க்ர்ர்ர்ர்....க்ர்ர்ர்ர்......

இந்த கட்டுரைக்கு முன்னுரை ஏற்புரைலாம் இல்லங்க....
ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வர்றேன்.
மதுரை டூ கொடைக்காணலுக்கு காரில் போனது தான் இந்த கட்டுரை.
இதுல என்ன பிரமாதம் னு கேக்குறீங்களா..
காரை நானே தான ஓட்டிட்டு போனேன்...
இதுல என்ன இருக்குனு சொல்வீங்களே.....(உங்களுக்கு கார் ஓட்டத்தெரியும் ...அதுனால ஈஸியா கேப்பீங்க....)
நான் தான் இதுவரைக்கும் மலையில ஓட்டுனதே இல்லையே....
சரிப்பா...மலைல தான் ஓட்டுனது இல்ல...சமதள பகுதில ஓட்டிருப்பேல...னு கேப்பீங்களே....(கேக்கணும்...0
ஓட்டலாம்...ஆனா என்ட்ட தான் காரே இல்லையே...அப்புறம் எப்படி ஓட்டுறது....
எப்புடி.....அல்லைய புடிக்குதா....பயப்படாம கொடைக்காணலுக்கு போலாம்...
வாங்க...

கி.பி. 2009ம் ஆண்டே நான் கார் டிரைவிங்லாம் போயி லைசென்ஸ் வாங்கிட்டேன். இருந்தாலும் ஓட்டிக்கொண்டே இருந்தாத்தான பயிற்சி ஆகும். நண்பர்களின் கார் கிடைக்கும்பொழுது அவர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்லும்பொழுது நானே ஓட்டி போயிருக்கேன். எனக்கு இந்த கார் ஓட்டுறதுல பயம் நகரத்துக்குள்ள டிராபிக்ல ஓட்டுறதுதான்.

டிரைவிங் பயிற்சி போனப்ப என்னத்தடா படிச்சனு கேக்காதீங்க....அரைமணி நேரம் தான் நமக்கு டைம் தருவாங்க...அதுல 2 கிமீ ஓட்டிட்டு போனாலே அதிகம். இதுல டிராபிக்கான இடமுலாம் வரப்ப பக்கத்துல பயிற்சி கொடுப்பவர் அவரே கியர் போட்டுக்குவார், அவரே ஆக்ஸிலேட்டர மிதிச்சுக்குவார். நான் சும்மா ஸ்டியரிங்க பிடிச்சு வளைச்சுகிட்டு இருப்பேன்.
இப்பக்கூட பெரிய மால் கடைகள் போனா பாக்கலாம். குழந்தைகளுக்கு ரிமோட் கார் இருக்கும். குழந்தைகளை அதில் அமரவைத்து ரிமோட்டில் ஓட வைப்பார்கள். குழந்தை ஸ்டியரிங்கை சும்மா சும்மா தடவிட்டு இருக்கும். நானும் அதையே தான் பண்ணிருக்கேனு தனியா கார் ஓட்டுனப்பத்தான் தெரிந்தது.
நண்பர்கள் நீ கார் நல்லாத்தான் ஓட்டுற ஏன் பயப்படுற னு சொல்லிச் சொல்லி தலையில யார் கண்ணுக்கும் தெரியாம ஒரு கொம்பு முளைச்சது. எனக்கும் பயம் நீங்கியது. மாசத்திற்கு ஒரு நாளாவது காரைத் தொடும்படியாய் நண்பனின் கார் கிட்டியது.
அப்பொழுது தான் நண்பன் ஒருவனும் நானும் குடும்பத்துடன் சேர்ந்து கொடைக்காணல் போனால் என்ன என்று முடிவெடுத்தோம். எனது பிளான் கார் நம்மட்டயும் கிடையாது. இந்த நண்பனிடமும் கிடையாது. டிராவல்ஸ்ல சொல்லியிரலாம்னு. ஆனால் நண்பனின் மைத்துனர் ஒரு காரை இரண்டாவதாக வாங்கி டிராவல்ஸ் க்கு அனுப்பிக்கொண்டிருந்தார். ஆதலால் நண்பன் என் மீது நம்பிக்கை வைத்து காரில் சென்றுவிடலாம் ஓட்டிருவியானு கேட்டான். ஆஹா...மலையேற்றத்திற்கு ஒரு கார் கிடச்சுருச்சுடா...னு நானும் ஒருமாதிரியா தலைய  ஆட்டுனேன்....ஆனால் அந்த நண்பனின் மைத்துனர் டிரைவர் அனுப்பி வைக்கிறேன் எனச் சொல்ல...என் நண்பன் மலை மட்டும் ஏற்றி விட்டு டிரைவர் வந்து விடட்டும் நாங்க திரும்புகையில் பழனிக்குமார் ஓட்டிருவானு சொல்லிட்டான்.மலை ஏற்றத்திற்கு அனுபவமுள்ள டிரைவர் தான் வேணுமாம்...(கொய்யாலே...எல்லாரும் இப்படியே சொல்லிட்டா நான் எப்பத்தான்யா மலையேத்துறது கார....)
முதல் நாள் :
8 மணிக்குக் கிளம்பி 11 மணிக்கெல்லாம் ஹோட்டலில் செக் இன் ஆகணும். மதிய உணவு என் மனைவியும் , நண்பனின் மனைவியும் சேர்ந்து தயாரிக்க, மதிய உணவு அங்கு அறையில் வைத்து அருந்திவிட்டு 4 மணிக்கு படகு சவாரி .....(அட இருங்கப்பா....இதுலாம் பிளான்) போலாம்னு பாத்தா...டிரைவர் வந்தது 9.30...ஒரு சின்னப்பையன். அந்த மைத்துனருக்கு வழக்கமாய் ஓட்டும் டிரைவர் அந்தப் பையன். அவர் சொல்லி அனுப்பிருக்கார் போல...என்னைப் பார்த்ததும் நீங்க தான் காரை ஓட்டப்போறீங்களா....னு கேட்டான். ஆமானு தான் சொன்னேன். கியர் ஆக்ஸிலேட்டர் தவிர எல்லாத்தையும் பாடம் நடத்துறான். ஒருவழியாய் கிளம்புகிறோம். மதுரை புறநகர் பகுதிக்கு கார் வந்தது . இண்டிகா கார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கிலோமீட்டர் ஓடுன கார் அது. முன்னாடி நான். பின்னாடி என் மனைவி, நண்பனின் மனைவி, நண்பன் , அவர்கள்து ஒரு வய்து குழந்தை . இப்ப அந்த டிரைவர் கேட்டான் எங்கிட்ட...."அண்ணே! கொடைக்காணலுக்கு எந்த ரூட்ல போகணும் "
(பலே வெள்ளையத்தேவா....தம்பி கொடைக்காணலுக்கு போனதில்லையாம்)
இது தெரியாம பின்னாடி மூணு பீஸுக குழந்தையைக் கொஞ்சிட்டு வருதுக....
தம்பிக்கு ரூட் சொல்லிட்டே மெதுவா கேட்டேன்...நீ மலையில் கார் ஓட்டிருக்கியா...
இல்லண்ணே னான்.....( இதுக்கு எதுக்குடா டிரைவர்...நானே ஓட்டிருப்பேனே....)
இப்பத்தான் இந்த பயணத்தின் டெரர் எனக்கு ஆரம்பிச்சது. இடையில காப்பி சாப்பிட நிக்கும்போது என் நண்பன்ட்ட சொன்னேன்....தம்பி மலை ஏத்துனதே இல்லையாம்பானு....(அப்பாடா...அவன் முகத்திலும் களேபரம்....நமக்கு நிம்மதி)
ஒருவழியா....மணி 2 கொடைக்காணல் வந்துட்டோம். டிரைவரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு ஹோட்டலுக்கு நானே ஓட்டி வந்தேன்..அருகில் நண்பனும் இருந்தான். கார் எப்படி இருக்குடா னு கேட்டான். நன்றாய் தான் இருந்தது. அறைக்குச் சென்று மதிய உணவு அருந்துகையில் மணி 3. அப்பொழுது ஆரம்பித்த மழை 7 மணி தாண்டி நிற்கவில்லை...இரவு உணவுக்கு வெளியே செல்லலாம் என முடிவு பண்ணப்பட்டது. நமக்கு காரை ஓட்டனும் அதுனாலே டபுள் ஓகே எனக்கு. ரிசார்ட்டின் வெளியே அவர்கள் மூவரையும் நிற்க வைத்துவிட்டு , கார் பார்க்கிங் குடையுடன் சென்றேன். காரைத் திறந்தேன். உள்ளே அமர்ந்து கதவை பூட்ட வெளியே மழை...எனக்கு மகிழ்ச்சி...காரை ஸ்டார்ட் செய்றேன்...ஸ்டார்ட் ஆகல...
மழையில் நனைஞ்சிருக்குல....அடுத்த கிளிக் ல ஸ்டார் ஆகும்..
ஸ்டார்ட் பண்றேன்...
ஸ்டார்ட் ஆகல...
4 மணி நேரமா மழைல....கொஞ்ச நேரம் ஆகும் னு நானா நினைச்சுட்டு
மறுபடியும் ஸ்டார்ட் பண்றேன்....
க்ர்ர்ர்...க்ர்ர்ர்ர்.க்ர்ர்ர்ர்...னு சத்தம் மட்டும் வருது....ஸ்டார்ட் ஆகல...
படிக்காதவன் படத்துல...ரஜினி லட்சுமி ஸ்டார்ட் ஆயிரு....லட்சுமி ஸ்டார்ட் னு சொல்றமாதிரி நான் ஸ்டார் பண்ண....
அதுவும்...க்ர்ர்ர்ர். க்ர்ர்ர்ர்.க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு ஒரு பத்தாவது கிளிக்கில் ஸ்டார்ட் ஆனது.
அப்பாடா நிம்மதி...காரை ஓட்டிக்கொண்டு ரிசாட் வெளியே சென்று அவர்களை ஏற்றிக்கொண்டு நகர ஆரம்பிக்க ஒரு பைக் காரன் காரை மறித்து நின்றான்.....கண்ணாடியை இறக்கி மழைக்குள் தலையை வெளியே காண்பிக்க...உங்க பின்னாடி டயர் பஞ்சர்.சார் னு சொன்னானே பாக்கணும்....
கீழ விழுந்த மழைலாம் ரிவர்ஸ்ல போற மாத்ரி படத்துல காமிப்பாங்கள...அப்ப்டி ஒரு பீலீங்க்.....அவங்கள இறக்கிவிட்டு ரிசாட்டுக்குள இருக்குற ஹோட்டலில் சாப்பிட்டு விடலாம்னு சொல்லி நண்பனும் நானும் கார் பார்க்கிங் சென்று காரை விட்டு விட்டு செக்யூரிட்டிடம் பஞ்சர் பாக்க கடை இருக்கா மெக்கானிக் வருவாங்களானு கேக்க...வரமாட்டாங்க...நாளை காலை ஸ்டெப்னி நான் மாட்டித்தரேன்...போயி பஞ்சர் பாத்துக்கங்கனார்.
2ம் நாள்:
காலையில் எழுந்ததும் நேரா பார்க்கிங் சென்றோம். செக்யூரிட்டி இன்னொருவரை அழைத்து காருக்கு வந்தார். டிக்கி திறந்து ஸ்டெப்னி எடுத்து ஜாக்கி எடுத்து வைத்து விட்டு அந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர்....(என்னங்கடா பாக்குறீங்க....)
ஒருத்தன் சொன்னான்...மாப்ள ஜாக்கிய சைடுல போடனுமா, பின்னாடி போடனுமா....
இன்னொருத்தன் சொன்னான் எங்கயாவது போடு மாப்ள.....
(நாசமா போச்சு.....டேய்...எதையாவது செஞ்சு பில்ல போட்ராதீங்கடா....)
ஒருவழியா பின்னாடி ஜாக்கி போட்டாங்க...கார் அப்படியே மேலே ஏறுது..டயர் அப்படியே அந்தரத்துல நிக்குது.
இப்ப கழட்டனும்....
ஒரு ஸ்பானர வச்சு திருகுறான் திருகல...
நல்லா திருகுடா மாப்ள னு இன்னொருத்தன் சொன்னான்...
அவன் நல்லாத்தான் திருகுனான்.....ஆனா...திருகல...
என்ன மாப்ள ....திருகுற....விடு...நான் திருகுறேன்...அவன் வாங்கி திருகுறான்...
அது திருகல.....
பக்கத்துல வந்த கார் ஓனர் ஒருத்தர் "ஏய்....அங்குட்டு திருகாதீங்கப்பா....மாத்தி திருகுங்கனார்...பாக்கனுமே...
(ரெண்டு பக்கிகளும் சேர்ந்து டயர கழட்டுறதுக்குப் பதிலா டைட் பண்ணிருச்சுக.....)
மறுபடியும் திருகுனானுக....
பக்கத்துல இருந்த வண்டி ஓனர் நின்டுகிட்டே இப்படி திருகு...ஏறி மிதி...இப்ப அடுத்த ஸ்குருவ திருகு.....அப்படி...இப்படி.னு சொல்லிட்டே இருந்தார். ஆக மொத்தம் வந்த இரண்டு பேத்துக்கும்..ஒண்ணும் தெரியல....ஒரு வழியா கழட்டி ஸ்டெப்னிய மாட்டுனானுக....சமயத்துல உதவி பண்ணிருக்காங்க னு பணம் கொடுத்தோம்.
நண்பன் சொன்னான் குளிச்சுட்டு சுத்திப்பாக்கப் போலாம்னு
எனக்கு என்னமோ காரை ஒரு தடவை ஸ்டார்ட் பண்ணி பாக்கலாம்னு...ஆனா போயிட்டு குளிச்சுட்டு வந்து....
காரைத் திறக்கிறேன்...
உள்ள குளு குளுனு இருக்கு. நைட் புல்லா மழைல...அதான் னு நண்பன் சொல்றான்.
கதவை மூடி சாவி துளைத்து, ஸ்டார்ட் பண்றென்....
க்ர்ர்ர்ர்....க்ர்ர்ர்ர்.
(என்ன க்ர்ர்ர் னு உங்களுக்கே தெரியும்...அது ஸ்டார்ட் ஆகல...)
லட்சுமி...ஸ்டார்ட் ஆயிரு....னு பல்ல கடிச்சுட்டே....ஸ்டார்ட் பண்றென்....
க்ர்ர்ர்ர்...க்ர்ர்ர்ர்...
(பல்ல கடிச்சாப்புல...ஸ்டார்ட் ஆயிருமா....ஆகல)
நைட் புல்லா மழைல..அதான் இப்ப ஆயிரும்..(அய்யா மக்களே..இத நான் சொல்லல...என் பக்கத்துல இருந்த நண்பன் சொன்னான்....)
தன்னம்பிக்கை இருக்கலாம் அப்ப எங்களுக்கு இருந்தது மூடநம்பிக்கை...
க்ர்ர்ர்...க்ர்ர்ர்...
க்ர்ர்ர்.க்ர்ர்ர்ர்
க்ர்ர்ர்ர்.க்ர்ர்ர்.
ஆகவே ஆகல....
அதே செக்யூரிட்டி வந்தார்...சார் நான் வேணும்னா தள்ளி விடவா....(ஏன்யா ஏற்கனவே வாங்குன 100 ஓவா போதாதா...)
இல்ல கொஞ்ச நேரமாகட்டும்....
மறுபடியும் ஸ்டார்ட் பண்றென்
க்ர்ர்ர். க்ர்ர்ர்ர்.
இன்னொரு கார் டிரைவர் வந்தார்.....சார் ஹீட்டர போட்டு ஸ்டார்ட் பண்ணுங்க...
ஹீட்டரா....அது எங்க இருக்கு...னு எனக்குத் தெரியாது ...மெதுவா அந்த டிரைவர்ட்டேயே கேட்டேன்...
ஹீட்டர்னா...எங்க இருக்கு..
அந்த டிரைவர் செம திறமைசாலி, காருக்குள்ள உக்காந்துருக்குற என்னைய ஏற இறங்க பாத்தான்.
சாவி ய ஆன் பண்ணி கொஞ்சம் நேரம் வைங்க....அப்புறம் ஸ்டார்ட் பண்ணுங்க னார்...
நாங்களும் அப்ப்டியே பண்ணோம்.....
க்ர்ர்ர்....க்ர்ர்ர்....
ஒண்ணுக்கும் ஆகல...
சார்...சார்...நான் வேணும்னா தள்ளவா.....(அதே செக்யூரிட்டி....டேய் வேணாம்...கொல வெறில இருக்கேன் னு சொல்லவா முடியும்)
அந்த பார்க்கிங்க்ல இருந்த இன்னொரு டிரைவர் வந்தார்...
சார் ஹீட்டர போட்டு பாருங்க...
(ஐ...ஐ...இப்பத்தான் நமக்கு ஹீட்டர்னா என்னனு தெரியுமே...) ஆகலங்க..
டபாலுனு அந்தாளு ஒர் பிட் போட்டார்
சார் நீங்க டீசல் எங்க போட்டீங்க.....
மதுரையில...
அதான் சார்...அது உறைஞ்சிருச்சு...நீங்க எப்ப வந்தாலும் கொடைக்கானலுக்கு, இங்க கொஞ்சம் டீசல் போடணும்..இங்க தான் இவங்க டீசல் உறையாம இருக்க ஒரு திரவம் சேப்பாங்க......
அப்படியா.....(இது நான்...பாருங்க எவ்ளோ வெகுளினு....)
சார்....நான் வேணும்னா கார தள்ளட்டுமா....அதே செக்யூரிட்டி...
சரி தள்ளுங்கனு (நல்ல வேல அது ஒர் மேடு....) அங்க இருந்து வேகமா தள்ளிவிட்டு ஸ்டார்ட் பண்ணிட்டோம்...அன்னைக்கு பகல் முழுவதும் சுத்திபார்த்துட்டு 3 மணிக்கு ரூம்க்கு வந்துட்டோம். 3.30 க்கு மழை ஆரம்பிச்சது.
மழைனா மழை...அப்படி மழை...
மணி 5 ஆச்சு...மழை நிக்கல...
எனக்கு என்ன பயம்னா கார் ஸ்டார்ட் ஆகுமான்றது தான்..
என் நண்பன் கடமையா வந்து இரவு உணவுக்கு வெளிய போவோமா னு கேட்டான்...இருந்தாலும் இவ்ளோ நம்பிக்கை இருக்கக்கூடாது.
.நாங்க ஏற்கனவே காரை நிறுத்தியது ரிசாட்டுக்கு வெளியே..
பார்க்கிங்கில் இல்லை.
 ஏன்னா அந்த செக்யூரிட்டி என்க காரை பாக்குறப்ப கரகாட்டக்காரன் படத்துல காருக்கு ஒரு ம்யூசிக் போடுவாங்கல...அப்படி பாத்தார்.

மணி 7. வெளியே வந்தேன். அதே மழை....காருக்குள் அமர்ந்தேன்.
 நண்பனும்
குளுகுளுனு இருக்குல னு கேட்டேன்....
மொதல ஸ்டார்ட் பண்ணுடா னு சொன்னான்.
சாவியை எடுத்து...இந்த இராமாயண நாடகத்துல இராவணன் மீது அம்பு எய்யும்போது இராமன் அம்பை முத்தமிட்டு சாமி கும்பிடுவார் அப்படி பண்ணலாம்னு தோணுச்சு.
சாவியை துவாரத்தில் நுழைத்துவிட்டு நண்பனைப் பார்த்தேன்..ஒரு மரண பயம் ஓடிக்கொண்டிருந்தது.
மொதலில் ஹீட்டரை ஆன் செய்ய வேண்டும்.
பண்ணியாச்சு....
சாவியை திருகி ஸ்டார்ட் செய்றேன்...
க்ர்ர்ர்ர்....க்ர்ர்ர்ர்.....
லட்சுமி.....ஸ்டார்ட் ஆயிரு.....னு பல்லைக் கடிக்கிறேன்....
க்ர்ர்ர்ர்....க்ர்ர்ர்ர்.....ஆகல....
நண்பன் என்னைப் பார்த்தான்.
நம்ம இங்கயே சாப்பிட்ருவோமா...வெளியே வேற மழை....
இப்போது கார் சன்னலை யாரோ தட்டுகிறார்கள்...
கண்ணாடியை இறக்குறென்...
கொட்டுற மழையில கொடையுடன் வந்து " சார்....கார தள்ளனுமா..." (நம்ம செக்யூரிட்டியே தான்....)
ஆணியே புடுங்கல.....நாளைக்குனேன்....

3ம் நாள்..
காலையில எழுந்ததும் நேரா காருக்குத் தான் போனோம்.
க்ர்ர்ர்ர்...க்ர்ர்ர்ர்.....
க்ர்ர்ர்ர்...க்ர்ர்ர்ர்...
ஆகல....
எதிர்தாப்புல இருந்த டிராவல்ஸ் டிரைவர்ட்ட உதவி கேட்டோம். எல்லாரும் சேர்ந்து காரைத் தள்ளினார்கள்.
ஸ்டார்ட் ஆனது.
என்ன ப்ராப்ளம் னே
பேட்டரி வீக் சார் அதான்
அப்பத்தான் என் நண்பன் அந்த அறிவியல் பூர்வமான கேள்விய கேட்டான்...கொடைக்காணலில் டீசல் உறையாம இருக்க திரவம் ஊத்துவாங்களா...
அந்த டிரைவர் அப்படியே அவன ஏற இறங்க பாத்தார்...
அதுலாம் இல்ல சார்
நல்ல அடி வாங்குன வண்டி....அதான் பேட்டரி போச்சு....
நன்றி சொல்லிட்டு கிளம்பிட்டோம்...
நல்லாவே ஓட்டி வந்தேன்...பாதுகாப்பாய் வந்து சேர்ந்தோம்...
ஆனா முதல் தடவையாய் கார் எடுத்துப்போகும் புது டிரைவருக்கு என்ன என்னலாம் நடக்கக்கூடாதோ அதுலாம் நடந்துருச்சு.
கொடைக்காணலில் எங்க பஞ்சர் பாப்பாங்க....எங்க ஸ்டெப்னி கழட்டுவாங்க னு இப்ப அத்துபிடி....
இனி எப்போதுமே லட்சுமி ஸ்டார்ட் ஆயிரும்..
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....