இடுகைகள்

சுஜி...

அது கல்லூரி பருவம்.இளங்கலை மூன்றாம் ஆண்டு.என்.எஸ்.எஸ் மூலமா ஒரு கேம்ப். நடந்த இடம் கேரளாவில் காலடி சம்ஸ்க்ருத பல்கலைக்கழகம். தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, ஆந்திரா னு ஏராளமான பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்ட நிகழ்வு. தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பாரதிதாசன் பெரியார் மனோன்மணீயம், அப்புறம் காமராசர் பலகலைக்கழகங்கள்னு சங்கமம். நம்ம காமராசர் பலகலைக்கழகத்திலிருந்து கம்பம் மகேஷ்,உத்தம பாளையம் வீணா, சிவகாசி சந்திரு, மதுரைல இருந்து கேசவன், கார்த்திக், அப்புறம் நான்.  ஜனவரி 26 குடியரசு  விழாவில் குடியரசுத் தலைவர் முன்னாடி டில்லியில் பரே டில் கலந்துக்க நடக்குற செலக்ஷன் கேம்ப் அது. மாலை 4 மணிக்கு பல்கலைக்கழகம் ரீச் ஆனதும் பல பட்டாம்பூச்சிகள் பாக்குற உணர்வு.  வெங்கட் பிரபு  படத்துல வர்ற பிரேம்ஜி கேரக்டர் மாதிரி நம்ம நண்பன் ஒருத்தன வச்சுக்கிட்டா நல்லாருக்கும்ல.கிடைச்சான் சிவகாசி சந்திரு. ஒண்ணா ட்ராவல் பண்ணதுனால எல்லாரும் க்ளோஸ் ஆயிட்டோம். குறிப்பா என் கண்ணுல கம்பம் மகேசையும் பாளையம் வீணாவையும் கோர்த்துதான் பார்க்கத்தோன்றியது. பக்கத்து பக்கத்து ஊர்ன்றனால பேசிக்க்ட்டே இருந்...

க்ர்ர்ச்ச்சுக்

அப்பொழுது மதுரை முத்து ஆரம்பப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன். ஆமாம் இது ஃப்ளாஷ்பேக் தான். பழைய பதிவை கொஞ்சம் டிங்கரிங்க் செய்து வெளியிடுவது தான் இது. அன்று சனிக்கிழமை. விடுமுறை. அந்த காலத்தில் சனிக்கிழமைகளுக்கென்று சில இலக்கணம் உண்டு. ஒன்று கரண்ட்டை கட் பண்ணிருவானுக. கேட்டா மின் பராமரிப்புனு சொல்வாய்ங்க. இரண்டாவது ஸ்கூலுக்கு அரை நாள் வைப்பானுக. அதுல வெங்கட்டம்மா டீச்சர் இருந்து எழுதி காமிச்சுட்டு போனு சொல்லும். நாலு மணிக்கு முன்னாடி போனா அந்தம்மாவோட வீட்டுக்காரர் வைவார் போல. மூன்றாவது லீவா இருந்தா தலைக்கு எண்ணெய் வச்சு குளிக்கனும். சம்பவம் நடந்த அன்றைய சனிக்கிழமை தலைக்கு ஆயில்பாத் எடுத்துவிட்டு....ஒரு சந்தனக்கலர் பனியன் மற்றும் அதற்கேற்றார் போல் ஒரு கால்சட்டை...(ட்ரௌஸர்). அந்த சந்தனக்கலர் சட்டை ஒரு ஸ்பெஸல். தாய்வீடு படத்தில் ரஜினிகாந்த் அந்தக் கலரில் வருவார். அதே நிறத்தில் பனியன் போட்டு...எங்கள் வீட்டு நிலைக்கண்ணாடியின் முன் நின்று பார்க்கிறேன் முகத்தை இடது வலது என திருப்பிப் பார்க்கிறேன்... அப்படியே கண்களை வானத்தை நோக்கிப் பாத்துட்டு மறுபடியும் கண்ணாடியில் முக...

பைத்தியக்காலம்- நர்சிம் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து

எழுத்தாளர் நர்சிம் எழுதிய பைத்தியக்காலம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..... " i dont make unconventional stories    i dont make non linear stories   but i like linear storytelling lot " என்ற ஒரு வாசகம் இருக்கிறது. இதைச் சொன்னவர் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க். இதைத் தமிழ்படுத்தி ஸ்பீல்பர்க்கின் வாசகத்திற்குள் அர்த்தப்பிழை கிராஃபிக்ஸ் செய்து அதன் நேர்த்தியைக் கெடுக்க விரும்பவில்லை. அப்படி ஒரு ஸ்டோரி டெல்லிங் வித்தைகளை இப்பொழுது இருக்கும் பல எழுத்தாளர்கள் கையாண்டு வருகிறார்கள். இப்பொழுது இருக்கும் என்பதில் நான் குறிப்பிடுவது அன் டோல்ட் என்ற பதம் பொருந்தும் சரியாகப் பேசப்படாத அல்லது பேசப்படவேண்டிய வயதான அல்லது இளந்தாரி எழுத்தாளர்களையும் சேர்த்துத் தான். பைத்தியக்காலம் தொகுப்பின் ஆசிரியர் நர்சிம் கூட அப்படிப்பட்ட வித்தைகளைச் செய்யும் எழுத்தாளன் என்பது என் அபிப்ராயம். பைத்தியக்காலம் படிப்பது என்பது அனுபவங்களைத் தருவது. அல்லது ஒருவனின் அனுபவத்தோடு அவன் குவளை அனுபவத்தை அவன் மடியில் கிடத்தி நம் மூளைக்குள் புகட்டுவது. தூதுவளை துளசி இஞ்சி எல்லாம் அரைத்து மேல...

குட்டுப்பட்டி

குருதிப்புனல் படத்தில் ஒரு காட்சி வரும். கதவு இடுக்கு வழியே கமல் கண்களைக் காண்பித்து ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு என வசனம் வரும். இரசாயணத் துறை மாணவனாக யூடெட்டிக் பாயிண்ட் என நான் அடிக்கடிச் சொல்வதுண்டு. திங்கட்கிழமை நன்றாக இருண்டிருந்த காட்டுப்பகுதி. காட்டுப்பகுதி என்று குறிப்பிடுவதில் அந்த நிலச் சரகம் அடங்கிவிடுவதில்லை. மலைப் பாங்கான வடிவமைப்புக்கொண்டப் பகுதி. நடு ரோட்டில் நின்று பார்த்தால் இருமருங்கிலும் மலைச் சரிவாய்க் காணலாம். அதில் எங்கும் பசுமையாக விவசாயம் நடக்கும். கீழ் பரப்புவரை செடி கொடி மரம் எல்லாமே தாவரங்கள் கற்கள் மணல் இப்படி. நத்தம் என்ற ஒரு கிராமம் தாண்டிய கிராமத்துப் பாதை. ரோட்டை சுத்தமாக வழுவழுப்பாய் போட்டு வைத்திருக்கிறார்கள். நான் வேலை முடித்து வரும்பொழுது இரவு எட்டு. நகர்ப்புற இருளுக்கும் கிராமத்து இருளுக்கும் வித்தியாசம் குளிரும் சீக்கிரம் ஊர் அடங்கிவிடும் தன்மையும். அதனாலேயே கிராமத்து இருளில் அடர் என்ற தன்மை இரு சிட்டிகைக் கூடுதலாக இருக்கிறது. அப்படி இன்டென்ஸ் டார்க் இரவு. யோசித்துப்பாருங்கள். அழகிய கிராமத்துப்பாதை. குளிர் மண்வாசன...

ஹீலர்களின் அரெஸ்ட்

பொதுவாக mocking டைப் பதிவுகள் எனக்குப் பிடிக்கும். போதுமான அளவு க்ரியேட்டிவிட்டி பயன்படுத்த வாய்ப்புகள் அதில் இருக்கும். சில நாட்களுக்கு முன் வந்த வாட்ஸப் பதிவு ஒன்றில் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்ட ஒருவர் கைது. வீட்டிலேயே குழாய் குடிநீர் குடித்தவர் கைது. இப்படி வீட்டிலேயே பிரசவம் பார்த்தவரும் கைது என்று வந்தது. ஒருவருக்கு முகநூலில் ட்விட்டரில் லைக்குகள் அதிகம் விழுந்துவிட்டால் போதும். அவர் தான் தேவதூதராகி விடுகிறார். அவர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று சிக்கலில் மாட்டுகிறார்கள் மக்கள். வீட்டில் பிரசவம் பார்த்து ஒரு உயிர் பலி. இப்படித்தான் ஒரு சிலரின் சின்ன சைகையால் மக்கள் அவரது திறமைக்கு ஏற்ற உயரத்தைவிட அதிக உயரத்தில் தலையில் தூக்கி வைத்து நிறைய எதிர்பார்ப்பார்கள். இது சார் சிக்கல்களில் இப்பொழுது மக்கள் குழம்புவது வீட்டிலேயே பிரசவம் பார்க்கக்கூடாதா..அலோபதி மருத்துவம் மற்ற வழி மருத்துவத்தை அழிக்கிறதா ...ப்ளா..ப்ளா ..ப்ளா எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். புரியும்படி பேசலாம். நம்ம பாட்டிக்கு நார்மல் டெலிவரி. நமக்கு முந்தையத் தலைமுறைக்கு நார்மல் டெலிவரி.  இப்ப ஏன் இல...

மின்னலைப் போல...

எல்லாமே மின்னலைப் போலத்தான் கடக்கின்றன. யாரும் பார்த்தறியாத் தருணங்களில் கைகளை வேகமாக ஒன்றிணைத்து விடுவித்துக்கொள்வதும்.. ஒவ்வொரு கண்களைப் பார்த்தும் விலகி நம் கண்களுக்குள் மட்டும் சம்பாஷணைகளைத் தொடுத்துக்கொள்வதும்.. சின்னஞ்சிறிய அதனினும் நுண்ணளவிலான ஆசை கொண்டு கொண்டாடியத் தருணங்கள் எல்லாமே மின்னலைப் போலத்தான் கடக்கின்றன. பிடித்தப் பாடலின் அந்த வரிகளைக் குறுக்கிடும்பொழுது பகிர்ந்த முத்தங்களைப் போல மின்னல்களும் கடந்துவிடுகின்றன மேகத்தில் விழுந்தக் கீறல்களைத் தெரியப்படுத்தாமல்.....

இந்த அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன்.

இந்த அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன். இந்த காலி  இருக்கையில் நீ வந்திருந்தால் அமர்ந்திருக்கலாம். பாதி படித்து  மீதிப் பக்கங்கள்  திறந்தபடியே கிடக்கும் இந்தப் புத்தகத்தை நீ எடுத்துப் புரட்டியிருக்கலாம். ஒழுங்கற்றுக் கிடக்கும் என் மேசைக் காகிதங்களை வரிசைப்படுத்தி நீ அமரலாம். சுவற்றில்  சாய்ந்தபடி தொங்கும் ஒரு பிள்ளையாரை நீ  நேராக்கி வைக்கலாம். நேற்றைய நாளில் இருந்து இன்றைய நாளுக்குக் கிழித்து வைக்கலாம். சமமற்ற மின்சாரப்  போக்கால் குளிர்சாதனப்பெட்டி மின்னழுத்தச் சத்தம்  கொடுக்கையில் தெரிகிறது இந்த அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன். மறுபடியும் இந்த இருக்கை காலியாகத் தானே  இருக்கிறது. பாதிப் பக்கங்கள் புரட்டப்படாமல் தானே புத்தகம் திறந்து கிடக்கிறது. ஏதோ ஒரு தனிமை தானே இந்தக் காகிதங்களை வீசியிருக்கிறது. உன்னால் நேராக பிள்ளையார்  வெறும் குறியீடு தானே.. காலண்டர்களில் இன்றுகள் உன்னால் துவங்கப்படாமல் இருக்கின்றன.. என்னைப்போலல்லாது இந்தக்...