது தமிழன் எங்கடா இருக்க....னு கேட்பார். கைய தூக்குவேன்...தமிழில் சொல்வார்.அதனால் தான் என்னவோ கல்லூரி க்குள் வரும்பொழுது ஆங்கில வழிக்கல்வி முறைக்கு நான் எளிதாக என்னை மாற்றிக்கொள்ள அவருடைய வகுப்பு உதவியாயிருந்தது. ஐ லவ் கலைமணி சார்....

மதுரை தியாகராசர் கல்லூரி- வேதியியல் துறை...நாளை திறக்கப்படும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....