இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சைரன் பக்க & பக்கா 5

உடல் எடை குறைப்பில் இவ்வளவு வேலை இருக்கிறதா என்று ரிஷி சார் கேட்டிருந்தார். ஒருவகையில் எடை குறைப்புப் பற்றி ஒரு பயத்தை அல்லது தெளிவற்ற நிலையை நான் ஏற்படுத்திவிடக்கூடாது. இதை விழிப்புணர்விற்கோ அல்லது எச்சரிக்கைக்கோ சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இப்படி எல்லாம் எல்லாருக்கும் நடக்குமா என்று கேட்டால் நடக்காது. ஆனால் நடக்கலாம். ஒருத்தர் உடல் எடையைக் குறைக்கும்பொழுது குறையும் வேகம் சீராக இருக்க வேண்டும். கடுமையான பயிற்சி செய்தால் வேகமாகக் குறைக்கலாம். உதாரணத்திற்கு வாரணம் ஆயிரம் சூர்யா , ஐ படத்தில் விக்ரம் குறைத்தது. ஏன் கமல் உடம்பு கூட குறைந்து ஏறி வரும் திறன் பெற்றது. வசூல்ராஜா படத்தி ல்இருக்கும் கமலுக்கும் தசாவதாரம் படத்தில் இருக்கும் கமலுக்கும் விஷ்வரூபம் படத்தில் இருக்கும் கமலுக்கும் வித்தியாசம் இருக்கும். இது எல்லாம் வண்டியை வேகமாக ஓட்டும்பொழுதே கவனிப்புடன் அதே நேரத்தில் வண்டியின் கண்ட் ரோல் முழுக்க நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஓட்டுவது போல் தான். நம்மை மீறி உடல் எடை குறைகிறது என்ற போது தான் பிரச்சினை. ஒரு பாகத்திற்கு எப்பொழுதும் போல இரத்தம் போய் வந்து கொண்டிருக்கும். திடீரெ

சைரன் பக்க அண்ட் பக்கா 4

உடல் எடை அதிகமாக இருப்பது தான் பிரச்சினை என்றால் குறைப்பதில் பிரச்சினையா என்பது ஒரு வகையான பயத்தை ஏற்படுத்தியிருக்கும் உங்களுக்கு. வழவழ கொழகொழ வேண்டாம். உடல் எடை குறைப்பில் என்னென்ன பிரச்சினைகள் வரும். அதை மனதளவில் உடலளவில் என இரண்டா பிரிச்சுக்கிறேன். முதலில் மனசுல இருந்து ஆரம்பிப்போம்.. எப்படியாவது சாப்பிட்டு விடு என்று மூளை உங்களைத் தூண்டும். க்ரேவிங்க் எனக்கு முதல் எதிரி. இரண்டாவது நேர் எதிராய் சந்திக்கும் ஒரு விமர்சனம். இப்ப மெலிஞ்சு என்ன செய்யப்போற. இந்த மாதிரி விசயங்கள். மூன்றாவது எதற்காக மெலியவேண்டும் என்ற அவசியமும் விழிப்புணர்வும் இல்லாமலிருத்தல். அடுத்ததாக உடலளவில் ஏற்படும் பிரச்சினைகள். நாம் உடல் எடையைத் திடீரெனக் குறைக்க ஆரம்பிக்கிறோம். அதில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியும் காரணிகளாக இருக்கும். கண்டிப்பாக உடற்பயிற்சி சில வலிகளையும் அசதிகளையும் தரும். நான் போன சைரன் மெலிதல் தொடரில் சொன்னதைப் போல ஓட்டப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்பொழுது நம்ம எப்ப கடைசியா ஓடுனோம்னு யோசிச்சுப் பார்த்தா பதினேழு வருசத்துக்கு முன்னாடினு போகும். திடீருனு ஓடும்பொழுது கால் வலி

சைரன் பக்க அண்ட் பக்கா 3

கூட்டத்துல ஒரு பச்சை சட்டைக்காரன் நழுவுறான். காசு போடாம போனா இரத்தம் கக்கி சாவான்னு வடிவேல் காமெடி மாதிரி போன பதிவில் ஒரு ஹார்ட் அட்டாக் கதையோடு முடித்தேன். அந்தக் கதை பீதியைக் கிளப்புவதற்கா என்று கேட்டால் இல்லை. ஆனால் உங்களுக்கு பீதியாகிறது என்றால் கம்பெனி பொறுப்பாகாது. கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறோம். நமது அணி பேட்ஸ்மேன் தூக்கி அடிக்கிறான். பந்து பறக்குது. சிக்ஸர் போகப்போகுது. கடைசி கோடு கிட்ட ஒரு உசந்த வெஸ்ட் இண்டிஸ் ஃபீல்டர் எட்டிப் பறந்து அந்தப் பந்தைக் கேட்ச் பிடிச்சிரான். எப்படி இருக்கும் . அப்படித்தான் அந்தக் கதையில் அந்த அண்ணனுக்கு. லிபிட் புரொஃபைல் டெஸ்ட் எடுத்து ஒழுங்கா நடக்க ஆரம்பித்து உணவு முறையை மாற்றியிருந்தால் அந்த ஒரு மாதத்தில் கொஞ்சமாக ஏதாவது தேறியிருப்பார். சேதாரம் அதிகமாகி இருக்காது. எல்லாம் சரி. இவ்வளவு விழிப்புணர்வு இருந்தும் ஏன் எடை குறைப்பு நமக்குக் கடினமாக இருக்கிறது எடை குறைப்பில் நமக்கு பெரும் சிக்கலாக இருப்பதுனு நீங்க என்னென்ன லிஸ்ட்லாம் போடுங்க. எத்தனை காரணிகளையும் சேர்த்துக்கோங்க. என் புருஷன் விடல, என் பொண்டாட்டி விடல. எனக்கு ஆபிஸ் இருக்கு

ஸ்டெர்லைட்..போஸ்ட்மார்டம்.

என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகள் என்னுடையக் கேள்விகள் அல்ல. சிலரது பதிவுகளில் சிலரது வாதங்களில் வந்தவை. அவற்றிற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று சலித்து சலித்து வைத்தாலும் சில கேள்விகளை நாம் தவிர்க்க முடியாது. அதில் ஒரு கேள்வி ஸ்டெர்லைட் ஆபத்தானது என்று இன்று தான் தெரியுமா. ஏன் இவ்வளவு நாட்கள் போராடவில்லை என்பது போன்ற ஒரு கேள்வி அது சார் இன்னொரு கேள்வி கேன்சர் ஸ்டெர்லைட் மூலமாகத்தான் வருகிறதா அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்பது. தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் வந்தது முதல் பிரச்சினைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த எல்லோர்க்கும் என்பது அரசியல்வாதிகள் தூத்துக்குடி சார் அரசு அதிகாரிகள். பாதுகாக்கப்படவேண்டிய வளைகுடாவிலிருந்து இத்தனை கி.மீ தூரத்தில் தான் இந்த ஆலை இருக்கவேண்டும் என்ற விதி தான் முதல் விதி மீறல். அப்படிப்பார்த்தால் அந்த ஆலையே அங்கு அமைந்திருக்கக்கூடாது. அதை அப்படியே அமுக்கிவிட்டார்கள். இந்தப் பிரச்சினை ஏன் தெரியவில்லை என்றால் இப்பொழுது இருக்கும் சமூகவலைத்தளங்களின் வீச்சு அப்பொழுது இல்லை. இப்பொழுது இருக்கும் சமூக ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பான தொடர்புக

சைரன் பக்க அண்ட் பக்கா 2

நம்ம சந்தோசமாய் எடை குறைக்க ஆரம்பிச்சுட்டோம்னு இருப்போம். அப்பத்தான் நமக்கு கமெண்ட் சொல்வானுக. கிட்டத்தட்ட நீங்க எயிட்ஸ் பேஷண்ட் மாதிரி இருக்கீங்க அப்படினு ரெண்டு பேர் நேரடியாக என்னிடம் சொன்னார்கள். நான் சந்தித்த விமர்சனங்களில் மோசமானது என்று சொல்லிவிடமுடியாது. எப்பொழுதும் வார்த்தைகளின் ஆழங்கள் வெறும் வார்த்தைகளைக் கொண்டு அளவீட முடியாது அல்லவா. சொன்னவர்கள் என் மீது அதிக மதிப்பு கொண்டவர்கள். பாசம் கொண்டவர்கள். ஆதலால் இந்த விமர்சனம் எனக்கு ஒரு செக் மேட் தான். இதற்கு பதில் சொல்வது கொஞ்சம் சிரமம் தான். நீ ஏன் இப்படி மெலியுற. ஏன் மெலியனும். இனி மெலியாத. இப்படி எல்லாம் சொல்லவந்தவர்கள் இப்படி முடிக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் திரும்ப திரும்ப நான் சொன்னது இது தான். என் உயரம் 174 செமீ. நான் இருக்க வேண்டிய எடை ஓர் ஆரோக்கிய அளவீட்டிற்காக, ( இது ஒன்றும் மிகத் துல்லியமான அளவீடு இல்லை, ஆனால் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை ஆரோக்ய அளவீடு)  74 இருக்கலாம். கொஞ்சம் கூடுதலாக இருந்தால் தவறில்லை. நான் இருந்தது 86. ஆதலால் குறைத்தேன் என்று பதில் சொல்ல வேண்டும். மருத்துவத் துறையில்

சைரன் பக்க அண்ட் பக்கா 1

ரஜினிகாந்த் ஒரு மேடையில் ஒரு கதை சொன்னார். அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நான்கு தவளைகள் மலையில் ஏறும். மேலே போகாதே மேலே போனால் அங்கு பாம்பு இருக்கும் தேள் இருக்கும் என எல்லாத் தவளைகளும் சொல்லும். ஒரு தவளை மட்டும் மேல் ஏறி முன்னேறிச் சென்று தன் இரையைப் பெறும். காரணம் என்னவென்றால் அந்தத் தவளைக்குக் காது கேட்காது. அதுபோல் சில விசயங்களில் விமர்சனங்களை எதிர்பார்க்காது பொருட்படுத்தாது நம் வேலைகளை நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும். அதில் ஒன்று நம் உடல் எடையைக் குறைத்தல். நான் 86ல் இருக்கும்பொழுது ...ஐயா தெய்வங்களா உடனே கி.பி 1986நு நினைச்சிராதீங்க. 86 கிலோ என் உடல் எடையில் இருக்கும்பொழுது ஒரு செல்ஃபி எடுத்தால் ஜூம் பண்ணாமலேயே ஜூம் பண்ண மாதிரி  தெரிஞ்சது. அந்தளவிற்கு புஸுபுஸு என்று மாறிப் போனேன். ஒரு வழியாக ஒரே மாதத்தில் ஐந்து கிலோ குறைக்கச் சாத்தியமாகிப்போனது. ஒவ்வொரு முறை வேலைக்குக் கிளம்பும்பொழுது நம்முடைய ஆடைகள் அதுவும் இறுக்கமாக இருந்த ஆடைகள் தளர்வாக இருக்கும்பொழுது வரும் சந்தோசத்தைச் சொல்ல முடியாது. எனக்கு அப்படி சந்தோசம் வரும்பொழுதெல்லாம் ஒரு அண்ணன் ஒரு கடையில் இருப்ப

சைரன் - பக்க அண்ட் பக்கா - அறிமுகம்.

எதற்காக எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுத ஆரம்பித்தது தான் சைரன். ஒரு நீண்ட கட்டுரையைப் படிப்பதில் சோம்பேறி நான். ஆனால் சைரன் என்று தலைப்பிட்டு எழுத ஆரம்பித்தது பெரும் கட்டுரையாக நீண்டது. பெரும் அயர்ச்சியை படிப்பவர்களுக்குத் தந்திரக்கூடாது. மேலும் எத்தனை பேர் இதனை ஆர்வமாகப் படிப்பார்கள் என்றும் எனக்கு அப்பொழுது தெரியவில்லை. ஆதலால் அதைத் தொடராக எழுதலாம் என உத்தேசித்து தொடரும் என்று ஸ்லைட் போட்ட நாடகமாக போஸ்ட் போட்டேன். சில நண்பர்களுக்குப் பிடித்துப்போக ஏற்கனவே எழுதிவைத்த இரண்டாம் பாகக் கட்டுரையை வரி வரியாக ஆழப்படுத்தி மெருகு ஏற்ற சைரன் ஒரு தொடர் ஆனது. ஒரு நண்பனின் உடல்நிலைக்கு ஏற்றபடி சில உடற்பயிற்சிகளையும் பழக்க வழக்கத்தையும் நான் சொல்லிச் சொல்லிப் பிறகு ஒரு வாட்ஸப் குழுமம் ஆரம்பித்து நான்கு நண்பர்கள் மட்டும் வைத்து உடல் மெலிய ஒரு குழு ஆரம்பித்தேன். விளையாட்டாய் ஆரம்பித்தது ஒரு பயிற்சியாக மாறி என் உடல் எடை குறைக்க ஆரம்பித்தேன். சில நண்பர்கள் அதைப் பகிரும்படி கேட்க இதை எழுத்தாக்க ஆரம்பித்தேன். ஒரு புதிய படத்தை எடுக்க முடியாவிட்டால் பழைய கதையை டிங்கரிங்க் வேலை பார்த்து இன்னொரு பட