இடுகைகள்

கொரோனா தடுப்பூசியும் மேய்தலும்

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சில உரையாடல்களும் கேள்விகளும் நம்பிக்கைகளும் உலா வருகின்றன. அவற்றில் பதிவர் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பிரித்து மேய ஆசைப்படுகிறார். மேய்தல் ஒன்று: கொரோனா தடுப்பூசி உண்மையில் வேலை செய்யுமா, இந்தியாவில் தடுப்பூசி ஒரு விற்பனை தந்திரம் தானே. பதில்: கடவுள் இல்லைனு சொல்லல. இருந்தா நல்லாருக்கும்னு தான சொல்றோம் என்ற ரீதியில் தான் பதில் சொல்லமுடியும். கடவுளை நம்பினால் ஆத்திகர். நம்பவில்லை என்றால் நாத்திகர். உங்கள் அறிவு சொல்வதைக் கேளுங்கள் அவ்வளவே. மேய்தல் இரண்டு: தடுப்பூசி ஒரு டோஸ் போட்டுக்கொண்டுவிட்டால் போதும். மாஸ்க் தேவையில்லை. சமூக இடைவெளி தேவையில்லை. கை கழுவ தேவையில்லை அப்படித்தானே. பதில்: தடுப்பூசி முதல் டோஸ் போட்டு அடுத்த டோஸ் (கோவிஷீல்ட்) க்கு 45 நாட்கள் கழித்துத்தான் தடுப்பூசி வேலை செய்து , ஆண்ட்டிபாடிகள் உருவாக வாய்ப்பு இருக்கிறதாம். 28 நாட்கள் என்று சொன்னவர்கள் 45 என்று மாற்றியிருக்கிறார்கள். உருவாகும் வீதத்தின் அடிப்படையில் தான் சொல்கிறார்கள். எப்படிப்பார்த்தாலும் 28 நாட்கள் கழித்துத்தான் ஆண்ட்டிபாடி உருவாகும். அப்படி உருவாகும் நோய் எதிர்ப்ப...

##don'tjail-EleRivaldo

படம்
ஒருவர் ஒரு குற்றம் புரிகிறார் என்றால் என்ன செய்கிறோம். சிறையில் அடைக்கிறோம். எதற்காகச் சிறையில் அடைக்கிறோம். வரம்பு மீறியதற்காக ஒரு தண்டனை என்று அதைச் செய்கிறோம். சிறைப்படுத்துவது ஒரு தண்டனை என்ற புரிதல் இருக்கும் நாடு தான் நம்முடையது. ஆனால் யார் யாருடைய இடத்தில் வரம்பு மீறுவது என்பதில் அறம் இருக்கிறது தானே. நேற்று 18/3/21 'தி இந்து' இணைய தளத்தில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதில் 'ரிவால்டோ' என்று ஒரு யானையைப் பற்றி கூறியிருக்கிறார்கள். கொரோனா இரண்டாம் அலை மற்றும் தேர்தல் எனத் தற்சமயப் பிரச்சினைகளில் மக்கள் மும்மரமாய் இருக்கும்பொழுது நெடுநாள் பிரச்சினைகளைப் பேசுவது கவனத்தில் வராது தான். எத்தனை பேருக்கு 'ரிவால்டோ' பற்றி தெரியும் என்று தெரியாது. 'ரிவால்டோ' ஒன்றும் தெரியாத வெள்ளந்தி யானை. அவன் தும்பிக்கையில் இருக்கும் காயத்தோடு அவ்வப்போது முதுமலை சரணாலயத்தின் காட்டுப்பகுதியிலிருந்து  அருகிலிருக்கும் ஊருக்குள் வந்துபோகுபவன்.  அவனுக்கு 'ரிவால்டோ' என்ற பெயரை அவ்வூர் மக்களே வைத்திருக்கின்றனராம். அவனை யானைகளின் தெப்பக்காடு முகாமிற்கு கு...

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 9

 பழனிக்குமார் மதுரை விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 9 நான் வேலை பார்த்த நிறுவனம் மூடப்போகிற தருவாயில் இருந்தது. என் உடன் வேலைபார்த்தவர்கள் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்திலேயே தஞ்சம் அடைய நானும் என் பயோடேட்டாவுடன் ஒரு வருட அனுபவத்தைக் குறிப்பிட்டு மும்பைக்கு ஃபேக்ஸ் செய்துவிட்டு, தமிழ்நாட்டு ரீஜீனல் மேனேஜருக்கு அலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவரோ, மதுரையில் ஏற்கனவே இரு நபர்களை நியமித்துவிட்டோம். கோவைக்குப் போகிறாயா என்றார். முடியாது என்று மறுத்துவிட்டாலும் இரு நாட்கள் கழித்து மும்பையிலிருந்து ஃபோன்.  மூன்றாவது நபராக என்னை மதுரைக்குத் தேர்ந்தெடுத்து மும்பையில் பயிற்சி தந்தார்கள். பயிற்சி முடித்து நான் ட்ரெயின்ல் வந்துகொண்டிருக்கும்போது தான் தமிழ்நாட்டு மேனேஜருக்கு இந்தச் செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள்.  அப்படி, என் நியமிப்பில் ஆரம்பமாகியது எங்கள் ரீஜினல் மேனேஜருக்கும் ( தமிழ்நாடு) ஜோனல் மேனஜருக்கும் வாய்க்கால் தகராறு. ஜோனல் மேனேஜர் என்பவர் ஆந்திரா தமிழ்நாடு கேரளா க்கு மேலதிகாரி. மதுரை க்கென ஏரியா மேனேஜர் இல்லை என்பதால், ரீஜீனல் மேனேஜரே எங்களுக்கு வந்துகொண...

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8

  விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8 இன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கொரோனா தாக்கத்தால் மருத்துவத்துறையில் முன்னேற்றம் இருக்கிறது என்ற படிக்குப் பேசினார். மருந்துகள் எல்லாம் அதிகளவில் விற்கும் அல்லவா என்றும் கேட்டார். அதற்கான விளக்கத்தையும் என் வேலை எந்த அளவிற்கு ஆகியிருக்கிறது என்பதையும் சொன்னேன். அதன் சாராம்ஸம்... மருத்துவத்துறை சார் நோயும் வைரசும் பரவுவதால் உடனே அதில் மருந்துகளின் விற்பனை கூடுகிறது என்பது மேலோட்டமானக் கருத்து. பெரும் முதலாளிகளின் கம்பெனிகளுக்கு வேண்டுமானால் விற்பனை நடக்கலாம். முறையாய் மருத்துவர்களைப் பார்த்து அதன் மூலம் ஏதாவது ஒரு ஆர்டர் எடுக்கும் நிலையில் இருக்கும் என்னைப் போன்ற குறு கம்பெனிகளின் விற்பனை சரியவில்லை. படுத்தேவிட்டது என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு, ஒரு மருத்துவரை மாதம் ஒரு முறை பார்த்துக்கொண்டிருப்போம். அவரும், பல நாட்களாக வருகிறான், இவனுக்கு உதவலாம் என்ற மனிதத்துடன் அந்த விற்பனைப்பிரதிநிதியின் மருந்து தரமானத் தயாரிப்பா என்று பரிசோதித்து அவனுக்கு எழுத ஆரம்பிப்பார். இப்படியான விற்பனை நடக்குமளவிற்கு மருத்துவர்களைப் பார்த்...

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 6

பழனிக்குமார் மதுரை விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 6 அது ஒரு பிரச்சினை. என்ன பிரச்சினை என்பதைச் சொல்கிறேன். ஏன் பிரச்சினையானது என்பதையும் அடுத்துச் சொல்கிறேன்.  மருந்து விற்பனைப் பிரதிநிதிகளாகச் சேர்ந்து கிரிக்கெட் ஆடினார்கள். அதில் எதுவும் பிரச்சினை இல்லை. முதலில் ஐந்து நபர்கள் சேர்ந்தார்கள். பிறகு பத்தானது. பிறகு இருபது ஆனது.  ஒரு கட்டத்தில் இரண்டு மூன்று அணிகள் எனப் பிரிந்து ஆடினார்கள். அணியில் சேர்க்கமுடியாமல் நிறைய பிரதிநிதிகள் நின்று வேடிக்கை பார்த்தனர்.  ஏன் அணியில் சேர்க்கமுடியவில்லை என்று கேட்பீர்கள் தானே? ஆம், அந்தத் தெருவிற்குள் அப்படி எத்தனை பேரை சேர்த்துக்கொண்டு ஆடுவது?! என்னது தெருவா? என்பீர்கள் தானே? ஆம், இதற்கே இப்படி அதிர்ச்சி ஆனால் எப்படி, ஆடும் நேரம் எப்பொழுது தெரியுமா, நடு இரவு ஒரு மணிக்குத்தான் இந்த ஆட்டம் எல்லாம்.  ஒரு குறிப்பிட்ட நாளில் இத்தனை பேரும் குழுமி கிரிக்கெட் விளையாடினால் என்னாகும்? அப்படி ஒரு நாள் இரவு ஆடும்பொழுது பேட் செய்த ஒரு பிரதிநிதி மும்மரத்தில் பந்தை  ஓங்கித் தூக்கி  அடிக்க, அந்தத் தெருவில் இருந்த ஒரு வீட்டின...

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 5

 விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 5 வேலை பார்த்த கம்பெனியில் கமிஷன் முறைக்கு மாற்றியதும் ஏகப்பட்டக் குழப்பங்கள். சம்பளம், allowance எல்லாம் குறைந்தது. ஏற்கனவே அப்பாவின் ஒரு பழைய மாணவர், நீ மெடிக்கல் ரெப் ஆவதற்கு  LIC ஏஜெண்ட் ஆகியிருக்கலாம்ல என்றுவிட்டு போயிருந்தார். ஏனென்றால் அவர் ஒரு எல் ஐ சி ஏஜெண்ட். ஒருமுறை வீட்டுக்கு வந்தவர் சூரியவம்சம் படத்தில் சரத்குமார் பெரிய ஆள் ஆனதுபோல் அவர் வாழ்க்கை ஆனது என்று சொல்லிவிட்டுப்போனார். அவர் பேசி முடிக்கும்பொழுது எங்கள் அப்பாவின் முகத்தில் எல் ஐ சி யின் விளம்பரத்தின் கடைசியில் வரும் அந்த அரைவட்ட லோகோ சாயல் இருந்தது. ஆனாலும் இனி மேல் (2003ல்) எல் ஐ சிலாம் யார் போடுவா என்று எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இது பத்தாது என்று, அப்போதைக்கு கம்பெனியின் அனைத்து ரெப் களும் இன்னொரு பெரிய கம்பெனியின் புதிய டிவிஷன் லான்ச் க்குச் சேர்ந்தார்கள். அங்கு சேர்ந்த கோயம்புத்தூர் ரெப், நீயும் அவர் சேர்ந்திருக்கும் கம்பெனிக்கு அப்ளை பண்ணு என்றார். முதலில் அந்தக் கம்பெனியின் மேனேஜரின் நம்பர் வாங்கி அவரிடம் பேசு என்றார்கள். அவர் எண்ணை அழைத்துப் பேச, மதுரையி...