2013 எப்படி இருந்தது என்று நிறைய நண்பர்கள் போஸ்ட் செய்கிறார்கள். பொதுவாக வியாபாரத்துறையினருக்கு நிதியாண்டு தான் முக்கியமாய் இருக்கும். எனக்கும். ஏனென்றால் இரண்டு காரணங்கள். முதலாவதாக அலுவலக ரீதியாக புது ஆண்டு ஆரம்பம் என்பதால், இரண்டாவதாக இன்கிரீமெண்ட் என் ஊதியம் அதிகரிப்பது. பொத்தம்பொதுவாகப் பார்த்தால் ஊதிய விகிதம் மற்றும் பொருளாதார விகிதாச்சார அடிப்படையில் முந்தைய வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் நல்ல முன்னேற்றம் போல் தெரிந்தது. ஆனால் பெட்ரோல், காய்கறி மற்றும் ஆடை என இன்ன பிற செல்வுகளும் ஊதிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகி ஒரு சமத்துவத்தை கட்டி விட்டன. ஆதலாலேயே Q.O.L என்றழைக்க்ப்படுகிற வாழ்க்கைத்தரம் உயரவில்லை. ஊதிய உயர்வு மட்டுமே நமது பொருளாதார முன்னேற்றமாய் கருதப்படாது. வருடத்தின் அல்லது ஒரு மாதத்தின் வரவு செலவு பேலண்ஸ் சீட் செய்து பார்த்தோம் என்றால் வரும் விடை சிவப்பு விளக்கில் இருக்குமா இல்லை பச்சை விளக்கில் இருக்குமா என்பதே பொருளாதார நிலை. சென்ற வருடத்தைப் பற்றி பேச ஆரம்பித்ததும் முதன் முதலாகவே பொருளாதாரத்தைப் பற்றி எழுதுகிறான். பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.