சைரன் பக்க & பக்கா 5
உடல் எடை குறைப்பில் இவ்வளவு வேலை இருக்கிறதா என்று ரிஷி சார் கேட்டிருந்தார்.
ஒருவகையில் எடை குறைப்புப் பற்றி ஒரு பயத்தை அல்லது தெளிவற்ற நிலையை நான் ஏற்படுத்திவிடக்கூடாது. இதை விழிப்புணர்விற்கோ அல்லது எச்சரிக்கைக்கோ சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இப்படி எல்லாம் எல்லாருக்கும் நடக்குமா என்று கேட்டால் நடக்காது. ஆனால் நடக்கலாம்.
ஒருத்தர் உடல் எடையைக் குறைக்கும்பொழுது குறையும் வேகம் சீராக இருக்க வேண்டும். கடுமையான பயிற்சி செய்தால் வேகமாகக் குறைக்கலாம். உதாரணத்திற்கு வாரணம் ஆயிரம் சூர்யா , ஐ படத்தில் விக்ரம் குறைத்தது. ஏன் கமல் உடம்பு கூட குறைந்து ஏறி வரும் திறன் பெற்றது. வசூல்ராஜா படத்தி ல்இருக்கும் கமலுக்கும் தசாவதாரம் படத்தில் இருக்கும் கமலுக்கும் விஷ்வரூபம் படத்தில் இருக்கும் கமலுக்கும் வித்தியாசம் இருக்கும்.
இது எல்லாம் வண்டியை வேகமாக ஓட்டும்பொழுதே கவனிப்புடன் அதே நேரத்தில் வண்டியின் கண்ட் ரோல் முழுக்க நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஓட்டுவது போல் தான்.
நம்மை மீறி உடல் எடை குறைகிறது என்ற போது தான் பிரச்சினை.
ஒரு பாகத்திற்கு எப்பொழுதும் போல இரத்தம் போய் வந்து கொண்டிருக்கும். திடீரென இரத்தத்தின் வரத்து குறைந்து அதிகமாகி இருக்குமானால் ஒரு சின்ன ஜெர்க் இருக்கும் . ஒரு ஷாக் ஏற்பட்டும்.
உதாரணத்திற்கு கணையத்தில் இப்படி ஒரு ஜெர்க் ஏற்படும் என்றால் நார்மலாக இருக்கும் ஒருவருக்கு இதன் காரணமாக இன்சுலின் உற்பத்தி பாதிப்படையலாம். அது போல் கிட்னிக்கும் நடக்குமானால் பிரச்சினை தான்.

ஆனால் உண்மை என்ன என்றால் நாமாக உடல் எடையைக் குறைக்கிறோம் என்றால் அவ்வளவு வேகமாகக் குறைப்பது கிடையாது.
சிலர் நோயின் காரணமாக காரணமே அன்றி உடல் எடை குறைகிறது என்றால் உடனடியாக எதற்காக குறைகிறது என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்
ஆக, உடல் எடை குறைப்பு என்பது நமது கட்டுப்பாட்டில் இருந்துகொண்டே நிகழ வேண்டும்.
நாம் உடல் எடையைக் குறைப்பதற்கும் அதுவாக குறைவதற்கும் வித்தியாசம் உண்டு.
ஆக உடல் எடை குறைப்பில் , தலைவலி, மலச்சிக்கல், டயர்ட்னெஸ், சில நேரம் நரம்பு தளர்ச்சி இது போன்ற பிரச்சினைகள் தான் சில சமயம் நாம் சந்திக்க நேரிடும். நன்றாக கவனியுங்கள். சில நேரம்...மட்டும் தான். சிலருக்குத்தான். எனக்கு அப்படி வருமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொண்டிருக்கக்கூடாது. இதைத் தெரிந்துகொள்வதன் மூலம் நீங்கள் செய்யவேண்டியது உங்கள் டயட்டில் நீங்கள் அதற்கு ஏற்றபடியான உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்ளுதல் அவசியம்.
தலைவலி வந்தால் பசியைத் தாங்கத் தேவையில்லை. வெள்ளரிக்காய் நெல்லிக்காய் போன்றவற்றை.
மலச்சிக்கல் வந்தால் நார்ச்சத்து நீர்சத்து நீராகாரம் போன்றவற்றை
தசை பிடிப்பு போன்றவை வந்தால் அதற்கேற்ற படி மருத்துவர் ஆலோசனை செய்துகொள்ளலாம்.
சுகர் பேஷண்ட் , இதய நோயாளிகள் தாராளமாய் டயட்டில் இருக்கலாம். முதலில் உங்கள் உடம்பு சொல்வதைக் கேளுங்கள். எப்பொழுது சுகர் இறங்கும் என்பதைக் கண்டுபிடியுங்கள். அதற்கு ஏற்றபடி சரி செய்துகொள்ளுங்கள்.
நம் உடம்பு நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கும். நாம் தான் அதைக் கவனிப்பதில்லை.
பிரியாணி சாப்பிட்டு சில நேரத்தில் அது செரிக்காமல் நெஞ்சிலேயே நின்று பிறகு எலுமிச்சை சாறு சோடா அது இது என்று குடித்து ஒரு ஏப்பத்திற்கு பாடுபடுபவர்கள் உண்டு. சரி இப்படி ஆகிறதே என்று அடுத்தமுறை அதைத் தவிர்ப்பார்களா என்று பார்த்தால் . மாட்டார்கள். பாஸ்...அது பிரியாணி...என்று சொல்லிவிட்டு அமுக்கிவிட்டு வருவார்கள். எதற்காக உங்கள் உடம்பைக் கடினப்படுத்துகிறீர்கள்.
ஹோட்டல் செல்வார்கள். மதிய உணவிற்கு. அன்லிமிட்டெட் மீல்ஸ். 120 ரூபாய். நான்கு காய்கறிகள் வைப்பார்கள். ஓரத்தில் உப்பும் ஊறுகாயும். ஒரு ஸ்விட் வைப்பார்கள் . பிறகு பாயாசம். இப்பொழுது எல்லாம் ஒரு வெல்கம் டிரிங்க் என்று தண்ணீர்பழ ஜூஸ் மாதிரி ஏதாவது வைக்கிறார்கள்.
பிறகு சப்பாத்தி வைக்கிறார்கள். அப்புறம் சாதம். சாதத்திற்கு பருப்பு நெய். அப்புறம் பொடி நெய். பிறகு தான் சாம்பார். அப்புறம் வத்தக்குழம்பு. சில ஹோட்டல்களில் வத்தக்குழம்பு போக மோர் குழம்பும் வைப்பார்கள். நெல்லை மாவட்டத்தில் சொதிக்குழம்பு இருக்கும் . பிறகு ரசம். அப்புறம் தயிர்.
எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்க அவர்கள் வயிற்றில் இடம் இருக்காது. நீங்கள் பசிக்காகச் சாப்பிட வேண்டுமெனில் இவ்வளவு சாப்பிடத் தேவையில்லை. ஆனாலும் ஆசை விடுவதில்லை.
மனத்தை ஒரு வழியாக ஒரு நாய்க்குட்டி ஆக்கி , டேய் , இங்க உட்காரு..அங்க உட்காருனு சொல்லிக்கொடுத்தா மனசும் நாய்க்குட்டியும் ஒண்ணுங்க. நம்ம சொல்றத கேட்டுட்டு வாலாட்டிட்டு இருக்கும்.
இதுவரை ஐந்து நண்பர்கள் நல்ல டயட் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டுவிட்டனர். டயட் பற்றி போன சைரன் மெலிதல் தொடரில் சொல்லிவிட்டேன். சுருக்கமாகச் சொல்வது என்றால் நான் ஒன்றும் டயட்டீசியன் கிடையாது. ஒரு சாதா பிரஜை. கிடைப்பதை வைத்து உண்பவன்.
வாழ்க்கையில் இரு பாதிகள் உண்டு. ஒரு பாதியில் சிரிப்பவர்கள் மறுபாதியில் அழுவார்கள் என்ற வொர்ஸ்ட் லாஜிக் எல்லாம் எனக்கு இல்லை.
அதையே கொஞ்சம் மாறுதலாக சொல்ல நினைத்தால், ஒரு பாதியில் நீங்கள் பிடித்தவற்றைச் சாப்பிட்டு இருப்பீர்கள். இனி நல்லனவற்றை நீங்கள் சாப்பிடாமல் இருந்திருப்பீர்கள்.
உதாரணத்திற்கு எங்கள் வீட்டில் ஒரு முரட்டு சேட்டைப் பிள்ளை நான். எங்கள் வீட்டில் சப்பாத்தி என்றால் எனக்கு மட்டும் பூரி செய்ய வேண்டும். சப்பாத்தி சுத்தமாகப் பிடிக்காது. மேலே சொன்ன அன்லிமிடெட் மீல்ஸில் ஓசியாக வரும் சப்பாத்தியைக் கூட சர்வரைக் கூப்பிட்டு எடுத்துவிடுங்கள் என்று திருப்பியடிக்கும் விஜயகாந்த் ஸ்டைல்காரன் நான். ஆனால் டயட் என்று தீர்மானித்தவுடன் வாரத்திற்கு மூன்று மதிய உணவு வெறும் மூன்று சப்பாத்திகள் தான்.
விஜய தசமி சரஸ்வதி பூஜை சமயங்களில் அறிவுரைக்குப் பின் ஓசியாகக் கிடைப்பது இந்த சுண்டல் தான். எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் உடல் எடை குறைப்பில் இருப்பவர்களுக்கு டயட்டில் இருப்பவர்களுக்கு சுண்டல் ஒரு எனர்ஜி புரொவைடர்.
காலையில் எழுந்ததும் முளை கட்டின பயர் சாப்பிடு என்பவர்களை ஏலியன் போல் பார்த்துவிட்டு நகர்ந்தவன் நான். பாசிப்பயரு ஓசியா செஞ்சு கொடுத்தாக் கூட பின்னங்கால் பிடரியில் படும்படி ஓடுபவன் நான். ஆனால் நாலு மணில இருந்து எட்டு மணிக்குள் எனக்கு ஏற்படும் வடை மசாலா சாட் திண்பதற்கானத் தூண்டலை அமர்த்த அவை தான் உதவின.
லாஜிக் ஒன்றுதான். உங்களுக்குப் பிடிக்காதவற்றை நீங்கள் சாப்பிடும்பொழுது அளவிற்கு அதிகமாகச் சாப்பிடமுடியாது. அது தான் கதை.
எல்லாவற்றிற்கும் மேல் உடற்பயிற்சி செய்யுங்கள். வயதானவர்களுக்கு தரைப் பயிற்சி மிக லாவகமாய் இருக்கிறது. அதாவது படுத்துக்கொண்டு செய்யும் பல பயிற்சிகள்.
இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
தேடுங்கள். ஒரு விசயத்தை நோக்கி நீங்கள் நகர, அது சம்பந்தப்பட்ட விசயங்களாய் உங்களை நோக்கி வரும். அதான் உண்மை.
எப்பொழுதும் தானாய் எதுவும் நிகழ்வதில்லை. நீங்கள் எதையாவது நிகழ்த்தத்தான் வேண்டும்.
இந்த உலகம் வேடிக்கைப் பார்ப்பவர்களை ஒதுக்கி வைத்துவிடும். எதையாவது செய்தால் தான் எல்லா விசயங்களிலும் உயிர்ப்பாக இருக்க முடியும்.
எடை குறைப்பிற்கு முடிவு எடுத்த உடன் செய்ய வேண்டியது அதற்கான நகர்வாக அதற்கான முயற்சியாக நாம் என்ன செய்கிறோம் என்பது தான்.
அடுத்தப் பதிவு சைரன் பக்க & பக்கா இறுதி பதிவாக இருக்கும்.
அதில் நான் எழுதப் போவது நான் பேலியோ டயட்டில் இருந்து தான் எடையைக் குறைத்தேன். வெளியே சொல்லாமல் மறைக்கிறேன் என்ற ஒரு நண்பருடன் நடந்த வாக்குவாதம் பற்றியும்,
டயட்டில் இருந்தால் எடை நன்றாக குறைகிறது. விட்டுட்டா புஷ்ஷுனு மறுபடியும் ஏறிடுது என்று சொல்லும் விஞ்ஞான நண்பர்களுக்குமாய்....
சைரன் ஒலிக்கும்......
கருத்துகள்
கருத்துரையிடுக