சைரன் - பக்க அண்ட் பக்கா - அறிமுகம்.

எதற்காக எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுத ஆரம்பித்தது தான் சைரன்.
ஒரு நீண்ட கட்டுரையைப் படிப்பதில் சோம்பேறி நான்.
ஆனால் சைரன் என்று தலைப்பிட்டு எழுத ஆரம்பித்தது பெரும் கட்டுரையாக நீண்டது. பெரும் அயர்ச்சியை படிப்பவர்களுக்குத் தந்திரக்கூடாது. மேலும் எத்தனை பேர் இதனை ஆர்வமாகப் படிப்பார்கள் என்றும் எனக்கு அப்பொழுது தெரியவில்லை. ஆதலால் அதைத் தொடராக எழுதலாம் என உத்தேசித்து தொடரும் என்று ஸ்லைட் போட்ட நாடகமாக போஸ்ட் போட்டேன்.

சில நண்பர்களுக்குப் பிடித்துப்போக ஏற்கனவே எழுதிவைத்த இரண்டாம் பாகக் கட்டுரையை வரி வரியாக ஆழப்படுத்தி மெருகு ஏற்ற சைரன் ஒரு தொடர் ஆனது.

ஒரு நண்பனின் உடல்நிலைக்கு ஏற்றபடி சில உடற்பயிற்சிகளையும் பழக்க வழக்கத்தையும் நான் சொல்லிச் சொல்லிப் பிறகு ஒரு வாட்ஸப் குழுமம் ஆரம்பித்து நான்கு நண்பர்கள் மட்டும் வைத்து உடல் மெலிய ஒரு குழு ஆரம்பித்தேன்.
விளையாட்டாய் ஆரம்பித்தது ஒரு பயிற்சியாக மாறி என் உடல் எடை குறைக்க ஆரம்பித்தேன். சில நண்பர்கள் அதைப் பகிரும்படி கேட்க இதை எழுத்தாக்க ஆரம்பித்தேன்.
ஒரு புதிய படத்தை எடுக்க முடியாவிட்டால் பழைய கதையை டிங்கரிங்க் வேலை பார்த்து இன்னொரு படம் எடுப்பது போல, இரண்டாம் பாகம் எடுப்பதைப் போல சோம்பேறித்தனமான மூளை யோசிக்க ஆரம்பித்தது.
அப்படித்தான் சைரன்-மெலிதல் எழுதினேன்.
தொடர்ந்து சில நண்பர்கள் அதை ஊக்கப்படுத்த அதையும் ஒரே கட்டுரையாக எழுத முடியாமல் தொடர்ச்சியாக எழுதினேன்.

தொடர் வேலைப் பளு பிறகு சோம்பேறித்தனம் என இப்பொழுது இன்னொரு கட்டுரை எழுத ஆசை வந்துவிட்டது.

84 கிலோவிலிருந்து 74 கிலோவிற்கு இறக்கி பிறகு அதை மெயின்டெயின் செய்வதில் இருக்கும் திருப்தி அது சார் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டுமானால் ஒரு கட்டுரையில் அதை நிறுத்த முடியாது. அவ்வளவு விசயங்களைக் கடந்து கொண்டு இருக்கிறேன்.
 எதற்காக எழுதப் போகிறேன் என்று ஆரம்பித்து அதை ஒரு பெரிய எழுத்தாளர் போல் பாவ்லா செய்து எழுதுவது ஒரு அகங்காரப் போக்காக இருந்தாலும் சரி விளம்பரப் போக்காக இருந்தாலும் சரி ஒரு விர்ச்சுவல் (மாயை) உலகிற்குள் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன்.
அது தான் இது.
ஓர் ஆளை உட்கார வைத்து நம்மின் பராக்கிரமங்களைச் சொல்ல ஆசைப்பட்டால் ஒன்று அவர் நம்மிடம் வேலை செய்பவராக இருக்க வேண்டும் அல்லது நம் மூலமாக அவருக்கு ஒரு வேலை அவர் செய்ய இருக்க வேண்டும்.
இரண்டு வகையறாவும் இல்லை என்றால் அவர் குறுக்கே பேசி நம்மை அணத்த விட மாட்டார்.
இப்படி எழுதி விடுவது அதுவும் பேச இருப்பதை அல்லது பேச விரும்புவதை எழுதி விடுவது எளிது.
அணத்திரலாம்.

ஆக, உடல் மெலிந்த பிறகும் , அதை மெயின்டெயின் பண்ணுவதிலும் அது சார் காரணிகளைக் கையாண்டதும் தான் இது. அவ்வளவு தூரத்திற்கு இது பேசவேண்டுமா என யோசித்தே ஒரு மாதமாக எழுதவில்லை.

ஒரு நேர்மறையானக் கருத்து ஒன்று உண்டு. நீ என்னவாக ஆக விரும்புகிறாயோ அதற்கு ஏற்ற படி இப்பொழுதே மாறு. அப்பா ஆகுவதற்கு முன் குழந்தையின் பெயரைத் தேர்வு செய்வது போல். உடல் ஆரோக்கியத்தில் ஒன்றான உடல் எடையை சரி விகித்தத்தில் வைத்திருப்போருக்கு வைத்திருக்க முயற்சி செய்பவர்களுக்கு ஏதாவது சொல்ல ஆசையாய் இருக்கிறது.
நான் ஐந்து கிலோ குறைஞ்சதும் ஒரு நண்பர் கேட்டார், எனக்கு காசநோயா என்று.....
84 எனக்கு ஓவர் வெயிட் இப்பொழுது 79 இருக்கேன். இன்னும் குறையனும் என்றதும் 84 தான் கெத்து என்றார்.

இப்படி சொல்றவன் எல்லாம் நம்ம ஓடி மூச்சு வாங்குறப்ப ஓடி வந்து காத்து கொடுக்குறவன் இல்ல.

இப்படிப் பட்ட சமாச்சாரங்களை முடிந்த அளவிற்கு இழுக்காமல் ஒரே கட்டுரையில் எழுத ஆசை.

ஆக, சைரன், சைரன்- மெலிதல் வரிசையில்

சைரன்- பக்கா விளைவுகளும் பக்க விளைவுகளும்....


சைரன் ஒலி விரைவில்.....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....