இடுகைகள்

ஆச்சி.

படம்
அந்த மருத்துவமனையில் காத்திருந்த பொழுது மணி இரவு பத்து இருக்கும். ஒரு சக்கர நாற்காலியில் ஒரு முதியவரை அமர வைத்து மருத்துவரைப் பார்த்துவிட்டு வெளியில் அவரை இருக்க வைத்துவிட்டு கூட வந்த உறவினர்கள் மருந்துக்கடைக்குச் சென்று விட்டனர். அப்பொழுது அவர்களைத் தேடி வந்த இன்னொரு நபர்..அந்த தாத்தாவைப் பார்த்து 'இப்ப எப்படி இருக்கீங்க தாத்தா எனக் கேட்டார். பதிலுக்கு அவர்..'யாரு முத்துவா ' னு கேட்டார். இல்ல...ராசு...னு பதில் சொன்னார். எனக்குக் கூட அப்படி அனுபவங்கள் உண்டு . பதில் சொல்லி. என் ஆச்சியிடம். ஆச்சினா அம்மாவோட அம்மா. தாத்தா இறந்தப்பின்னாடி ஆச்சி மாமா வீட்டோட இருந்தாங்க. எங்க வீட்ல இருந்து நாலு தெரு தாண்டி மாமா வீடு. ஆச்சி நல்லா நடக்கிறப்ப எங்க வீட்டுக்கு வரும். எங்கள பாக்கும். அம்மாவும் ஆசிரியைன்றனால சனிக்கிழமை சாயந்திரம் வந்திட்டு திங்கட்கிழமை காலைல போயிருவாங்க... அந்த மூணு நாள் தங்குறது பேரங்களாகிய எங்கள பாக்க மட்டுமல்ல. மக கொஞ்சம் வாய்க்கு நல்லா சமைச்சு கொடுப்பானு. அந்த காலத்துல இருந்து அப்பாக்கும் தாத்தா ஆச்சிக்கும் வாய்க்கால் தகராறு இருந்தாலும் ஆச்சி தங்குற...

இது தம்மு...இது ரம்மு....

அது கல்லூரி பருவம். இளங்கலை மூன்றாம் ஆண்டு. என்.எஸ்.எஸ் மூலமா ஒரு கேம்ப். நடந்த இடம் கேரளாவில் காலடி சம்ஸ்க்ருத பல்கலைக்கழகம். தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, ஆந்திரா னு ஏராளமான பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்ட நிகழ்வு. தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பாரதிதாசன் பெரியார் மனோன்மணீயம், அப்புறம் காமராசர் பலகலைக்கழகங்கள்னு மாணவ மாணவிகள் கலந்துகொண்ட ஒரு கலர் கலர் நிகழ்வு. நம்ம காமராசர் பலகலைக்கழகத்திலிருந்து கம்பம் மகேஷ் பாளையம் வீணா சிவகாசி சந்திரு, மதுரைல இருந்து கேசவன், கார்த்திக், அப்புறம் தான் முக்கிய்மான என்ட்ட் ரி  நானு. கேம்ப் என்ன னு சொன்னாத்தான் நான் எழுதப்போற புறணி உங்களுக்குப் புரியும். ஜனவரி 26 குடியரசு  விழாவில் குடியரசுத் தலைவர் முன்னாடி டில்லியில் பரே டில் கலந்துக்க நடக்குற செலக்ஷன் கேம்ப்.;  இது தெரியாம இரண்டு மூணு பக்கிக சமூக சேவைனு ஜாலியா வந்திருக்குதுக... மாலை 4 மணிக்கு பல்கலைக்கழகம் ரீச் ஆனதும் பல பட்டாம்பூச்சிகள் பாக்குற உணர்வு. வெங்கட் பிரபு  படத்துல வர்ற பிரேம்ஜி கேரக்டர் மாதிரி நம்ம நண்பன் ஒருத்தன வச்சுக்கிட்டா நல்லாருக்கும்ல....கிடைச்சான் சி...

கானாகுமாரு...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி டி.வி.எஸ் சேம்ப் கட்டுரை எழுதிருந்தேன். அதுல வந்த சில கதாபாத்திரங்களோட இன்னோரு அனுபவம். நான் கணேஷ் கணேஷ்குமார் அப்புறம் ராபர்ட் அண்ணன் பிரேம்னு படிப்பாளி. இவைங்களோட தான் அந்த அனுபவம். குறிப்பு மேலே கண்ட பயபுள்ளைக எல்லாம் இப்ப பத்தாம் வகுப்பு படிக்குதுக...ராபர்ட் அண்ணே மட்டும் பதினொண்ணு. நான் கணேஷ் கணேஷ்குமார் எல்லாம் ஒரே இடத்தில் ட்யூஷன். அது எங்க னு அப்புறம் சொல்றேன். அதுக்கு முன்னாடி கணேஷயும் கணேஷ்குமாரையும் வேறுபடுத்திக்காட்ட கணேஷ்குமார கானாகுமாருனு கூப்பிடுவோம்...குழப்பாதுல.. ட்யூஷன் நல்லாத்தான் போனது. ஒரு நாள் தான்//// ஒரே நாள் தான் ஒன்பதாம் வகுப்பு படிச்ச ஹெலன் குட்டைப் பாவாடை போட்டு வந்தது . அன்னைக்கு பிறந்த நாளாம்...சாக்லேட் கொடுத்தது.  நானும் கணேஷும் தின்னுட்டு பேப்பரை க் கீழ போட்டுட்டோம். இந்த பாழாப்போன கானாகுமார் மட்டும் அந்தப் பேப்பரைத் தனியா சட்டைப் பையில வச்சுக்கிட்டான். ஏ என்னடா....னு கேட்டேன்... போ...மாப்ள....னு வெக்கப்படுறான் கானாகுமார்.  உண்மையிலையே வெளங்கல..அவன் வெக்கப்பட்டது... டே என்னடா...னு மறுபடியும் கேட...

யானை

படம்
மணி மதியம் ஒன்று. முதுமலை வனச்சரக அலுவலகம். நாங்க நாலு பேர். காட்டுக்குள்ள வனத்துறைச் சார்பாக அழைத்துச் செல்லும் வண்டி பற்றி விசாரித்தோம். மதிய உணவு வேளை ஆனா இருபது பேர் வந்துட்டா வனத்துறையின் வண்டி வரும். வெளியே நிறைய தனியார் ஜீப்கள் இருக்கு. அவர்கள் எந்நேரமானாலும் அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் நம்ப வேண்டாம். பாதுகாப்பில்லை என அரசு சார்பாக அறிவிப்பு இருக்கு. எதுக்கு வம்புனு இருபது பேர் கூடும் வரை காத்திருந்தோம். நகர் புறத்துல மெயின் ரோட்டுல மினி பஸ்ஸுக்கும் ஷேர் ஆட்டோக்கும் ஆள் சேர்ற வரைக் கத்துவாங்கள...அது மாதிரி கத்துனாலும் ஆள் அவங்களாத்தான் வரனும். கொஞ்ச நேரம் கழிச்சு... சில கன்னடர்கள் வந்தார்கள். பதினாறைத் தொடுவதற்கு அரை மணி நேரம் பிடித்தது. உயரமான குன்றில்தான் அந்த வன அலுவலகம் இருந்தது. அங்கிருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டும்வரை காடு.மலை. பசுமை. பெரிய மரங்கள். அடர்ந்த கிளைகள். அமைதி. ஒரு ஸ்வராஜ்மஸ்தா வண்டி ஏற்பாடு ஆனது. அமர்ந்து கொண்டோம். ஜன்னல் முழுக்க வலை. கேமராவை தயாராக வைத்துக்கொண்டேன். அறிவிப்பில் பார்த்தேன். யானைகள் புலிகள் மான்கள் மயில் குரங்குகள் காட்...

கடிதமாய்...

மழையை நனைத்த படி இறகு விரிக்கும் காதல் பறவைகளின் ஞாபகத்தில் நீயும் நானும் நனைந்து கொண்ட ஓரீரப் பொழுது. சந்தோசக் கீற்றுகளை எழுத்தாக்கும் வித்தைகளேதும் அற்றுப்போய் வெறுமனே வார்த்தைகளை மட்டும் தருவதில் நம்மை நனைத்த மழை மீள நனைப்பதில்லை... நெற்றிமுடி கலைந்த அது சார் தொட்டுத்தீர்த்த விரல் ரேகைகள் வளைந்துகொண்டதை எழுத்துகள் எழுதிக் காட்டுவதில்லை.. தூரங்கள் குறைய விலகியதும் பிடித்துக்கொண்ட விரல் பிரிய மறுத்ததும் இன்னொரு கவிதையாகப் பிறக்க எத்தனித்த விபத்திலொன்று கண்மூடி பார்க்கையில் முழுக்க உன்னை உணர்ந்தது... நுகரும்படியாய் காதுமடல்களுக்குள் காதல் சொல்லிய மாயப்பொழுதின் முடிச்சுகளில் இறுகிக்கொண்டது உனை அழைக்கும் ஓர் அன்பின் கடவுச்சொல்.. நகர்ந்த பிறகு இருக்க ஒரு தடயம் கேட்டு வாங்கும் மாயைகளின் மாயையென உனை விழிக்கும் ஏக்கக்காரனின் தாகம்.. இராக்கள் எல்லாம் உன் முகங்கொண்டு குறுகும் தூக்கங்களில் ஆகச்சிறந்த நனவுகளின் கனவு நீ.... அன்பைச்சொல்லித் தீர்ந்துபோன ஆதிப்பேனாக்கள் ஏதேனுமொன்று உயிர்பெறுமாயின் உரக்கக்கதறும் என் மௌனத்தின் அடர...

கபாலி

படம்
எல்லாரும் பார்த்திருப்பீங்க. இல்லாட்டி விமர்சனம்னு படிச்சிருப்பீங்க. என் கைக்கு கபாலி ஃபீவர் இன்னும் குறையவில்லை. இது என்னோட பார்வை. பெரிய மார்க்கெட்டிங் வெற்றிகள் எல்லாமே சாதாரண ஒரு ஐடியாலத்தான் அமையும். பெரிய அளவுல மூளைய சிந்திக்க விடாம சர்வச் சாதாரணமாக அமையும் சில கருவிகள் தான் வெற்றி. ஒரு கதை கிடைச்சிருக்கு. அந்தக் கதைக்குச் சரியான பாத்திரம் அமைத்துவிட்டால் வெற்றி.  ரஞ்சித்துக்கு ரஜினி. ரஜினிக்கு என்ன பண்ணலாம் ரஜினிய வச்சு என்ன பண்ணலாம் இது தான் அடிப்படை. ரஞ்சித் எடுத்தது இரண்டாம் வகை. சதுரங்க வேட்டை வசனம் பில்லா இரண்டாவது பாகத்துல வர்ற கூர்மையான வசனம் இது போன்ற வசனங்களை விட இப்பொழுது பேசப்படும் வசனத்தின் வீச்சு அதிகம் என்றால் அதற்கு ரஜினி மட்டும் தான் காரணம்.  ரஞ்சித்தின் சாதி வெளியே தெரியாமல் இருந்திருந்தாலும் ரஞ்சித் பேசப்பட்டிருப்பார். வசனங்கள் வந்து அடைந்திருக்கும்.  ரஞ்சித்தைப் பொறுத்தவரை ரஜினியை பயன்படுத்திவிட்டார். சாதிக் கூண்டை நாம் ரஞ்சித்திற்கு வைப்பது அழகல்ல. படைப்புகள் சாதிகளை மீறி ஒளிருபவை. கபாலி அப்படித்தான். ஒரு புதிய இயக்குனராக இ...

வடை போச்சே....

காலையில் எழுந்ததும் நடை பயிற்சி. இந்த இருபத்தொறு நாள் சவாலை எதிர்கொண்டு பத்து நாள்ல் உடைந்துவிட்டது. மறுபடியும் ஆரம்பித்திருக்கிறேன். எப்படியோ வெளியூர் போய் தங்கியபொழுது கூட நடந்தாகிவிட்டது. இன்று அதாவது வெளியூர் சென்று விட்டு வந்த மறுநாள் எப்பொழுதும்போல காலையில் ஒரு வித அயர்ச்சி. ஆனால் எழுந்து நடக்க வேண்டும் என்பது ஊறியிருந்தது. ஆதலால் தமிழ்படங்களில் ஹீரோ அடிபட்டு விழுந்தப்பின் சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்த்து கன்னம் குலுங்க எழுவது போல் எந்திரிச்சாச்சு. எவ்வளவு லேட்டானாலும் நடந்தே ஆகனும். ஆறேமுக்காலுக்கு ஒரு வழியா நடையாளர் கழகத்திற்கு வந்து வண்டிய நிறுத்துனா உள்ள ஒரு மீட்டிங்க். மதுரை வடக்குத் தொகுதி வெற்றி வேட்பாளர் னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் க்கு பாராட்டு விழா. நடிகர் சங்கத்தையே ஓவர்டேக் பண்ணிருவாய்ங்க போலேயே...னு மண்டைய சொரிஞ்சுக்கிட்டே...ஆதவன் படத்து வடிவேலு போல இங்க என்னப்பா சத்தம்னு உள்ள போனேன். நடையாளர் கழகம் கொஞ்சம் பெருந்தன்மையானது. அது ஒரு கண்மாய் ஏரிக்கரை. வண்டியூர் கண்மாய். அங்க நடப்பவர்களால் ஒரு கழகம் ஆரம்பிக்கப்பட்டு சட்டப்படியாகத் ...