இடுகைகள்

இரவல்

கவிதைகளைப் படித்திருக்கிறேன்... தழுவியதில்லை... உன் விரல்களைக் கொஞ்சம் இரவல் கொடு....

தூரம்

படம்
என் தூரம் உன்னருகே வந்தபோது உன் தூரம் என்னைத் துரத்தியது.... தூரங்களைத் துறந்து வா..... நம்மை நாம் துறப்போம்.....

புல்லாங்குழல்

படம்
வேரறுத்து உயிர் பறித்து துளைத் துளையாய் சல்லடையிட்டு புல்லாங்குழல் இசைக்கிறது- உண்மையில் ஒரு மூங்கில் அழுகிறது
கழிந்து விட்ட நாட்களில் வாழ்ந்ததற்கான தடயம்... கொண்டாடிய நாட்களில் கொண்டாடப்பட்ட தருணம்..... தடுத்தாலும் தடுதல் ஆனாலும் ஓடிவிட்ட மாயை- வாழ்க்கை..... முட்டிக்கொள்வதற்கும் முடிந்து கொள்வதற்கும் எவனவனோ முன்னேறுகிறான்.... விரலோடு விரலாகப் பற்றிக் கொள்ள வெறுமை மட்டுமல்ல என் தனிமையும் உண்டு.... என்னிடம் நானே இருக்கின்றேன்... ஒவ்வொரு விடியலையும் தேடிக்கொள்ள.......                                                                        

அருகருகே

அருகருகே உன் வீடும் என் வீடும்..... எட்டும் தூரத்தையே எட்டி எட்டிப் பார்த்தேன் உன்னை நான் எட்டுவதற்காக.... நீ சோறு ஊட்டுவதற்காக உன் வீட்டு மாடியில் காகங்கள் பல.... உண்மையில் உனக்காக கரைவது நான் மட்டும் தான்..... நிலவொளியில் நீ நடப்பதைப் பார்ப்பது சுகமே... வானில் நிலா காய்கிறதா... எனக்காக காய்க்கிறதா.....

திரி

திரியில் ஏற்றப்பட்ட தீபமாய் தள்ளாடுகிறேன்..... காற்றாய் அணைத்து விடு நான் எரிந்தது போதும்.....

நீ - நான் 10

நீ நான் பயணித்த காரைக்குடிச் சாலை கற்களால் ஆனதல்ல..... கனவுகளால்......