இடுகைகள்

நானுனக்கு...

பலூன் களைத் தவறவிட்டு பின் ஓடிவரும் குழந்தையின் கண்களைப் போல சுண்டப்பட்ட நாணயத்தை விரல்களுக்குள் ஒளித்துக்கொண்டு பூவா தலையா எனப் பார்க்கும் விழிகளைப் போல திரை விழுந்த பார்வையோடு மங்கலாகத் தெரியும் தொலைதூரப் பேருந்தின் முகப்பு எழுத்தைத் தெள்ளத் தெளிவாய் தேடிப் பார்க்கும் மூதாட்டியின் பார்வைத் தேடல் போல... எல்லா முகங்களிலும் ப்ரியமானவர்களின் முகம் தெரியும்படியாய் காத்திருக்கும் விழிகளைப் போல அப்பொழுது தான் பிரசவித்தத் தன் குழந்தை கண் திறந்துப் பார்ப்பதைப் பார்க்கும் தந்தையின் கண்களைப் போல... முதல் முறையாக புகைவண்டியைப் பிரமிக்கும் சிறுமியொருத்தின் ஆச்சர்யப் பார்வைகளைப் போல வெறுமையின் நாளை முடிக்கும் தருவாயில் கை முழுக்க யாசகம் பெறும் ஒரு யாசகக்காரனின் ஈரக் கண்களைப் போல... பரபரக்கும் சாலையொன்றைக் கை பிடித்து கடக்கும் அறிமுகமற்ற தாத்தா ஒருவரின் நன்றி நவிழும் பார்...

குழந்தைகளும் பாலியல் கொடுமைகளும்

வாட்ஸப்பில் ஒரு வீடியோ வருகிறது. அறுபது வயது மதிக்கத்தக்க முதியவன் ஒருவன் நான்கு அல்லது மூன்று வயது பெண் குழந்தையுடன் ஒரு புதருக்குள் இருப்பதும், அக்குழந்தையை நிர்வாணப்படுத்தி அவனும் உடைகளை கழற்றி உடலுறவிற்குத் தயாராகும் தருணம் அங்கு இருப்பவர்கள் வீடியோ சகிதம் சுற்றி வளைத்து வருகிறார்கள். அக்கிழவன் அக்குழந்தையை போ என்றதும் அது உடையை மாட்டிக்கொண்டு ஓடுகிறது. அவனை அடித்து இழுத்து வருகிறார்கள். சமூக வலைத் தளங்கள் மூலமாக இப்பொழுது இது மாதிரியான குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. உணர்வுச் சலனம் என்றால் என்ன என்றால் இது போன்ற விஷயங்களைப் பார்க்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் ஏற்படும் உணர்வுகளின் குழப்பம் தான். எரிச்சல் அடைவதா, கோபப்படுவதா இல்லை இது போன்ற சமூகத்தில் தான் நாமும் நம் குழந்தைகளுடன் வாழப்போகிறோம் என்று பயப்படுவதா என்று தெரியாமல் நிற்கிறோம் அல்லவா அது தான். ஒரு குழந்தை என்றும் பாராமல் அதன் மீது தன் வக்கிர எண்ணங்களைத் திணிக்கும் இந்த வன்மக்காரர்களை என்ன செய்வது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் இது போன்ற அத்துமீறல்கள்...

காப்பி

நல்ல அடர் பழுப்பு நிறத்தில் ஆவி பறக்கும்படியானச் சூட்டில திடமான ஒரு காப்பி அருந்த வேண்டுமென்பது ஆசை இல்லை. வெள்ளாவியின் நடுவே பருக எத்தனிக்கையில் கோப்பையின் விளிம்போரத்தில் தெரியும் மென்மையான பழுப்புச் சாயல்கொண்ட விழிகளைப் பார்த்துக்கொண்டே என்றால் சரி. ஒரு காப்பி பருகலாமா மறுபடியும்....

எப்படி இருக்கிறாய்

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு கேட்பதில் எந்தச் சிக்கலுமில்லை. எப்படி இருக்கிறாய் என்ற கேள்விக்குப் பின்னிருக்கும் நெடும் பிரிவும் கொஞ்சம் இயலாமையும் தலைதூக்கும் வரை.

இன்னொரு பிள்ளையார்

உங்கள் வேண்டுதலின் படி அந்தக் கோயிலின் விநாயகர் அருள்பாலிப்பார். ப்ரியங்களைச் சுமந்தபடி ஆலய வாசலில் காத்திருப்பவனுக்கு வேண்டுதல் ஏதுமில்லை. இருந்தாலும் காய்ந்த சருகுகளை மிதிக்காத படி அவன் அருள்பாலிப்பான் அரச மரத்தின் வலிகளை.

தேடல்

உன் பெயரில் யார் யாரோ அழைக்கப்படுகிறார்கள். உன் பெயருக்கு யார் யாரோ திரும்புகிறார்கள். எந்தப் பெயரிலும் இல்லாத இந்தத் தேடலில் நீயும் நானும்.

தளும்பல்

கனத்துப் போய் கிடக்கிறது ஏதுமற்ற என்றொரு நிலை. நீ மாத்திரம் நிரம்பும்படியான ஒரு மழைப்பாத்திரத்தில் தளும்புகிறது நிறைந்துக் கிடக்கும் உன்னாலான வெறுமை