இடுகைகள்

டிவி ய ஆப் பண்ணுங்க பாஸ்

சில நாட்களுக்கு முன் என்டிடிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. மருந்து விற்பனை பிரதிநிதியும் , மருத்துவர்களும் பேசுவதாக அந்தக் காட்சியில் இருந்தது. சில தினங்களுக்கு முன் விஜய் டிவியில் மருத்துவர்களைச் சாடி கோபிநாத் பேசியதும் ஒரு லிங்க் ஆக முகநூலில் பரவி வருகிறது. இதுவரை இப்படி எந்த பேரங்களும் நடக்காதபடியும் இப்பொழுதுதான் அது நடப்பது போலவும் சமூகத்தில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அடுத்ததாக மருத்துவத்துறையைத் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் எல்லாம் நேர்மையாகவும் உண்மையாகவும் நடப்பது போலவும், இங்கு மட்டும் இப்படி வியாபாரம் நடப்பது போலவும் மக்கள் புருவங்களைத் தூக்குவது வீணான உணர்ச்சி வெளிப்பாடு. மீடியாக்கள் எப்பொழுதெல்லாம் தங்கள் கையில் சுவாரசியமான விசயங்கள் இல்லையோ அப்பொழுது எல்லாம் இப்படி மருத்துவத்துறை மருத்துவர்கள் மருந்துகள் மருந்து கம்பெனிகள் என கை வைக்கும். காரணம் என்ன வேறு துறையிலிருக்கும் மக்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கடைசி 5 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வங்கி வர்த்தகம், கட்டுமான வர்த்தகம், வாகன வர்த்தகம், எரிபொருள் வர்த்...

இப்படியிருக்கத் தேவையில்லை....

இந்த இரவு இப்படியிருக்கத் தேவையில்லை.... ஒரு நெடிய பகலை அதிலிருந்த ஓர் அமில மழையை நினைவுறுத்திய படி கருமையாயிருக்கும் இந்த இரவு இப்படியிருக்கத் தேவையில்லை.... தானாயிழப்பதற்குள் கருச்சிதைவிற்குள்ளான வானவில்லின் பிரேத நெடி வீசும் இருட்டிரவு இப்படியிருக்கத் தேவையில்லை..... பாரமற்ற ஒற்றை வார்த்தையின் பாரம் தாளாதுத் துவண்ட முன்னொருகாலத்து அந்தகாரக் கண்ணீரைப் பருகத் துடிக்கும் இன்றைய இரவு இப்படியிருக்கத் தேவையில்லை..... விடிவதற்கு முன் ஏதோ ஒன்றைத் துறக்கத் துணியாதிருக்கும் இவ்விழிகளினிரவு இப்படியிருக்கத் தேவையில்லை.....  

கிருஷ்ணா.......

அப்பொழுது நான் தூத்துக்குடியில் இருந்தேன். மதுரையிலிருக்கும் பெருமாள் மேஸ்திரி வீதிகள் போல் அங்கும் உண்டு. குறுகலாய், நெரிசலாய், மனிதன் ஆடு மாடு நாய்க்குட்டிகள் குழந்தைகள் சகிதமாய் அங்கும் அப்படியே. என்னுடன் பணிபுரியும் பணியாளர் இரு சக்கர வாகனம் ஓட்ட நான் பின்னே அமர இருவரும் அத்தெருவிற்குள் சென்றோம். குறுகலான சாலை எப்படியென்றால் ஒரே நேரத்தில் இரு கார்கள் மிக நெருக்கமாகத்தான் கடந்து செல்ல முடியும். ட்ரை சைக்கிள்கள், ஷேர் ஆட்டோக்கள் என அவ்வளவும் அத்தெருவை நிறைத்திருந்தன. ஒரு பசு மாடு...நல்லப் பெரிய பசுமாடு. பழுப்பு நிறம் மற்றும் வெள்ளை நிறம் கலந்த பசு மாடு. எங்களுக்கு முன்னே நடக்கிறது. வயிறு நன்றாக வீங்கியிருக்கிறது. அதன் பால் தரும் மடி பெரியதாய் வீங்கியிருக்கிறது. மிகவும் கீழிறங்கி வீங்கி அதன் பின்னங்கால்களின் இடுக்குகளில் உரசி உரசி அந்த மாடு நடக்கிறது. போக்குவரத்து விதிகளின் படி இடது பக்கம் தான் செல்ல வேண்டும் என்பதுலாம் அந்த மாட்டுக்குத் தெரியாது . வலப்பக்கமாய் சென்றுகொண்டிருந்தது. மாட்டின் இடதுபக்கம் எல்லா இருசக்கர வாகனங்களும் சென்றன். இப்பொழுது எதிரே ஒரு கார் வந்தது...

நிறுவு 4

பொதுவாக ரிலையன்ஸ் அல்லது பிக் பஸார் போன்ற டிபார்ட்மெண்ட் கடைகளுக்குச் செல்லுகையில் ஒரு ரூபாய் குறைவாகக் கிடைக்கிறதா என்று பார்க்கிறோம். ஆனால் கடை வீதிகளில் நாமே மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து கடைகளுக்குச் சென்றோமேயானால் அதை விடக் குறைவாக வியாபாரிகள் தருவார்கள். நேரமின்மை, அலைச்சல் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நானும் கூட சில பொருட்களை இப்படிப்பட்ட டிபார்ட்மெண்ட் கடைகளில் வாங்குவதுண்டு. ஆனால காய்கறிகளை மட்டும் மார்க்கெட்டில் அல்லது உழவர் சந்தையில் வாங்குவதுண்டு. விவசாயிகள்நேரடியாக பயன்பெறட்டும் என நினைப்பதுண்டு. காலையில் உழவர் சந்தைக்குச் சென்று காய்கறி வாங்கச் சென்றேன். சில விசயங்கள் புரிவதில்லை. பீட்ரூட் 20 ரூபாய் என்றார். எனக்குக் கால் கிலோ போதுமென்றேன். கொடுத்தார். பிறகு பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு வாங்கிவிட்டு எவ்வளவு என்றேன். அந்தந்த காய் கூடைகளைப் பார்த்து மனப்பாடமாய் கணக்குச் சொன்னார். 68 என்றார். அவர் பீட்ரூட்டைப் பார்த்துச் சொல்லும்பொழுது மட்டும் 20ஐ கூட்டினார். பீட்ரூட் எவ்வளவு என்றென். 20 என்றார். கால் கிலோவா என்றேன். ஓ...10 தான் என்று மீதி பத்து ரூபா கொடுத்தார். வெண...
வலியென்றும் வரையறை வைத்துக்கொளவதில்லை! ஆனந்தச் சிரிப்பிற்குள் இமை இடறிவிடும் சிறு துகளை விழிகள் விலக்கவியலாமல் கலங்கி இயங்குதல் வரையறையில்லா வலி!

முத்தம்

முத்தம் தரமுடியாத் தருணங்களில் எல்லாம் முத்தம் என்றாவது சொல்லிவிட்டுப் போ...!

வாழ்த்து

இன்று காலை அதே உணர்வு. பள்ளியில் படிக்கும்பொழுது பிறந்தநாளன்று சீருடை அணியத்தேவையில்லை. புத்தாடை அணிந்து கொள்ளலாம் என்று காலையில் சீக்கிரம் எழுந்து ஒரு விதமான உற்சாகத்துடன் இருப்போமே அப்படி. ஒரு குழந்தைக்குப் புத்தாடையோ, நண்பர்களோ, அந்த பிறந்தநாளோ அப்படிப்பட்ட உணர்வு , காலம் செல்லச்செல்ல பொறுப்புகள் கூட கூட பிற்காலத்தில் வருவதில்லை. ஆனால் அதே உணர்வு மறுபடியும் நண்பர்களின் வாழ்த்துகளால். வாழ்த்துதல் எவ்வளவு உன்னதமான காரியம் என்பது தெரிகிறது. பறத்தலில் ஒரு முக்கிய அறிவியல் சூத்திரம், இறக்கைகளுக்கு அடியில் கொடுக்கப்படும் சிறிய அளவிலான உந்தம். கொஞ்சம் பறக்கின்றேன். மறுபடியும் குழந்தையாதல் அனைவருக்கும் விருப்பமுள்ள ஒன்றே. நான் ஆகியிருக்கின்றேன். தினசரி கடக்கும் வெகுச் சாதாரண நாளாய் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும்,  என்னுலகில் உலவிக் கொண்டிருக்கும் இந்நாளுக்குள் உட்புகுந்து எனக்காய் சில புன்னகைகளையும் சில வார்த்தைகளையும் விடுவித்துச் செல்லுதல் கலைந்து செல்லும் மேகங்கள் போல் இல்லை அவை. ஒவ்வொருவரின் மனத்துக்குள் மகிழ்ச்சியை மலராய் தூவிடலாம். நிகழ்ந்திருப்பதாய் நான் நம்புவத...